டிராக்டர் டிரெய்லர் கழன்று சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் புறவழிச் சாலையில் உள்ள தோப்பில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளிகள் 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தோப்பில் இருந்த புளியம்பழங்களை சாக்கு மூட்டைகளில் கட்டிக்கொண்டு டிராக்டர் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த டிராக்டரை அபினேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கம்பம் பாவலர் படிப்பகம் அருகே உள்ள சேனை ஓடையில் சென்றபோது திடீரென டிராக்டரின் டிரெய்லர் […]
Tag: 11 பேர் படுகாயம்
தர்மபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்துள்ள புதூர் அருகே பெங்களூர்- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது. அந்த கோர விபத்தில் திருச்சியை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . அதுமட்டுமல்லாமல் 11 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
வேளாங்கண்ணி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் வேனில் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் நாகூர் தர்காவுக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியே வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தனர் . அப்போது கருவேலங்கடை அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன் சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் […]
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு உணவகத்தில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது. இந்தச் சிலிண்டர் விபத்தில் உணவகத்தின் உரிமையாளர் பப்பு குப்தா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி காவல் துறை தரப்பில் கூறுகையில், “இந்த விபத்தில் காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக உள்ளூர் […]