தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல்நிடவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, […]
Tag: 12 மாவட்டங்கள்
கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பருவ மழையால் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பல நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று கேரளாவில் நான்கு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. […]
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது. இதனால் இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் […]
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சை, அரியலூர், திருச்சி, கரூர், குமரி, நெல்லை,திண்டுக்கல் மட்டும் தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் […]
கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மலைப்பாங்கான பகுதி களுக்கும் கடலலை அதிகமுள்ள கடலோரப் பகுதிகளுக்கும் மக்கள் யாரும் செல்ல […]
கேரளாவில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கேரள மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை […]
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்ககடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று மணி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. நாகை விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து […]
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று பலத்த கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் […]