ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிற்கு அருகில் கோஸ்ட்ரோமா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அந்த விடுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி விடுதி முழுவதும் புகைமண்டலமானது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடும் சிரமப்பட்டனர். இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் மீட்டுக் குழுவினர் சம்பவ […]
Tag: 13 பேர் பலி
நேபாளத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 13 நபர்கள் பலியானதாகவும் 10 நபர்கள் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அச்சாம் என்னும் மாவட்டத்தில் 13 நபர்கள் பலியாகினர். மேலும் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. 7 நபர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். எனவே, அவர்களை மீட்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தற்போது, மாயமானவர்களில் 10 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 10 பேரை கண்டுபிடிக்க மீட்பு படையினர், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில் இருந்து 18 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ரகிம் யார் கான் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்திசையில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அங்கிருந்தவர்கள் சேர்த்தனர். இவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் […]
தாய்லாந்து நாட்டின் ஒரு மதுபான விடுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 13 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து நாட்டின் சோன்புரி மாகாணத்தில் இருக்கும் மவுண்டன் பி பப் என்னும் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய மதுபான விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில், 13 நபர்கள் தீயில் கருகி பரிதாபமாக பலியாகிநற். மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். தீ பற்றி எரிந்தவுடன் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தீக்காயங்களுடன் தப்பி ஓடி […]
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் பலூசிதான், பஞ்சாப், சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காஜி கான் சாகிவால் மற்றும் ஜாம்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முன் தினம் கன மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அங்குள்ள சுலைமான் மலைத்தொடரில் கொட்டிதீர்த்த கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க கூடிய உணவு பொருட்களில் நெருக்கடி ஏற்படும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல், எண்ணெய் மாவு பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரியு போல் நகரில் ரஷியாவின் வசம் சிக்காமல் இருந்த உக்ரைன் படைவீரர்கள் 2000 பேர் சரணடைந்துள்ளனர் என்று ரஷ்ய ராணுவ மந்திரி செர்ஜி ஷெய்கு தெரிவித்துள்ளார். இந்த […]
அசாம் மாநிலத்தில் விஷக் காளான் சாப்பிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விஷக் காளான்களை சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 9 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில் 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் காளான் சீசன் என்பதால் அங்கு […]
கொலம்பியாவில் பலத்த மழை பெய்ததில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது. கொலம்பிய நாட்டில் ஆண்டியோக்வியா என்ற மாகாணத்தில் பலத்த மழை பெய்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் அங்கிருந்த சுரங்க முகாம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சூழப்பட்டது. தற்போது வரை, பலத்த மழையில் 13 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீட்பு குழுவினர், மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் ஆண்டியோக்வியா மாகாணத்தில் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு இன்று காலை 11.47 மணி அளவில் Mi-17 v5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மைதானத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர். அப்போது மதியம் 12.20மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேரில் 13 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு 13 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில், கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை சுமார் 3676 மீட்டர் உயரம் உடையது. இந்த எரிமலையிலிருந்து நேற்று லேசான புகை உருவாகி, அதனைத் தொடர்ந்து, திடீரென்று எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சாம்பல் புகை உருவானது. மேலும், எரிமலை வெடித்த போது அதன் அருகே இருந்த குடியிருப்புகள் பாதிப்படைந்தது. மேலும் ஒரு பாலம் சேதமடைந்திருக்கிறது. இதில், 13 நபர்கள் […]
நாகலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தால் இணையச்சேவை முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். ஆனால், பாதுகாப்பு படை அதிகாரிகள், தீவிரவாதிகள் என்று கருதி பொதுமக்கள் மீது தவறுதலாக துப்பாக்கிசூடு தாக்குதல், நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் பொது மக்கள் பலியான சம்பவம், அங்கு பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாகலாந்தில் இணையச்சேவை முடக்கப்பட்டிருப்பதாக […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதாவில் உள்ள பைலா கிராமத்திலிருந்து சிறியரக பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. தியுதி என்ற இடத்திற்கு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 4 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த உள்ளூர் […]
சிரியாவில் நாடாளுமன்றம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் சாலை ஓரத்தில் மறைத்து வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் இராணுவ பேருந்து ஒன்று சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் இன்று காலை பரபரப்பான போக்குவரத்து மிகுந்த பாலம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. அதிலும் […]
உலக சுகாதார மையம் நிமிடத்திற்கு 13 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் நிமிடத்திற்கு 13 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்த அறிக்கையில் உலக சுகாதார மையம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் உணவு, நிதி, போக்குவரத்து உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் ஆரோக்கியத்தை பேணுவதற்காக மாற்றத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று WHO கூறியுள்ளது.
சிரியாவில் எதிர்பாராதாவிதமாக மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள், நோயாளிகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் நீண்ட காலமாக நடந்து வரும் போரால் குழந்தைகள், பொதுமக்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் பலியாகின்றனர். மேலும் அந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மீது கடந்த 10 வருடங்களில் மட்டுமே 400-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது போன்ற தாக்குதல்களை அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற […]
மத்திய இலங்கை கொழும்பில் பேருந்து ஒன்று செங்குத்தாக கவிழ்ந்த விபத்து உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இலங்கை கொழும்பிலிருந்து புறப்பட்ட பேருந்து பசார நகர் அருகே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் கவிழ்ந்து விழுந்து கடும் விபத்துக்குள்ளானதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இச்சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது ஓட்டுநரின் அலட்சியமே இந்த கோர விபத்துக்கு காரணம் என்றும் இதில் ஓட்டுநர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார் என காவல்துறை […]
குஜராத் மாநிலத்தில் லாரி ஏறியதில் சாலையோர படுத்து தூங்கி அப்பாவி தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத் அருகே உள்ள கோசம்ப என்ற இடத்தில் சாலையோரம் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாரி நிலைதடுமாறி தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் […]
சீனாவில் உள்ள கேளிக்கை பூங்காவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 13 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தேசிய தினம் நேற்று முன்தினம் சீனா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதனால் நேற்று முன்தினம் தொடங்கி எட்டு நாட்கள் வரை தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது. கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிப்படைந்து உள்ள பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில் இந்த விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. […]
பெரு நாட்டில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பெரு நாடும் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டிலுள்ள இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதித்துள்ளது. இருந்தாலும் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற இரவு நேர விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதனால் கொரோனாவின் […]
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை ஒடுக்குவதற்கு அந்நாட்டு ராணுவம் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள பல மாகாணங்களில் பொது மக்களில் ஒரு பிரிவினர் போராளிகளாக மாறி அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக தலிபான் பயங்கரவாதிகளிடம் போராடி வருகின்றனர். ஆயுதமேந்திய அரசுசார் போராளிகள் மற்றும் […]
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமன்றி காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் அப்பாவி பழங்குடி இன மக்களை குறிவைத்தும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் வட மத்திய மாகாணமான பியூனேவில் பழங்குடியின மக்கள் வசிக்கின்ற ஒரு கிராமத்தில் புகுந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். […]