Categories
உலக செய்திகள்

“போலந்தில் சூறாவளியால் சேதமடைந்த 930 கட்டிடங்கள்!”.. 4 பேர் உயிரிழப்பு..!!

போலந்து நாட்டில் சூறாவளி தாக்கியதில் 900-த்திற்கும் அதிகமான கட்டிடங்கள் பாதிப்படைந்ததோடு 4 பேர் உயிரிழந்துள்ளனர். போலந்து நாட்டின் மேற்குப் பகுதியிலும் மத்திய பகுதிகளிலும் சூறைக் காற்று பலமாக வீசியிருக்கிறது. இதில் அதிகமான மரங்கள் சாலைகளில் சாய்ந்துவிட்டது. இதனால் போக்குவரத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் தலைநகரான வார்சாவில் ஒரு வாகனத்தின் மேல் மரம் சாய்ந்ததில், வாகனத்திலிருந்த இரண்டு நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும், இந்த சூறாவளி ஏற்பட்டதில் மொத்தமாக 4 நபர்கள் மரணமடைந்ததோடு, 18 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |