வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்மருதூர் கிராமத்தில் விவசாயியான பக்கிரி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு(65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது 3-வது மகன் மணிகண்டன் என்பவர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த வீட்டிற்குள் அன்னபட்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
Tag: 2 பெண்கள் பலி
எகிப்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களை சுறா தாக்கி உயிரிழந்துள்ளனர். எகிப்து நாட்டில் ஹுர்ஹ்டா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள செங்கடலில் ஷஹல் ஹஹ்ரீஸ் எனும் இடத்தில் விடுமுறை நாளான நேற்று நூற்றுக்கணக்கானோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது 600 மீட்டர் தொலைவில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களை சுறா தாக்கியது. இந்த தாக்குதலில் ஆஸ்திரேலியா மற்றும் ருமேனியா நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஆட்டோவில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர். இந்த ஆட்டோவை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் புறையூர் வளைவில் சென்று கொண்டிருந்தபோது காயல்பட்டினம் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஆட்டோ மீது […]