தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மணிமாலா என்ற மனைவியும் 1 மகன் மற்றும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சத்யராஜ் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் மணிமாலா வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]
Tag: 2 வயது குழந்தை பலி
கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோடல்பட்டி பகுதியில் மணிவண்ணன்-ஓவியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதுடைய கனியாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஓவியா திம்மாபுரம் பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அணை கால்வாயில் ஓவியா துணி துவைத்த போது, குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை கால்வாயில் தவறி விழுந்தது. […]
நிலைத்தடுமாறி வாகனம் கவிழ்ந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் சிபுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷனவ் (2) என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷனவ் பாட்டி பிரேமலதாவுடன் ஆட்டோவில் திங்கள்சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். இந்த ஆட்டோவை வினுக்குமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த ஆட்டோ பூச்சாஸ்தான்விளை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கும், பிரேமலதாவுக்கு லேசான […]
வலிப்பு நோய் காரணமாக 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நங்காத்தூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மீரா என்ற மனைவியும் அக்ஷயராஜ் [2] என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மீரா குழந்தையுடன் தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவருடைய குழந்தைக்கு பிறந்தது முதல் வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் […]
வீட்டின் சுவர்இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கணக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சிவகுமார்- ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் ஹரிகிருஷ்ணன் என்ற குழந்தை உள்ளது. வழக்கம் போல் ஹரிகிருஷ்ணன் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுவனை உடனடியாக மீட்டு […]
விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பந்து வழுக்கியதால் அலமாரியில் மோதி தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பிரபு-விஜயலட்சுமி. பிரபு சலவை தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் அனன்யாஸ்ரீ என்ற இரண்டு வயது மகளும் இருந்தனர். அனன்யாஸ்ரீ நேற்று முன்தினம் இரவு வீட்டில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் . அப்போது பந்தை ஓடிச்சென்று எடுக்க முயன்றபோது பந்தின் மீது மிதித்தாள் . […]