1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கியது. திருமண வாழ்க்கையை தொடங்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால், சிறுமி நீதிமன்றத்தை நாடினார். வியாழக்கிழமை, குடும்ப நீதிமன்றத்தின் தலைமை அதிகாரி பிரதீப் குமார் மோடி, திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். […]
Tag: 20 ஆண்டுகள்
சீனாவை சேர்ந்த 33 வயதான ஒரு நபருக்கு 20 ஆண்டுகளாக மாதவிடாய் பிரச்சனை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவதாக கூறி மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் பலகட்ட சோதனை செய்து பின்னர் குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் முடிவில் உயிரியல் ரீதியாக அவர் பெண்ணாக இருக்கிறார் என்று அதிர்ச்சி தகவல் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது. […]
ஆஸ்திரேலியாவில் 20 வருடமாக இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் 20 வருடங்களாக இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதமானது உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியல் துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரே ஆண்டில் பணவீக்கம் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை , புதிய குடியிருப்பு கட்டிடங்களின் விலை மற்றும் கல்வி கட்டணம் போன்ற அன்றாட விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள […]
அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்று ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்ததாவது: “கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என தத்துவஞானி அரவிந்தர் கூறியுள்ளார். இந்தியா குறித்து அரவிந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தா கூறியதில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நமது இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைவதற்கு 20 முதல் […]
அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தன்னுடைய பழைய நினைவுகளை இயக்குனர் தங்கர்பச்சன் பகிர்ந்துள்ளார். 2002ஆம் ஆண்டு வெளியான அழகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தங்கர் பச்சான். மேலும் இவர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், அம்மாவின் கைப்பேசி, மெரின் ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துமுள்ளார். இந்நிலையில் தங்கர் பச்சான் இயக்கிய அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். அழகிப் […]
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு 1,800 கிலோ தங்கம், 4800 கிலோ வெள்ளி, 2000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்று காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில். இந்த கோயிலில் கடந்த 20 ஆண்டுகளில் கிடைத்துள்ள நன்கொடை குறித்து சமூக செயற்பாட்டாளர் ஹேமந்த் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தற்போது பதில் […]
ராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சமூக விலகலை பின்பற்றாமல் ஏராளமானோர் குவிந்து மீன் பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கொழுந்துறை கிராமத்தில் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய், குளங்கள், ஊரணிகள், பண்ணைக்குட்டைகள் ஆகியவைகளில் நீர் நிரம்பி வழிந்தனர். கண்மாய் மற்றும் குளங்களில் அதிக அளவிலான மீன்கள் வரத்து இருந்ததால், கிராம மக்கள் அவற்றை பாதுகாத்து வந்தனர். தற்போது தண்ணீர் குறைந்து விட்டதால், மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. அதற்கு வந்திருந்த மக்கள் சமூக […]