இந்தோனேசிய நாட்டில் நிலநடுக்கம் உருவானதில் 20 நபர்கள் பலியானதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதில் மக்கள் பயத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 20 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் தடைப்பட்டிருப்பதால் அதிகமான […]
Tag: 20 பேர் பலி
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் வளைவுகள் உள்ள பகுதி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. […]
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அங்கு தென்கிழக்கு உள்ள ஓயோ மாகாணத்தின் இபரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் மறு புறம் வேகமாக வந்து கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரும் பேருந்தும் தீப்பிடித்து எறிய தொடங்கியது. அதனால் கார் மற்றும் பேருந்துக்குள் பலரும் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு […]
பஞ்சாப் மாகாணத்தில் பேருந்தும் டேங்கர் லாரியும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 20 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று பேருந்தும் டேங்கர் லாரியும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். லாகூரிலிருந்து சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் நெடுஞ்சாலையில், அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தையடுத்து நெடுஞ்சாலையில் பல மணி […]
தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உகாண்டாவின் மேற்கு பகுதியில் போர்டல் என்ற நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து அந்நாட்டின் தலைநகரான கம்பாலாவுக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் போர்டல் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிக்கெட்டு ஓடியது. மேலும் பஸ்சில் இருந்த […]
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சட்டதிட்டங்கள் மிகக் கடுமையாக மாற்றப்பட்டன. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தற்போது வரை ஆண்கள் மட்டுமே பள்ளி கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இதனையடுத்து நேற்று காலை மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் சாஹித் உயர்நிலைப்பள்ளியில் அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தலிபான் படைகள் சுற்று வளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர […]
அசாம் மாநிலம், முழுவதும் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை கழகத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்ததாவது: “கடந்த 14ம் தேதி முதல் மூன்று நாட்களில் 1410 கிராமங்களில், 22 மாவட்டங்களில் புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. […]
மடகாஸ்கர் நாட்டில் சூறாவளி உருவாகி ஒரே நாளில் 20 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகாஸ்கரின் வடக்கு பகுதியில் இருக்கும் மனன்ஜாரி என்ற நகரத்திலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பத்சிராய் என்னும் சூறாவளி ஏற்பட்டுள்ளது. மேலும் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதியை நோக்கி இந்த சூறாவளி கடந்ததை தொடர்ந்து, அந்நகரில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பலத்த மழை, நிலச்சரிவு ஏற்பட்டதோடு […]
சோமாலியாவில் இரு அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோமாலியா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தேசிய ராணுவ படையின் ஆதரவு பெற்ற கால்முடக் மாநில படை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்முடக் படைகள் மற்றும் இஸ்லாமிய குழுக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட 20 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலின் போது 40-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள […]
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் 2015ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று விட்டனர். இந்நிலையில் புர்கினா பாசோவின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற […]