Categories
உலக செய்திகள்

இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற முனைப்பு… துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கிடையே போர் பதற்றம்..!!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் முனைப்பு காட்டுவதால் போர் பதற்றம் நிலவுகிறது.  சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயற்பட்டுவரும் குர்திஷ் போராளிகள் குழுக்கள் மீது ரஷ்யா உதவியுடன் சிரியா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இதனிடையே இட்லிப் மாகாணத்தில் இருக்கும் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகள் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி, அத்துமீறி சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய போராளிகள் – 2 பேர் உடல்கருகி பலி.!

சிரியாவில் அரசுப் படையின் ஹெலிகாப்டரை போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர் ஓன்று நேற்று இட்லிப் நகரின் மேற்பரப்பில் பறந்து  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் ஹெலிகாப்டரை குறி வைத்து தாக்கினர்.இதில் தாக்குதலுக்கு உள்ளான அந்த ஹெலிகாப்டர் தீ பற்றி எறிந்தவாறு கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் வானத்தை சுற்றித் திரிந்தது. பின்னர் சிறு சிறு துண்டுகளாக நொறுங்கிய அந்த ஹெலிகாப்டர் கொளுந்து […]

Categories
உலக செய்திகள்

டெக்ஸாஸில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை – காவல்துறை விசாரணை..!!

சான் அன்டோனியோவில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் டெக்ஸாஸின், சான் ஆன்டோனியா பகுதிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு அருகே நேற்றிரவு எட்டு மணியளவில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயும், மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக டெக்ஸாஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் பதிலடி… 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

 பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவம் திவா பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டோல் கேட்டை தகர்த்தெறிந்த லாரி… இருவர் பலியான சோகம்… வைரலாகும் சிசிடிவி காட்சி.!!

கிருஷ்ணகிரியில் தறிக்கெட்டு ஓடிய லாரி சுங்கச் சாவடி வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள நகர நெடுஞ்சாலை பகுதியையொட்டி சுங்கச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில் இன்று மதியம் வழக்கம் போல் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து சுங்கசாவடி வசூல் மையம், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவர் […]

Categories
உலக செய்திகள்

கலிஃபோர்னியாவில் அதிர்ச்சி… பிறந்தநாள் பரிசாக துப்பாக்கிச் சூடு… 2 மாணவர்கள் மரணம்..!

கலிஃபோர்னியா மாகாணத்தின் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சவுகஸ் (Saugus) மேல்நிலைப்பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய 16 வயது மாணவன், திடீரென்று தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருகிலிருந்த மாணவர்களை நோக்கிச் சுடத்தொடங்கினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு 16 வயது மாணவியும், ஒரு 14 வயது மாணவனும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது பேருந்து மோதி விபத்து…. இருவர் உயிரிழந்த சோகம்..!!

பீகாரில் 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள முசாபர்பூரிலிருந்து சிலிகுரிக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து டுமர் கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை-31 அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தந்த நிலையில், காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே சோகம்”…. சாலை விபத்தில் தந்தை, மகள் பரிதாப பலி.!!

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மில்டன் ஜெயக்குமார் என்பவர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரும் இவரது மகளான ரெனி லாரோசும்  காரில் சேலத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்த நிலையில்  கேரளாவிலிருந்து வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து… பெண் உட்பட 2 பேர் பலி..!!

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.  டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சிலம்புரில்  4 மாடி கட்டிடம் ஒன்று  கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெறும் போது திடீரென கண் இமைக்கும் நொடியில் கட்டிடம்  இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர்  மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அவர்கள் ஹீனா என்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருப்போரூரில் “ராக்கெட் லாஞ்சர்” வெடித்து இருவர் பலி… இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை..!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில்  உள்ள கங்கையம்மன் கோயில் குளம் அருகே  நேற்று முன்தினம் இளைஞர்கள் சிலர் சுத்தம் செய்யும்  போது கோயிலின் மேல் தளத்தில் பை ஒன்றை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் காயமடைந்த 5 பேரும்  செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் “ஜோடி மரணம்” குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் திருமணம் செய்த அடுத்த நிமிடமே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஹார்லி மோர்கன் (19 வயது) தனது தோழியான பவுட் ரியாக்ஸை (20 வயது ) காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் திருமணம் செய்து கொண்டு, பின் அதற்குரிய பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

“சாலையில் நின்ற பைக்கில் குண்டு வெடிப்பு” பாகிஸ்தானில் பரிதாபம் … 2 பேர் பலி …!!

பாகிஸ்தானில் சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது இருந்த குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பலூசிஸ்தான் பகுதியில் உள்ள குவெட்டா நகரில் கிழக்கு பைபாஸ் சாலையில் மருந்து கடை ஒன்று இயங்கி வருகின்றது. சம்பவத்தன்று இந்த கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களை தாக்க வேண்டுமென்று வெடிக்கச் செய்த இந்த குண்டு வெடிப்பால் 25 […]

Categories
மாநில செய்திகள்

குடிபோதையில் கார் ஓடி விபத்து…. மூதாட்டி உட்பட 2 பேர் பரிதாப பலி…!!

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சென்னை வில்லிவாக்கத்தில் குடி போதையில் ஒருவர் கார் ஓட்டியதில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கார் மோதியதில் மூதாட்டி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மது போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]

Categories

Tech |