Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 பேரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள்..!!

புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வந்த இருவரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர்.  ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஹதீர் கோலி மற்றும் மன்சூர் அகமது கோலி ஆகியோர் டிரால் (Tral) பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 20- ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் லாச்சி டாப் பெஹாக் காட்டில் (Lachi Top Behak forest) இருவரையும்  போலீசார் சடலமாக மீட்டனர். பின்னர் இவர்களது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாளில் 2 பேரை கொன்ற காட்டு யானை…. பீதியில் மக்கள்..!!

கோவை அருகே 2 நாட்களில் 2 பேரை யானை மிதித்து கொன்றுவிட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த காட்டுயானை அவர்களை விரட்டியது. இதில் பிரேம் கார்த்தி என்பவர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டியுள்ளனர். இதேபோல நேற்று முன்தினம் பன்னிமடை சஞ்சீவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஆந்திர பெண்கள் 2 பேர் பேருந்து மோதி பலி..!!

சென்னை  நந்தனம் அருகே  மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.  ஆந்திராவை சேர்ந்த சுதா, நாகலெட்சுமி, பவானி ஆகிய மூவரும் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து,  எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று காலை 9 மணி அளவில் ஒரே பைக்கில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்கள் பேருந்தை […]

Categories
உலக செய்திகள்

பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு….. சம்பவ இடத்தில் 2 பேர் பலி!!

அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில்  துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாட்டில் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு என சர்வ சாதாரணமாக துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அமெரிக்காவின்  சார்லோட்டேவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் நேற்று கடைசிநாள் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது ஒருவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால்  சரமாரியாகச் சுட்டான். இதில் 2 […]

Categories

Tech |