உத்திரபிரதேசத்தில் 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இருந்து டெல்லி நோக்கி ஒரு தனியார் சொகுசுப் பேருந்து நேற்று இரவு 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்தப் பேருந்து இன்று அதிகாலை அலிகார் என்ற மாவட்டத்தில் உள்ள தபால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து […]
Tag: 3 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மூன்று பேரை சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள சுகன் ஜைனபோரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் இன்று காலை அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் […]
குஜராத் மாநிலத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் புதிதாக 3 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.அந்த கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் பத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.மேலும் சம்பவத்தின்போது கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு […]
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் சாலையோரம் கண்ணிவெடிகளை பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர். இன்று காலை அப்பகுதியில் வழியாக பொதுமக்கள் நடந்து சென்ற சமயத்தில், திடீரென அந்த கண்ணி வெடிகள் வெடித்து சிதறியதால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதல் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர மீட்பு […]
ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கும், தாலிபான் நாட்டிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும் இருநாடுகளும் சமாதான நிலையை அடைய பல முறை திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பால்க் மாவட்டத்திலுள்ள ராணுவப் படையினரை குறிபார்த்து தாலிபான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை ஒரு காரில் குண்டு வைத்து வெடிக்கச் செய்து நடத்தியுள்ளது. நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர் என ராணுவ வட்டாரங்கள் […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். அதே நேரம் பாதுகாப்பு படையினரை குறி பார்த்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காவல்துறையினர் […]
அமெரிக்காவில் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள உட்டா மாகாணத்தில் மேற்கு ஜோர்டான் நகரில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து பி.ஏ.32 ரக சிறிய விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி, 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தமாக 6 பேர் இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதியின் மேலே பறந்து கொண்டிருக்கும்போது விமானம் திடீரென […]