நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மசோதா ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.. அதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே ரத்து செய்யப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.. இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் […]
Tag: 3 வேளாண் சட்டங்கள்
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் உரையாற்றும்போது, 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்றும், வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.. எனவே போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகின்ற 29ஆம் தேதி நடைபெற உள்ளது.. இந்நிலையில் திமுக தலைவர் முக […]
3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது, நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் […]
எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை, விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது, நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். […]
2014- ல் பதவி ஏற்றது முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாயிகளின் வேதனைகளை தான் அறிந்ததால் தான் அவர்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி […]
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு […]