ஈரானில் ஹிஜாப் கெடுபிடிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி மாசா என்ற 22 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது ஈரானிய பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்கள் தலைமுடியை கத்தரித்தும் அரசிற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். […]
Tag: 31 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கிழக்கு பகுதியில் பர்வான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு […]
கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டின் தென்கிழக்கில் போர்ட் ஹர்கோர்ட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் கிங்ஸ் அசெம்பிளி என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என்ற புரளியால் சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்து கொண்டு சென்றுள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கி கொண்டனர். […]