சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அனியாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 36 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Tag: 36 பேர் பலி
நைஜீரியாவில் அடுக்குமாடி கட்டிடம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் உள்ள இயோகி மாவட்டத்தில் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிட பணியில் வேலை பார்த்து கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் […]
கிழக்கு தைவானில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டைதுங் நோக்கி பயணித்த அந்த ரயில் ஒரு சுரங்கப் பாதையின் தண்டவாளத்தில் இருந்து இறங்கி சுரங்கப் பாதையும் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அந்தக் கோர விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 70 […]