காட்டுதீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோன்று தற்போதும் வடபகுதியில் உள்ள 8 மாகாணங்களில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உள்துறை மந்திரி கமெல் பெல்ஜாத் கூறியுள்ளார். இந்நிலையில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். அதோடு ஹெலிகாப்டர் மூலமாகவும் […]
Tag: 37 பேர் பலி
இருதரப்பினருக்கு இடைய நடந்த தாக்குதலில் 37 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஹூடனா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மடாமி கிராமத்தில் இருக்கும் பழங்குடியினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே சமீப காலமாக மோதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மற்றொருவரின் கிராமத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவங்கள் அருகிலுள்ள […]
நைஜர் நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 37 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜர் நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா உட்பட பல தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள், அரசபடை மற்றும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நைஜரின் டில்லெப்ரி மாகாணத்தில் இருக்கும் டேரி டே கிராமத்தினுள் தீவிரவாதிகள், துப்பாக்கிகளுடன் நேற்று புகுந்துள்ளார்கள். அதன்பின்பு, அவர்கள் அங்கிருந்த மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 37 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். […]