Categories
உலக செய்திகள்

“என்னடா இது…?” பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் ‘ஸ்டெல்த்’….!!

பிரிட்டனில் ஒமிக்ரானிலிருந்து உருமாற்றமடைந்த மற்றொரு வகை வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய வகை தொடர்பில் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா மாறுபாடு, பிஏ2 அல்லது ஸ்டெல்த் என்று  அழைக்கப்படுகிறது. எனினும் தற்போது வரை இந்த வகை கொரோனாவை ஆராய்ச்சியாளர்கள் கவலைக்குரியதாக வகைப்படுத்தவில்லை. இந்நிலையில், பிரிட்டனில் மட்டும் சுமார் 426 நபர்களுக்கு இந்த புதிய வகை கொரோனா  கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |