Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததால்… 5 பேர் பலி… திருவையாறு அருகே ஏற்பட்ட சோகம்..!!

திருவையாறு அருகே பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவையாறு அருகே தனியார் பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது வரகூர் கிராமத்தின் அருகே பேருந்து ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து இறக்கியுள்ளார் அப்போது கனமழையின் காரணமாக பழுதடைய மின்சாரம் கம்பி பேருந்தில் இருந்தவர்கள் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் பெண் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… 5 பேர் பலி… 35 பேர் படுகாயம்…!!!

மராட்டிய மாநிலத்தில் 30 அடி பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள நந்தூர்பர் மாவட்டம் மால்காபூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து அதிகாலை 3 மணி அளவில் கொண்டாய் பரி மலைப் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் முந்துவதற்கு முயற்சி செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

வீட்டினுள் திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்… உள்ளே சென்று பார்த்த போலீஸார்… காத்திருந்த அதிர்ச்சி…!!!

கனடாவில் உள்ள ஒரு வீட்டில் திடீரென நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் இருக்கின்ற ஒரு வீட்டில் நேற்று முன்தினம் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி சூடு நடந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரு பெண் உட்பட 5 பேர் ரத்த […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்… கண்ணிவெடித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு சாதகமாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்தப் போரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அந்த நாட்டின் ஹர் மாகாணம் டாலெட் யார் மாவட்டத்தில் இருக்கின்ற சாலைப் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… 5 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் உரூஸ்கான் மாகாணத்தில் தரீன்கோட் நகரில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு தலீபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் மேற்கொண்டனர். அந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நீண்ட ஆண்டுகளாக அரசிற்கு எதிரான போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

நேபாளம் நிலச்சரிவில் 38 பேர் மாயம்…5 பேர் பலி…8 பேர் படுகாயம்…

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன 38 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால்  வாகன போக்குவரத்து முழுவதுமாக பாதிப்பு அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள சிந்துபால்சோக் நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநில பேருந்தில் திடீர் தீ விபத்து…. 5 பேர் உடல் கருகி பலி… !!

கர்நாடக மாநிலத்தில்  இன்று அதிகாலை பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஜயபுராவில் இருந்து பெங்களூரு வரை சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த பேருந்தில் 32 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 4ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹிரியூர் தாலுக்காவை அடுத்த இடத்தில் செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறே தீ விபத்து ஏற்பட காரணம் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் திடீர் குண்டுவெடிப்பு… 5 பேர் பலி… 10 பேர் படுகாயம்..!!

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பாலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரத்தின் ஹாஜி நிடா சந்தையில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் கூறும்போது, “தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த பிரிவினைவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 […]

Categories

Tech |