Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5G சேவை -பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் …!!

இந்தியாவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5g சேவை விநியோகம் தொடங்குகின்றது. இந்தியாவில் 5g சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள மாநகரங்களில் 5 ஜி சேவை கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு வருகிறது ஜியோ 5G…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

சென்னை உள்ளிட்ட 13 மெட்ரோ நகரங்களில் 5G சோதனை தளங்களை ஜியோ நிறுவனம் நிறுவி உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 5G அலைக்கற்றைக்கான ஏலம் நடத்தப்பட்டு, இந்த வருடம் இறுதிக்குள் சேவை தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜியோ 5G நெட்வொர்க்கின் வேகத்தை ரெட்மி, ஓப்போ, இன்பினிக்ஸ் போன்ற நிறுவனத்தின் ஸ்மார்ட்போனில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

விமான போக்குவரத்தை அதிரவைக்கும் 5G சேவை…. லீக்கான தகவல்….!!!!

உலகம் முழுவதும் 5G சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதன் முறையாக அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக விமான விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய நாள் அமெரிக்காவிற்கு வரக்கூடிய இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது 5G அலைக்கற்றையால் விமானங்களில் கருவிகளின் இயக்கத்தை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதன் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

5G மொபைல் சேவையால் பிரச்சனை…. அமெரிக்க விமானங்கள் ரத்து… அதிரடியாக அறிவித்த துபாய்…!!!

அமெரிக்க நாட்டில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் புதிய சி பேண்ட் 5-ஜி சேவை விமானங்களின் பயண உயரத்தை காண்பிக்கும் அல்டி மீட்டர் கருவிக்கு பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, மியாமி, ஆர்லண்டோ, டல்லாஸ், பாஸ்டன் மற்றும் சியாட்டில் போன்ற பல நகர்களின் விமான சேவை இதன் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக துபாய்க்குரிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எனினும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் விமானங்கள் செயல்படும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அடேங்கப்பா இவ்ளோ கம்மி விலையில் 5g ஸ்மார்ட்போனா ?

நோக்கியா நிறுவனம் தனது  5ஜி ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது . நோக்கியா நிறுவனத்தின்  5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனமானது உருவாக்கி வருகிறது. இந்த  5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படலாம்  என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்துள்ளார். தற்போது ,பல்வேறு  ஸ்மார்டபோன் நிறுவனங்கள்  புதியதாக 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் நிலையில், ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் ,  அமெரிக்கா, சீனா, […]

Categories
டெக்னாலஜி

“5G தொழில்நுட்பம்” விரைவில் அறிமுகப்படுத்தும் சீனா….!!

உலகின் மிக வேகமான இணையதள சேவையான 5ஜி தொழில் நுட்பத்தை சீனா அறிமுகம் செய்ய உள்ளது. சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஹீவாவி நிறுவனம் விரைவில் 5G தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக 5G செல்போன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த 5G  தொழில் நுட்பமானது கார்களில் பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பமானது கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Balong 5000 5G சிப்பினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளதாகும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஹீவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |