பாகிஸ்தானில் கன்டெய்னரை திறக்கும் போது விஷ வாயு தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருக்கும் கேமாரி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்குக் கப்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரம்பிய கன்டெய்னரை ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அதை தொடர்ந்து அந்த கன்டெய்னர் அருகில் இருக்கும் ஒரு சந்தைக்கு எடுத்து கொண்டு செல்லப்பட்டது. சந்தைக்கு வந்ததும், அங்கே காய்கறிகளை தனி தனியாக […]
Tag: #5killed
அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கொன்றவழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆபேல் ஓச்சோவா (Abel Ochoa) என்ற நபர் ஒருவர் கொகைன் போதை மருந்துக்கு அடிமையானதால் தனது மனைவி மற்றும் 2 மகள்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று விட்டான். மேலும் மாமனார், மைத்துனி ஆகியோரையும் கொலை செய்தான். இதையடுத்து அவன் மனைவியின் காரில் தப்பிச் சென்று கொண்டிருந்தான். அப்போது வழிமறித்த […]
அமெரிக்காவின் டெக்சாஸில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் உள்ள மேற்கு டெக்சாஸில் இருக்கும் மிட்லேண்ட் பகுதியில் ஒரு மர்ம நபர் தனது வாகனத்திலிருந்து கொண்டு அங்கிருந்த மக்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதன்பின் அந்த அந்த நபர் அங்கிருந்த தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்திச் சென்றார். இதையடுத்து விரைந்த போலீசார் அவரை வழியில் […]
திருவண்ணாமலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து ஒரு குடும்பத்தினர் மேல்மருவத்தூருக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். கார் திருவண்ணாமலை அருகில் உள்ள ஓட்டக்குடிசல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது கார் நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற 2 […]
நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு […]
நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். […]
அலாஸ்காவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சமீபத்தில் விமானத்தின் மூலம் நிகழும் விபத்துகள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில், ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் சுற்றுலா பயணிகள் 7 நாள் பயணம் மேற்கொண்டனர். இவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் அலாஸ்கா பகுதியிலுள்ள கெட்சிகன் என்ற இடத்தை மிதக்கும் விமானம் மூலம் சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர். அதே நேரத்தில் 4 பேர் கொண்ட மற்றொரு சுற்றுலாக் குழுவினர் வேறொரு மிதக்கும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது […]