Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 3 லட்சம் பேர் பாதிப்பு…. அமெரிக்காவில் தீவிரமடையும் கொரோனா…!!!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 3.12 லட்சம் நபருகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அங்கு கடந்த ஒரே நாளில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 314 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஒரே நாளில் 841 நபர்கள் கொரோனா தொற்று பாதித்து பலியாகியுள்ளனர்.

Categories

Tech |