மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர் அறிவித்தார். அம்மாநிலத்தின் COVID-19 நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் […]
Tag: _AgainstCorona
சென்னையில் கொரோனா பாதித்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 303 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் அதில் சென்னையில் மட்டும் 243 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,738 பேர் குணமடைந்துள்ள நிலையில் சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று […]
தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 320 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் செங்கல்பட்டு 4ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 11ம் தேதி கிருஷ்ணா நகர் பகுதியை […]
இனி நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை உயரும் அதே சமயத்தில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவைப் பொருத்தவரையில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கான தகவல்களை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது மக்களிடையே தெரிவித்து வந்தது. அந்தவகையில், காலை மாலை என இருவேளைகளில் இதுவரை கொரோனா குறித்த தகவல்களை […]
இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய […]
ஆன்ட்டிபயாட்டிக் கொரோனாவை அழிக்குமா ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். ஆண்டிபயோட்டிக் வைரசுக்கு எதிராக வேலை செய்யாது. அவை பாக்டீரியாக்களை கொள்ளக்கூடியவை. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் கொடுக்கப்படலாம். ஏனென்றால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கும் பட்சத்தில், பாக்டீரியாக்களை அவை அழித்து ஓரளவுக்கு உடலை பாதிப்பு அடையச் செய்யாமல் தடுக்கும்.
பிரபல டென்மார்க் பத்திரிகை நிறுவனம் சீனாவின் தேசிய கொடியை கிண்டல் செய்ததோடு மன்னிப்பு கேட்கவும் மறுத்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட இடமாக சீனா பார்க்கப்படுகிறது. அங்கிருந்துதான் வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவியதால் பல்வேறு நாட்டினர் சீனாவை குற்றம்சாட்டி கூறிவந்தனர். உதாரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு வரை அதனை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வந்தார். இந்நிலையில் டென்மார்க் நாட்டின் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சீன தேசிய […]
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு உழைக்க வந்த உழைப்பாளிகளே, விருந்தினர்களை உங்களுக்காக கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்துள்ள வசதிகளை அறிந்து கொள்க, நீங்கள் குடியிருக்கும் வீட்டின் அல்லது கட்டிடத்தின் உரிமையாளர் உங்களை வெளியேற்ற முயற்சி செய்தால் உள்ளூர் பஞ்சாயத்தில் முனிசிபாலிட்டி புகார் தெரிவிக்கலாம். அவர்களால் இப்போதைய சூழ்நிலையில் வெளியேற்ற முடியாது. உணவு பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உங்கள் உள்ளூர் பஞ்சாயத்தில் மக்கள் உணவகங்கள் மூலம் 20 ரூபாய்க்கு உணவு தயார் செய்து தரப்படுகிறது. இதற்கு உங்கள் லோக்கல் […]
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில், ஒரு சில டிப்ஸ் இதோ,எப்போதும் உறங்கச் செல்வதற்கு முன்னர் வெந்நீர் அருந்துவது, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 வினாடிகள் வாய் கொப்பளிப்பது ஆகியவை கிருமிகள் அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும். அதே போல் நல்ல […]
தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஒரு குட்டி கதை ஒன்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம் ஜப்பானில் ஒரு மன்னர் இருந்தார். அவர் மிகவும் சாமர்த்தியமானவர். அவர் எந்த போருக்கு சென்றாலும் மிக சுலபமாக வென்று விடுவார். அவர் படை ரொம்ப சின்ன படை. இப்படி போருக்கு சென்று இருக்கும் சமயத்தில் தளபதிக்கும் படைக்கும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இத்தனை நாள் சின்ன படைகளுடன் போரிட இப்போ எதிர்கொள்ள கூடிய படை மிகப் பெரிய படை இவர்களை எப்படி […]
பூசாரி உட்பட பக்தர்களை காவல்துறையினர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதனை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபத்தை சற்றும் உணராமல் தமிழகத்தின் ஒரு கிராமப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் மக்களை அழைத்துக் கொண்டு கோயிலை திறந்து பூஜை நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த […]
மேற்கு வங்கத்தில் 7 தொழிலாளர்கள் தங்களைத்தாங்களே மரக்கிளையில் தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதைத் தவிர தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. இதை முன்கூட்டியே அறிந்த சென்னையில் பணிபுரிந்த ஏழு மேற்குவங்க தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த சுகாதார மருத்துவர்கள் உங்களை நீங்களே சுய தனிமைப் படுத்திக் கொள்ளுதல் நல்லது […]
காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது கொரோனா வைரஸை தடுப்பதற்காகவே நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் என்று சொல்லப்படும் காய்கறி உள்ளிட்டவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் […]
இருப்பதா ? இறப்பதா ? என்பதே இங்கு பிரச்சனை. அமைதியாக இரு, நீ விரும்பியதை அடைவாய். இது புத்தருடைய வரிகள் இந்த வரிகள் தற்போதைய காலகட்டத்திற்கு அருமையாக பொருந்தி உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இது வைரஸின் சங்கிலித் தொடரை முற்றிலுமாக தடுத்து தொற்று நோய் பரவலை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஆனால் இதை உணராமல் […]
22ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]