ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் விஸ்வரூபம் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் பாணலிங்கேஸ்வரருக்கு நேற்று அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு பாணலிங்கேஸ்வரருக்கு அன்னம் சாற்றப்பட்டது. இதனையடுத்து அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளித்த ஈஸ்வரனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.
Tag: aanmeegam
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோதாம்பட்டியில் இருக்கும் வெற்றி விநாயகர் கோவிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனையடுத்து கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோபுரத்தின் மீது உள்ள விநாயகர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்கு […]
கரூர் மாவட்டத்தில் உள்ள கோம்புபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு இளநீர், சந்தனம், தயிர், பால், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் வீற்றியிருக்கும் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 30-ஆம் தேதி இந்த கோவிலில் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மணிகர்ணிகை தீர்க்க குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் நீள்நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒன்பதாம் ஆண்டு தேர் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முளைப்பாலிகை இடுதல், காப்பணிதல், 1008 வேள்வி வழிபாடு கோவிலில் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடப வாகனத்தில் சோமாசுக்கந்தர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். இதனை அடுத்து திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் சௌந்தரராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு தெப்பத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. முன்னதாக பெருமாளுக்கு சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தாமரைப் பல்லக்கில் பெரிய ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது ஏராளமான பக்தர்கள் ஏரியின் இருபுறமும் நின்று மலர் தூவி சாமியை தரிசனம் செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாண்டுரங்கன் அலங்காரத்தில் ஆனந்த வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதே போல் அரசமங்கலம் வரதராஜ பெருமாள், கோலியனூர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கும், தனி சன்னதியில் இருக்கும் வீர ஆஞ்சநேயருக்கும் பன்னீர், தயிர்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இந்த கோவிலில் சுவாமி- அம்பாள் பிரகார உலா நடைபெற்று உள்ளது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பிரகாரத்தில் உலா வந்த சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே புகழ்பெற்ற திருப்பன்கூர் சிவலோகநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதே போல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், கண்ணப்பன் பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூரில் பூவாடைக்காரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா தொடங்கிய நாள் முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் இருந்தவாறு அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார சேவையும், பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் பகுதியில் தேவி ஸ்ரீ முப்பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொடை விழா தொடங்கி கடந்த 28-ஆம் தேதி முளைப்பாரி விதை விதைத்து கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் வரை நடைபெற்ற கும்மியாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்று இரவு 8 மணிக்கு சாமி அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு கும்ப அழைப்பு […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அரியநல்லூர் தெருவில் முப்பிடாதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 10-ஆம் நாளான நேற்று முன்தினம் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா ஜீவசமாதி அடைந்த நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும். பின்னர் 10-வது நாளில் விஜயதசமி அன்று வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி தொடங்கிய நிலையில் கோவர்தனாம்பிகை தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்க குதிரையில் அமர்ந்து பசுமலையில் அம்பு எய்தல் மண்டபத்திற்கு சென்றுள்ளார். பின்னர் வன்னிமரத்தில் […]
மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று 108 வீணை இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியும் சிறப்பாக […]
மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 8 ஆம் நாளான நேற்று அதிகாலை 7 மணி முதல் 9 மணி வரையில் உபய தேவர்களுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் மலையப்ப சுவாமி தன்னுடைய இரு தாயார்களுடன் கூடிய கம்பீரமான தோற்றத்தில் தேரில் அமர்ந்திருந்து மாட வீதிகளில் உலா வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்த நாமத்தை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவில் 7-ஆ ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை மனதார தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மனை வழிபட்டால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 8-ஆம் நாளை முன்னிட்டு நேற்று மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி அளித்தார். இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அன்பு பிரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மனுக்கு பவானி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக பக்தர்கள் அம்மன் சிலையை ஊர்வலமாக பவானி ஆற்றிற்கு எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் மங்கள வாத்தியத்துடன் ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்து முடிந்த பிறகு அம்மன் சிலை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட கோவில் ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் அதிகாலை 4-30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இதனையடுத்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8-30 மணிக்கு […]
திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகே அக்ராவரம் கிராமத்தில் மலை மீது சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் […]
ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாத சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரகரம் பகுதியில் கந்தநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதிசுவாமிநாதசாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இந்நிலையில் ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் ஆதிசுவாமிநாதசாமிக்கு திரவியப் பொடி, மஞ்சள்பொடி, பழங்கள், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், விபூதி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகக்கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியசாமிக்கும், தோப்புத்துறை ைகலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவுக்கு கடந்த 6-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 11-ந் தேதி கோவில் கொடைவிழா தொடங்கி 8-வது நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு வில்லிசை, கும்ப கரகாட்டம், 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் கோவிலில் சேர்க்கும் நிகழ்ச்சி, […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டலத்தில் புகழ்பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 1987-ஆம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி உள்காப்பு மற்றும் வெளிகாப்பு, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் மணி நதி அணைக்கட்டில் இருந்து பச்சை பரப்பி சக்தி அழைத்தல், சூரிய பிரபை, சந்திர பிரபை, மயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா, அய்யனார், துர்க்கை அம்மனுக்கு ஊரணி பொங்கல், எல்லைச்சட்டி உடைப்பு போன்ற […]
தூத்துக்குடி மாவத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் ரதம் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் […]
காய்கறியால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சென்னிவனம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த தீர்க்கபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பழைமை வாய்ந்த கோவில் இதுவாகும். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்த கோவிலை சிவனடியார்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து பழைமை மாறாமல் சீரமைத்து வந்தனர். இந்நிலையில் கோவில் சீரமைப்பு பணி நிறைவடைந்து நேற்று […]
தனுசு ராசி அன்பர்களே.! மனக்கவலை இருக்கும். இன்று நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். சேமிப்பு பணம் கொஞ்சம் கரைந்துவிடும். செலவுக்காக கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கும். மனக்கவலை இருக்கும். அதிக உழைப்பும் குறைந்த வருவாயும் தான் கிடைக்கும். நல்லது கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். உத்தியோக நிமித்தமாக வெளியிடத்தில் தங்குவதற்கான சூழல் இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். வேலையில் கவனம் வேண்டும். அதிகளவு கோபம் ஏற்படும். ஆனால் அதனை தடுத்து பொறுமையாக இருங்கள். […]
சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் சிவராத்திரி இரவு இந்தியாவில் மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி ஆண்டுதோறும் சிறந்த அளவில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் ஈஷாவின் 26 ஆம் ஆண்டு சிவராத்திரி வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி 22ம் தேதி காலை 6 மணி வரை விழா ஆதியோகி […]