முககவசம் அணியாதவர்களுக்கு ஆணையாளர் நேரடியாக அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிராஸ்கட் ரோடு, பத்தாவது வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு போன்ற பல பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் திடீரென கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அந்த வீதிகளில் உள்ள கடைகள், ஜவுளிக்கடைகள், ஹோட்டல்கள் என அனைத்திலும் பணிபுரியும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகிறாரார்களா என ஆய்வு செய்துள்ளார். அப்போது காந்திபுரம் கிராஸ்கட் […]
Tag: # Action
சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும், மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இதுகுறித்து ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மற்றும் லிங்க்ட் இன் போன்ற வலைத்தளங்களை குறிப்பிட்டு, இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உங்கள் […]
திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திட்டமிட்டபடி நாளை 9 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பிற வகுப்புகளையும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அளவில் பள்ளி கல்வித்துறை 3 வது இடத்தில் இருந்து […]
சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக போலீசார் 24 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு வேப்பங்கொட்டை பாளையத்தில் பணத்தை வைத்து சீட்டாட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகவும், விடுமுறை தினங்களில் வெளியூரில் இருந்து ஆட்கள் வந்து இந்த சீட்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் புகாரானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் இந்தத் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் உள்நுழைவு தொட்டி உடைந்து அங்குள்ள சாலைகள் உள்வாங்குகின்றன. இதனையடுத்து மயிலாடுதுறை நகரில் மட்டும் 15 இடங்களில் உள்நுழைவு தொட்டி உடைந்ததால் அதனை சீரமைக்கும் பணியானது நடைபெற்றது. இந்நிலையில் தரங்கம்பாடியில் உள்ள சாலையில் உள்நுழைவு தொட்டி […]
சிறப்பு வாகன சோதனையின் போது விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், சக்திவேல், கருணாநிதி ஆகியோர் பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் சீருடை அணிந்துள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றார்களா என்றும், தகுதி சான்றிதழானது புதுப்பிக்கப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு நடத்தினர். […]
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மணிபாலன், சக்திவேல், ராஜா ஆகிய 3 பேரும் கடந்த 6ஆம் தேதி அஸ்வத் புருக்காலுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறிய கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் திடீரென மீனவர்களின் நாட்டுப்படகில் சுற்றிவளைத்தனர். […]
காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி பொதுமக்கள் இணைந்து சேரம்பாடி சுங்கம் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கடந்த மாதம் ஒரே வாரத்தில் தந்தை மகன் உள்பட 3 பேர் இறந்தனர். மேலும் காட்டு யானைகள் அட்டகாசமானது சேரம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொளப்பள்ளி, கண்ணம்பள்ளி, செம்பக்கொல்லி மற்றும் சேரம்பாடி சப்பந்தோடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் அங்குள்ள விவசாய […]
குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் கிழக்கு சாலையில் அனைத்து குப்பைகளும் கொட்டப்படுகின்றன. அதோடு அங்குள்ள திருமண மண்டபத்திலிருந்து வாழை மரங்கள், சாப்பிட்ட இலைகள் என பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் அதே இடத்தில் கொட்டப்படுகின்றன. இந்நிலையில் அள்ளப்படாத குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அதோடு இப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் தனிப்பட்ட நபர் ஒருவர் சில சமயங்களில் தீவைத்து எரித்து விடுவதால் […]
கொரோனா வைரஸை தடுப்பதற்கும், நாம் பாதுகாப்பாக இருப்பதற்கும் உலக சுகாதார நிறுவனம் சில அடிப்படை நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்கியுள்ளது. 1. தினமும் உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டோ அல்லது சானிடைசர் கொண்டோ நன்றாக கழுவுங்கள். 2. இருமல் மற்றும் தும்மல் இருக்கக்கூடிய நபர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி விட்டு பேசுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். 3. கைகள் சுத்தமாக இல்லாத நிலையில் மூக்கு, வாய், கண்கள் என தேவையில்லாமல் தொடக்கூடாது. 4. இருமலின் போதோ […]
நெல்லை மாநகரில் ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26 மற்றும் மே 3 ஆம் தேதிகளில் அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். நெல்லை மாநகரத்தில் மட்டும் ஐந்து பகுதிகள் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சமூக விலகலை கடைபிடிப்பதற்காக நெல்லை மாநகராட்சி சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமூக விலகல் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்கும் தீர்வு என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், வருகிற 26-ஆம் தேதி […]
ஊரடங்கு உத்தரவால் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தாய்ப்பால் பெற இயலாத குழந்தைகளுக்கு சேரலாக், ஜூனியர் ஹார்லிக்ஸ் போன்ற உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே தட்டுப்பாட்டை போக்கி குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய […]
மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்பட உயர் அலுவலர்கள் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி வசந்த் என்னும் மருத்துவ அலுவலர் ஒருவர் மருத்துவ வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காந்தி மருத்துவமனையில் பொது மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் வசந்த் என்னும் மருத்துவர் ஒருவர் தன்னை உயர் அலுவலர்கள் துன்புறுத்துவதாகக் கூறி தீக்குளிக்க முயன்றார். தன் பாக்கெட்டில் பெட்ரோல் பாட்டில்களை வைத்திருந்த மருத்துவர் வசந்த் அதை தன் மீது ஊற்றி கையில் வைத்திருந்த லைட்டரால் தன்னை கொழுத்திக்கொள்ள முற்பட்டார். […]
அர்னாபிடம் கேள்வி கேட்ட விவகாரத்தில் தன்னிடம் விளக்கம் கேட்காமல் குணாலுக்குத் தடை விதித்தது தனக்கு வருத்தமளிப்பதாக இண்டிகோ விமான கேப்டன் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். சமூக வலைதளம் முழுவதும் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ராதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார். இண்டிகோ விமானத்தில், மூத்தப் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் அவர் நடத்திய உரையாடல்தான் அதற்குக் காரணம். மும்பையிலிருந்து லக்னோவுக்குச் செல்லும் விமானத்தில் அர்னாப்பும் குணாலும் பயணம் செய்துள்ளனர். அப்போது அர்னாபிடம் சில கேள்விகளை முன்வைத்த குணால், […]
திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் சாதி பிரச்னை காரணமாக மாணவர்கள் மீது பாரபட்சம் காட்டும் பேராசிரியர்கள், சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசினர் கலைக்கல்லூரி ஒன்று இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் திருத்தணி, அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் அதிகமாகப் படித்துவருகின்றனர். அதேபோன்று அப்பகுதியில் பெரும்பான்மையாக வன்னியர் சமூகத்தினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தக் கல்லூரியில் […]
ஆக்ஷனில் குதிக்கும் அனுஷ்கா…!!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, ஆக்ஷனில் களமிறங்கி வருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படத்திற்கு பின் அவர் நடித்து வெளிவந்த ‘பாகமதி’ படமும் பெரும் வெற்றி பெற்றது .இப்போது ‘நிசப்தம்’ என்ற படத்தில் அனுஷ்கா நடித்து முடித்துள்ளார்,அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 3 படங்களில் […]
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், […]
‘சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் எனக்குப் பிடித்த ஆக்ஷன் ஜானரில் இந்தப் படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளேன்’ என்று ஆக்ஷன் படம் பற்றி சிலாகித்துக்கொண்டார் தமன்னா. அவெஞ்சர்ஸ் பிளாக் விடோ கேரக்டர் பாணியில் என்டரி கொடுத்து ஆக்ஷன் படம் பார்க்க அழைப்பு விடுத்துள்ளார் தமன்னா. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. […]
பாகுபலியில் தான் விரும்பியது நிறைவேறாமல்போன நிலையில் ‘ஆக்ஷன்’ படத்தில் அதனை நிறைவேற்ற வாய்ப்பளித்து தனது கனவை சுந்தர். சி நனவாக்கியதாக நடிகை தமன்னா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சுந்தர். சியுடன் பணியாற்ற மிகவும் விருப்பமாக இருந்தாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். ‘ஆக்ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், நடிகை தமன்னா பேசுகையில், “ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்துவருகிறீர்கள். இயக்குநர் சுந்தர். சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா […]
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மகிழ்ச்சி புறத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மகிழ்ச்சிபுரம் பகுதியில் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில், மழை நீர் வழிந்தோட முறையான வசதி அங்கு இல்லாததால் தெருக்களிலே நீர் தேங்கியுள்ளது. இதனால் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழைநீர் மற்றும் […]
தமிழகத்தில் குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு துரித உணவுக்கு தடை விதிக்க வேண்டுமென உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் பரிந்துரை செய்துள்ளது. உணவே மருந்து என்று வாழ்ந்து கொண்டிருந்த நாம் இன்று மருந்தே உணவு என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். இயற்கையான பழம் காய்கறிகளை உண்டு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருந்த காலம்போய் துரித உணவிற்கு அடிமையாகி அதுவே நமது உணவு கலாச்சாரமாக மாறிவிட்டது. இந்த துரித உணவுகளை அதிவிரைவாக அமைக்கப்படுவதால் அதில் பல்வேறு கெமிக்கல்கள் உடலுக்குத் தீங்கு […]
தீபாவளி விருந்தாக பிகில், கைதி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு ட்ரீட் தந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி – விஷால் படங்கள் ஒரே நாளில் வெளியாகி விருந்து படைக்கவுள்ளது. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆக்ஷன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு, அசத்தலான அதிரடி காட்சிகள் என முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஆக்ஷன்’. விஷால் – தமன்னா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை […]
வில்லிவாக்கம் காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தீபாவளிப் பண்டிகையின் நெருங்குவதையொட்டி அரசு அலுவலர்கள் நன்கொடை பெறுவது , லஞ்சம் பெறுவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இருக்கக்கூடிய தமிழழகன் குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் காவல்நிலையம் வந்தனர். பின்னர் […]
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கான ‘நீ சிரிச்சாலும்’ பாடல் வெளியாகியுள்ளது. காமெடி, குடும்பப் படம், திரில், ஆக்ஷன் என அனைத்து ஜானர்களையும் கலக்கியவர் இயக்குநர் சுந்தர்.சி. இவரும், நடிகர் விஷாலும் கூட்டணியாக இணைந்து ஏற்கனவே ‘ஆம்பள’ திரைப்படம் வெளியானது. தற்போது சுந்தர்.சியும், விஷாலும் மீண்டும் இணைந்துள்ளனர். முழு நீள ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ஆக்ஷன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டராக நடிக்கிறார். இதில் ஒரு […]
வீரகுமார் இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படத்தில் நடிகை வரலட்சுமி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை போன்ற படங்களில் நடித்துவருகிறார். மேலும் கன்னித்தீவு, கன்னிராசி, நீயா 2, காட்டேரி, தெலுங்கில் தெனாலிராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் […]