செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா இருந்தப்ப கூட்டணி இல்லாம அம்மா ஜெயிச்சாங்க எலக்சன்ல, அதுதான் முடியாது. அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால், திமுகவை வீழ்த்தலாம். அம்மா இருந்தா தனியா 2014 ஜெயிச்சாங்க, சின்ன சில கட்சிகளை சேர்த்து வைத்து ஜெயிச்சாங்க. அது போன்ற நிலைமை இன்றைக்கு இருக்காது, அம்மா பெரிய தலைவர். ஆனால் சரியான கூட்டணி அமைத்து, அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் எல்லோரும் ஓரணியில் இணைந்து… தங்களை […]
Tag: # ADMK
இன்று அதிமுகவில் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக 500க்கும் அதிகமான […]
அடுத்த தேர்தல் பாஜக தலைமையில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்போகுது என்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார், யூக செய்திகள், யூக கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு தகுதி எனக்கு கிடையாது. இதெல்லாம் தலைமையில் முடிவு செய்யக்கூடிய விஷயங்கள். எல்லோருடைய கருத்துக்களை சொல்வதற்கு அண்ணா திமுக கழகத்தில் இடம் உண்டு, கருத்து சுதந்திரம் உண்டு ,உரிமை உண்டு அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் அண்ணன் அவர்களை பொறுத்தவரையில்கூட்டுறவு துறை அமைச்சர் ஒரு மூத்த இயக்கத்தினுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், புரோட்டாக்கால் படி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிரதமரை வரவேற்றார்கள், வரவேற்பதற்கு அந்த புரோட்டாக்காலில் அனுமதி அளித்துள்ளார்கள், அதன் அடிப்படையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை, மரியாதை நிமித்தமாக எடப்பாடி வரவேற்றார். ஒரு தாய் திருநாட்டிற்கு, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு வருகின்ற பாரத பிரதமரை வரவேற்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் அவர்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, நேரடியாக சென்று இருவரும் கைகுலுக்கி, பரஸ்பரன் […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஓபிஎஸ் பொறுப்பு அறிவிப்பது பற்றி பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை சொல்லியிருக்கிறார்கள். ஓபிஎஸ் தரப்பு திரும்பத் திரும்ப இங்கு வரவேண்டும் என்பதல்ல, உயர் நீதிமன்றத்திலே முறையிடுங்கள். இரண்டு – மூன்று வாரங்களுக்குள்ளாக முழு விசாரணை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது.பொதுக்குழுவில் எந்தவிதமான விதிமுறைகள் என்று நீதிமன்றம் கேட்டது. ஓபிஎஸ் தரப்பில் ஒட்டுமொத்தமாக பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நீதி அரசர் […]
செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமாரிடம், பிரதமர் மோடி சென்னை வந்த போது, எடப்பாடி வரவேற்பது, ஓபிஎஸ் வழியனுப்பியதால், பிஜேபி இருவரையும் சேர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், புரோட்டாக்கால் படி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிரதமரை வரவேற்றார்கள், வரவேற்பதற்கு அந்த புரோட்டாக்காலில் அனுமதி அளித்துள்ளார்கள், அதன் அடிப்படையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை, மரியாதை நிமித்தமாக எடப்பாடி வரவேற்றார். ஒரு தாய் […]
சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்ரதீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் […]
திமுக அரசு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திமுக சொன்னதை நிறைவேற்றியுள்ளது என வீடியோ வெளியீட்டு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை விளக்கி இருந்தார். இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் அரசு நிறைவேற்றிய வாக்குறுதி குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி இருந்தார். இந்த நிலையில் பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரக்கூடிய வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். கல்விக்கடன் […]
கோடநாடு வழக்கில் அதிமுகவினர் மீது தவறு இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் சட்ட சபையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்படியே விசாரணை நடைபெறும்.. அரசியல் தலையீடு இருக்காது.. யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.. முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் யார் என்று வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு […]
பாமகவுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என கூறப்படுகிறது. எடப்பாடி அணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், […]
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம். சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன். நிலக்கோட்டை தனிதொகுதியில் எஸ். தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய […]
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பின் கீழ் நாளையில் இருந்து தொடங்குகிறது ஒவ்வொரு கட்சிகளும் சட்டசபை தேர்தலையொட்டி அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசனும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதனை அடுத்து ஆளும் கட்சியான அதிமுக-வின் பிரச்சார விழாவை முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதல்வரும் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிலையில் “மக்கள் கிராம சபை” என்ற திட்டம் மூலம் திமுக […]
வரும் சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜவர்மன் பரபரப்பு பேச்சால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜிக்கும் , சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜவர்மனுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்துள்ளது. இந்நிலையில் சாத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கூட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜவர்மன் அமைச்சர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இது […]
திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஐந்து முறை ஆட்சியில் இருந்தோம் என்று பெருமைபடச் சொல்கிறோம். உண்மைதான். ஆறாவது முறையும் நாம்தான் ஆட்சிக்கு வந்தோம் என்ற பெருமையைப் பெற்றாக வேண்டும்! இந்தத் தேர்தலில் நாம் அடைய இருக்கிற வெற்றி என்பது, இதுவரை ஐந்து முறை பெற்ற வெற்றிக்குச் சமம்! இதன் உண்மையான பொருளை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! ஐந்து முறை வெற்றி பெற்றதற்குச் சமம்தான் இப்போது அடையப் போகும் வெற்றி. அதனை நீங்கள் அனைவரும் […]
அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த கட்சியாக இருந்தாலும் எங்களால் அறிவிக்கப்பட்டவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறியுள்ளார். வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளராக திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலமாக நீண்ட நாட்களாக அதிமுகவில் நிலவி வந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை முடிவுக்கு வந்தது. அடுத்த கட்டமாக கூட்டணி கட்சிகள் […]
சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட கண்மாய் பகுதியில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று ஆய்வு செய்தார்.. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று […]
அதிமுகவில் 29 புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் பத்து மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னேற்பாடாக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்கட்சியான திமுக ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஐபேக் என்ற நிறுவனத்தோடு தேர்தல் பணியினை செய்ய துவங்கிவிட்டது. தமிழக முதலமைச்சரும் மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளார் என்ற தகவல் வெளிவந்து இருந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை […]
அஇஅதிமுகவிற்கு கூடுதல் தலைமை கழக நிர்வாகிகள், துணை நிர்வாகிகளை நியமித்து தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவில் 29 புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம் விவசாயப்பிரிவு, மருத்துவ அணி ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகிகள் பலரை மாற்றம் செய்தும் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா […]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் தற்போது விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனையை சிறை சூப்பிரண்டு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 2 மாதங்கள் வரை குறைக்கலாம். இதனால், ஆகஸ்ட்டில் அவர் விடுதலை செய்யப்படலாம். மேலும் , பொருளாதார குற்றம் புரிந்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என சிறை துறை விதிகள் கூறுகின்றன. இது போன்ற காரணங்கள் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொரோனாவின் ஒட்டுமொத்த பேரழிவிற்கு முதல்வர் எடப்பாடி பழனி்சாமி தான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன், மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். […]
கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக […]
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு […]
வென்டிலேட்டர்கள் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறானது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அரசின் முயற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மக்களில் கோரிக்கையை ஏற்று பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான், தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 4,51,800 பிசிஆர் […]
தமிழகம் முழுவதும் மண்டல வாரிய திமுக வழக்கறிஞர் குழுக்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. “சட்டப் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் திமுகவின் 7 மண்டலங்களுக்கும் வழக்கறிஞர் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள இந்த குழுக்கள் உதவும் என்றும் அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது புகார் குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர்கள் குழுக்கள் உதவும் என்றும் தகவல் அளித்துள்ளனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி […]
மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் இன்று காலை தொடங்கியது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், அதில் பொய் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் […]
அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப செயலாளர், துணை நிர்வாகிகளாக இருந்தவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுகவின் அனைத்து ஊரக கழக செயலாளர்கள் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கோவை மற்றும் மதுரை என பிரிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை சென்னை மண்டலத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், […]
மாநிலத்திற்கு வர வேண்டியதை கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமென்ற பயம் என தமிழக அரசு குறித்து கமலஹாசன் விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 20 லட்சம் கோடி […]
உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வரலாறு காணாத கடனை மக்கள் தலையில் சுமத்தி நிதிப் பகிர்விலும் உரிமை இழந்த அரசு என […]
தன்னார்வலர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட […]
கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முகொரோனா தடுப்பு பணி,நிவாரண நிதி, கொரோனா வைரஸ் ழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு […]
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இந்த […]
விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. கொரோனா காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்று முதல்வர் கேட்டுக்ண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. சாதி, மதம், மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக கொரோனாவை தடுக்க போராடுவோம். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்களையும், உங்களின் குடும்பத்தையும் காப்பாற்றும் அரசின் உத்தரவு. கொரோனாவை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து […]
அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும், அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை கடைபிடியுங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். சாதி, மத இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம். அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அச்சப்பட வேண்டாம். அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை […]
21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம். மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு.. பொறுப்பான […]
உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன், கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு… தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம். மேலும் “பொறுப்பான குடிமகனை இருந்து நம்மையும், சமூகத்தையும் பாதுகாப்போம். 21 நாள் ஊரடங்கு என்பது […]
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். […]
கமல்ஹாசனுக்கு அதிமுக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருவதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அரசு சார்பில் நடந்தது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜா நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு அதிமுக அரசு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது என்றார். இதில் எந்தவித எந்தவிதமான புரட்சிகர திட்டத்தை கமல்ஹாசன் […]
இஸ்லாமிய மக்களுக்கு ஆபத்து என்றால் முதலில் களமிறங்குவது தேமுதிக தான் இருக்கும் தெரிவித்துள்ளார் பொருளாளர் பிரேமலதா திருச்சியில் நிருபர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் கூறியிருப்பதாவது “தேமுதிகவிற்கு மாநிலவை எம்பி பதவி கொடுக்குமாறு அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அதற்கு அதிமுக மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர். ஒரு மாநில அவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போது நாங்கள் பேசியிருந்தோம் அதன்படி வழங்குவார்கள் என நம்புகிறோம். […]
தேமுதிகவிற்கு மாநில அவையில் சீட் கிடைக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா மற்றும் பழனிச்சாமி ஆகியோர் அளித்த பதில்கள். “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரை எங்களுடைய கூட்டணி தர்மத்தை என்றைக்கும் கேப்டனும் கேப்டனை பின்தொடரும் நாங்களும் கடைபிடிக்கிறோம் உறுதியாக முதலமைச்சர் அவர்களும் அந்த கூட்டணி தர்மத்தோடு நிச்சயம் ராஜ்யசபா எம்பி தருவார் என நினைக்கிறோம். பொருத்திருந்து பார்க்கலாம்” இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. […]
கீரிப்பிள்ளையின் வாயில் கோழி சிக்கியது போல் அதிமுகவினர் சிக்கியுள்ளனர் என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தெரிவித்துள்ளார் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் கீரிப்பிள்ளை வாயில் சிக்கிக்கொண்ட கோழியைப் போல அதிமுக அரசு உள்ளது என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “இந்த சட்டங்கள் CAA , NRC குறித்து அதிமுக தலைவர்களுக்கு சரியான புரிதல் இல்லை எனவே அதிமுகவினர் அரசியல் நெருக்கடியால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். […]
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர் என்றும் பாதுகாப்பான நகரமாக சென்னை, கோவை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரவிலும் பெண்கள் வெளியில் சென்று வருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டதால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எனினும் […]
மக்கள் மீது இருக்கும் கடனுக்காக எந்த அரசும் மக்களை கடனை திருப்பி செலுத்துங்கள் என்று சொல்வது கிடையாது. அரசுதான் கடனை அடைத்து வருகிறது என கமல்ஹாசன் பேச்சுக்கு திருமங்கலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதிலளித்தார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ப.சிதம்பரம் இந்திய பொருளாதாரம் […]
ரஜினியை வரவேற்கிறோம், மக்கள் பணியாற்ற வேண்டும், மக்கள் அங்கீகாரம் கொடுப்பதை மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்ப்பதற்கு ஆர்வத்தோட இருக்கிறோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பத்தாவது நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் […]
சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுக்கூடங்களில், ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். புளியம்பட்டி நகராட்சிப் பகுதியில் 6 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் இரண்டு கடைகளில் மட்டுமே பார் வைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள நான்குக் கடைகளை ஒட்டி சட்ட விரோதமாக ஆளும் கட்சியினரின் 24 மணி நேரமும் மது விற்பனையுடன் […]
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி ஏதாவது கருத்துக்களை தெரிவிப்பார். சில சமயம் அவர் கூறும் கருத்துக்கள் அதிமுகவுக்குள் சல சலப்பை ஏற்படுத்தும். அதே நேரம் அவர் தல அஜித் ரசிகன் என்பது நமக்கெல்லாம் தெரியும். அஜித்தை பற்றி மிகவும் பெருமையாக உயர்த்தி அவர் பலமுறை பேசியிருக்கிறார். இந்த நிலையில் விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, நடிகர் விஜய் ரஜினிக்கு நிகரானவர் இல்லை. நடிகர் ரஜினிக்கு நிகரானவர் அஜித் […]
தமிழ்நாடு பட்ஜெட் 2020 – 21இல் சமூக நலத்துறைக்கான ஒதுக்கீடு குறித்த தகவல்கள்… சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 4315.21 கோடி நிதி ஒதுக்கீடு. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினை செயல்படுத்த 2020-21 இல் 959.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ. 71 கோடி ஒதுக்கீடு. ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை வெளியிடப்படும். பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ. […]
தமிழ்நாடு பட்ஜெட் 2020-21இல் மின்சாரம் மற்றும் மாற்று எரிசக்திக்கான ஒதுக்கீடு குறித்த தகவல்கள். மின்சாரத்துறைக்கு ரூ .20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தென் மாநிலங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில் இணைப்பதற்கும், சென்னை-கன்னியகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்க்கும், துணைமின் நிலையங்களை மேம்படுத்தவும், ஓட்டப்பிடாரம் மற்றூம் விருதுநகர் துணைமின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும் 2020-21 நிதியாண்டில் 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சென்னையில் தியாகராய நகர் போல மாநகரத்தில் பிறப் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் 2020-21இல் கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்ப்போம். போக்குவரத்துத் துறை: 1,580 கோடி மதிப்பீட்டில், 2,213 பிஎஸ் ஸ்டேஜ் ஆறு மாசு கட்டுப்பாட்டு தரம் கொண்ட பேருந்துகள் வாங்க 2020-21 ஆம் ஆண்டில், 960 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடமிருந்து நிதியுதவி பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பேம் இந்தியா இரண்டு திட்டத்தின் கீழ், 525 மின்சாரப் […]
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21ஆம் நிதியாண்டில் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல்செய்த பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவை பின்வருமாறு: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21இல் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் 100 கோடி ரூபாய் செலவில் 2.50 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பும் திருச்சியில் 40 கோடி […]