அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆன்மீகம் பெருகினால் தான் நாட்டில் கலவரம் இல்லாமல் இருக்கும் எனக் கூறினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மீக ஆட்சி நடத்தியதாகவும், அதே போன்று தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்மீக ஆட்சி நடத்துவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
Tag: # ADMK
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் கொடுக்கவும் கொடுக்காது. மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டுவர முடியாது. கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறுவது, தூங்குவது போல் நடிப்பது போன்று […]
ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான அதிமுகவின் அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக அம்மா பேரவை மாநிலச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், […]
சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்திருப்பதாகவும், சாலை விதிகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 31ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள், உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ‘சாலைப் பாதுகாப்பு வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு, 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி […]
நமது அம்மா படிப்பவர்கள் சிறந்த அறிவாளியாகவும், சிறந்த பொதுநலவாதிகளாகவும், மக்கள் தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு வாக்களித்த, குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தார். ‘நமது அம்மா படித்தால் அறிவாளி’ அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நமது அம்மா தினசரி நாளிதழைப் படித்தால் […]
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாற்று மையம் அமைக்கப்படும் என்பது தவறான தகவல் என்றும், ஜல்லிக்கட்டு குறித்து சி.டி. வடிவில் மாணவர்களுக்கு வழங்கப்படும். பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படமாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 82 மையங்களில் 14 ஆயிரத்து 217 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டார மருத்துவர்கள், சுகாதார மருத்துவர்கள், செலிவியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 348 பணியாளர்கள் […]
திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் மொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது. 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 […]
மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் அதிமுக முன்னிலை வகித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் […]
தமிழ்நாட்டில் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நடந்த வெவ்வேறு விபத்துகளில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மறைமுக தேர்தலில் அதிமுக முறைகேடாக செயல்பட்டு வருகின்றது என திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, […]
ஊராட்சி ஒன்றிய தலைவர் போட்டியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் […]
நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 […]
நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள […]
மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக […]
தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ப்ரீத்தா வெற்றி பெற்றுள்ளார். 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு […]
கமுதி ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தியது தொடர்பாக அதிமுக – திமுக இடையே தேவகோட்டையில் கடும் மோதல் ஏற்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 7, பாஜக 1, தேமுதிக 1 என அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் திமுக 7, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால் அதிமுக – திமுக இடையே வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களை […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு தன்னுடைய […]
சசிகலா தொடர்பாக தர்பார் திரைப்படத்தில் விமர்சித்து காட்சிகள் வைத்தது வரவேற்கக்கூடியதுதான் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராயபுரத்தில் நியாயவிலைக் கடைகளில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “பொங்கல் பரிசுத்தொகுப்பு நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து, காலை ஒன்பது மணிமுதல் இரவு ஏழு மணிவரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேர் வீதம் தினசரி வழங்கப்படுகிறது. பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள். ஆனால், […]
பெரியகுளம் 8ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், துணை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 7, பாஜக 1, திமுக 2 உறுப்பினர்களைப் பெற்றது. இதன்மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக சுலபமாகப் பெற்றது. ஆனால், ஒன்றிய அளவில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் தலைவர் […]
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்ற வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, ஜனவரி 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. 513 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 5087 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் […]
ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அரசியல் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் விழுக்காட்டை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல், 27 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு, எந்தெந்தக் கட்சிகள் எத்தனை விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளன என்பதை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், ( ஒன்றிய கவுன்சிலர் மட்டும் ) திமுக 40.94 விழுக்காடு, அதிமுக 34.60 விழுக்காடு, காங்கிரஸ் 2.57 […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக , அதிமுக 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நாம் தமிழர் கட்சியை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 14 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக கூட்டணி 12 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை […]
முதல்வர் பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது 2019 ஆம் ஆண்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹலோ எஃப்எம் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான திரு. எடப்பாடி பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தனியார் வானொலி சார்பில் சிறந்த அரசியல் ஆளுமை என்ற விருதினை முதல்வர் பழனிசாமி பெற்றுள்ளார். விருது பெற்ற முதல்வர் பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து […]
மேல குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 123 ஒன்றிய கவுன்சிலர், 342 பஞ்சாயத்துத் தலைவர், 2,397 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், 13 […]
பிரதமரின் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டிலிருந்தே கேட்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜனவரி 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பிரதமர் மாணவர்களுக்கு தேர்வு குறித்து உரையாற்ற உள்ளார். பிரதமர் உரையை கேட்பதற்காக மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்ற தகவல் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]
குடியுரிமைச் சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதை அதிமுக அரசு பார்த்துக் கொண்டு இருக்காது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கோவையில் மேம்பாலம், சாலைகள், […]
கிறிஸ்துமஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர், மக்கள் என அனைவரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். அந்த வகையில், அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ”அனைவரிடத்திலும் அன்பு, பகைவரிடத்திலும் பரிவு, சகோதரத்துவம் உள்ளிட்ட வாழ்க்கை நெறிகளை வழங்கிய இயேசு காட்டிய […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் காலை 10 தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்த உள்ளார். கடந்த ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கூட்டத்தொடரை எத்தனை நாள் நடந்தது என்பது […]
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழர்கள் அதிகம் வாழும் வெளி மாநிலங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் தருமென சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்ததன் அடிப்படையில், […]
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் விஜய் கணேஷ், சித்திரகுப்தன், கிளிமூக்கு ராஜேந்திரன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய காமெடி நடிகர் கிளிமூக்கு ராஜேந்திரன், ‘நாங்கள் எல்லாம் தற்போது உங்களிடம் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்துள்ளோம். நீங்கள் தவறான ஆட்களுக்கு ஓட்டுப் போட்டால் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொய்யான வதந்தியை ஏற்படுத்துவது தீவிரவாதத்தை வளர்க்கின்ற செயல் என்று பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்துக் காலங்களிலும் அதிமுக அரசு தொடர வேண்டும் என மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலிலும் […]
மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், பழனிச்சாமி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா தெளிவான விளக்கம் அளித்து விட்டனர். அப்படியிருக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு […]
மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற தமிழ்நாட்டில் விஷ விதைகளை விதைக்கும் சதி வேலையில் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருங்காலத்தில் அண்ணாவின் பெயரும் நீக்கப்படும் என்று ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர், “குறுகிய எண்ணம் படைத்தவர்களுக்குத்தான் இது போன்ற குறுகிய சிந்தனைகள் ஏற்படும். ஸ்டாலினின் கவலை எல்லாம் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முன்னிலைப்படுத்திவிட வேண்டும் என்பதுதான், நாங்கள் எப்போதும் அண்ணாவின் […]
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, இன்று ப்லோரா என்ற மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உரிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்கள், தலைமைச் செயலகம் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த […]
“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்கும் வரை மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா தெளிவான விளக்கம் அளித்து […]
சென்னை: அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்ல இருக்கிறார். அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள நிதி, புதிய திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவை குறித்து கோரிக்கை […]
ரஜினி கட்சி ஆரம்பிப்பது கடினம்தான் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னதையடுத்து அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ரஜினி அவ்வப்போது அரசியல் சமூகம் குறித்து கருத்துகளையும் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ரஜினி கட்சி ஆரம்பிப்பது கடினம்தான் என்றார். மேலும் அவரது நடவடிக்கை சந்தேகமாகவே உள்ளது. தமிழகத்தில் அதிமுகவை மீறிய சக்தி எதுவுமில்லை. திமுக கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படுகிறது. […]
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ , தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மிகவும் ராசியானவர் என்றுகூறினார். 40 ஆண்டுகளுக்கு பின் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் நேற்று முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது. அதை கண்காணிக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்றார். அப்பொழுது செய்தியாளர்ககளை சந்தித்த அவர், தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி மிகவும் ராசியானவர். அதன் காரணமாகவே நீரிநிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அதிமுக […]
சாத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கிராம கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமாசுப்பு மனுதாக்கல் செய்துள்ளார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான இவர் தன்னை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ததற்காக ஊர் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். கிராம மக்களின் ஒப்புதலைப் பெறாமல் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ராமசுப்பு மனு […]
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மசோதாவில் வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக அவர் அறிவித்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்திஎன்று விமர்சித்தார். சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது…. ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதை […]
முதல்வராக எண்ணுபவர்கள் வேணுமென்றால் நித்யானந்தாபோல் தனியாக தீவு வாங்கி, முதலமைச்சர் ஆகலாம் என்று ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.!! சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை செலுத்தினர். இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது, ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். […]
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ச்சியாக அதிமுகவின் கலைப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் தொழிநுட்ப அணி ஆகியவை அமைப்பு சாரா அணிகளாகச் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த அணிகள் […]
நடிகர் கமலஹாசனுக்கு என்ன ? தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் , சிவாஜி கணேசன் அவர்களே தேர்தலை சந்தித்து வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. அவரை விட மிகச் சிறந்த நடிகர் இல்லை அதே நிலைமைதான் கமலஹாசனுக்கு ஏற்படும். கமலஹாசன் வயது முதிர்ந்த காரணத்தினாலே அவர் அரசியல் என்று முன் ஏற்பாடு செய்து கொண்டார்.அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் படத்தை பார்த்தால் கூட போதும் என்ற நிலைக்கு […]
தேர்தல் நடத்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று அனைத்து கட்சியினருடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக, […]
சுஜித் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 10 லட்சமும் அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம்தேதி மாலை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்க நடைபெற்ற 80 மணி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. சுஜித்துக்காக நாடே அஞ்சலி செலுத்திவருகிறது. இந்நிலையில், முதலமைச்ச எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் […]
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி நடைபெற்றது. ஓட்டு மொத்த தமிழகமும் சுஜித் எப்படியாவது உயிருடன் வர வேண்டும் […]