Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், இஸ்லாமிய மத குருமார்கள் போராட்டங்களை தூண்டி விடுவதாக கூறிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் பெரியகுளம் போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏவிற்கு எதிராக நாடு முழவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் நேற்று இந்திய தேசியக்கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் கண்டன போராட்டம் நடத்தினர். பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஜாமியா துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு 14 நாள்கள் காவல்!

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு…. குற்றவாளியின் திட்டமிட்ட தாக்குதல் ..! பேஸ்புக் பதிவால் வெளிச்சம் ..!! 

டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்கு வெளியே மாணவர்கள்  நடத்திய போராட்டத்தின் போது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டார் இதில்ஒருவர் காயம் அடைந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. CAA  திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் என்பதால், ராஜ்காட்டில் அமைந்துள்ள  காந்தியின் நினைவிடத்திற்கு  அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர்.  பேரணியாக சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்’

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கும் என கனிமொழி எம்பி தெரிவித்தார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்..!!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தானில் தீர்மானம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போன்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாநிலத் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை காட்ட உரிமை உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக […]

Categories

Tech |