இன்றைய காலகட்டத்தில் ஏராளமானோர் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சில பட்டதாரி வாலிபர்கள் வெளிநாட்டில் கிடைக்கும் வேலைகளை விட்டு விவசாயத்தில் சாதித்து வருகின்றனர். பெண்கள் சிலர் விடா முயற்சியோடு விவசாயத்தை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். விவசாயத்தில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் கடினமான வேலைகளை எளிதாக செய்ய பயன்படுகிறது. இதனால் நேரமும் மிச்சமாகும். தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக விவசாயம் செய்வதற்கு பல்வேறு உபகரணங்களை கொண்டு பிரத்யேகமான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் […]
Tag: agriculture
பொதுவாக வட்டார இலக்கியங்கள் பெரும்பாலும் நமது வாழ்வை நகல் எடுப்பவையாகவே உள்ளது. குறிப்பாக ஆர்.சண்முகசுந்தரத்தின் “நாகம்மாள்”, ராஜம் கிருஷ்ணனின் “குறிஞ்சித்தேன்”, “கரிப்பு மணிகள்”, சி.சு.செல்லப்பாவின் “வாடிவாசல்”, ச.பாலமுருகனின் “சோளகர் தொட்டி” ஆகிய வட்டார இலக்கியங்கள் முக்கியமானவை ஆகும். பாமா, இமையம், பெருமாள் முருகன், ஜோ டி குரூஸ் உள்ளிட்டோர் வேளாண், மீனவ, பழங்குடியினச் சமூகங்களை மையமாகக் கொண்டு எழுதி வருகின்றனர். அந்த அடிப்படையில் உத்தமசோழனின் “சுந்தரவல்லி சொல்லாத கதை”, கீழத்தஞ்சையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் ஆகும். […]
விவசாயத்தில் பயிர் வளர்ச்சி வானிலையுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. இதில் சில பயிர்கள் முளைப்பதற்கும், அதனுடைய வளர்ச்சியை தொடருவதற்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வெப்பநிலை தேவைப்படுகிறது. அதனடிப்படையில் விவசாயிகள் விதைப்பு, பாதுகாப்பு, அறுவடை மற்றும் வயல் நடவடிக்கைகளுக்கான நேரத்தை திட்டமிடுவதன் மூலம் வானிலை பாதிப்புகள் மற்றும் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் பயிர் நிலைமைகள் மற்றும் மண்ணின் பயனுள்ள தகவல்களை வழங்க சில அளவீட்டு தொகுப்பை வழங்குகிறது. அவை, 1. காற்று மண் […]
வீட்டில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாம் ஆசைப்பட்டு வைக்கும் அனைத்து செடிகளும் நாம் செய்யும் சிறு தவறினால் செழிப்பாக வளர்வது இல்லை. 5 முக்கியமான தவறுகளை தவிர்த்தால் மாடித் தோட்டத்தில் உள்ள செடிகள் நன்றாக வளரும். முதலாவதாக நாம் செய்யும் தவறு தொட்டியில் மண்ணை நிரப்பி செடியை நட்டு வைப்பது தான். இப்படி செய்யக்கூடாது. மண்ணில் மட்கக்கூடிய பொருட்களான சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள், காய்ந்த இலை போன்றவற்றை […]
மதுரை மாவட்டத்தில் மோதகம் என்னும் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ, எம்.பி.ஏ என்ற பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கின் போது தனது பணியை விட்டுவிட்டு முழு நேர விவசாயியாக மாறி விட்டார். இவர் தனக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் வெறும் திட்டமிடுதல் மட்டும் சரியாக இருந்தால் விவசாயத்தில் சாதித்துவிடலாம் என்பதை நம்பி இறங்கினார். இவருடைய தந்தை மீனாட்சி சுந்தரம் என்பவர் விமானப்படை பிரிவில் பணிபுரிந்து ஓய்வு […]
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களது குறிக்கோளை மனதில் வைத்து கொண்டு பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பலர் வெளிநாடுகளுக்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். விவசாயம் செய்வதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தையூர் கிராமத்தை சேர்ந்த கற்குவேல் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டு விவசாயம் செய்து அசத்தி வருகிறார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு மும்பையில் இருக்கும் ஐடிசி மராத்தா ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். […]
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி புதுவயல் கருநாவல்குடி பகுதியில் விவசாயியான பா.மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பகல் நேரத்தில் டெய்லராகவும், காலை மற்றும் மாலை நேரத்தில் தனது விவசாய வேலைகளையும் பார்த்து வருகிறார். இந்நிலையில் மணி 4.5 ஏக்கரில் வாழை, மல்லிகை, மிளகி நெல் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் குறித்து மணி கூறியதாவது, நான் ஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். 10 மாதங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் வாழைத்தார் 200 முதல் […]
கொரோனா அச்சம் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே முககவசம் அணிந்தும், தலையில் வேப்பிலையுடனும் பெண்கள் நாற்று நட தொடங்கியுள்ளனர். நாற்று நடவுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் வறுமை விரட்டுவதால் 20 பெண்கள் தலையில் வேப்பிலைகளை சொருகிக்கொண்டு, விவசாய பணியில் இறங்கியுள்ளனர். குலவையிட்டு பாட்டு பாடிக்கொண்டே நாற்று நடும் பெண்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்றாம் போகத்தில் நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள், நெல் விதைப்பு, நாற்று நடவு அறுவடை என அனைத்தும் எந்திர மயம் ஆகிவிட்ட போதிலும், வேறு வேலைகள் இல்லாததால் விவசாய பணியில் […]
கென்யா உள்ளிட்ட ஆறு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெட்டுகிளிகள் மீண்டும் விவசாயப் பயிர்களில் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, தெற்குசூடான், உகாண்டா, தான்சானியா ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளன. அந்த வெட்டுக்கிளிகள் இதுவரை பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்களை சேதம் ஆக்கி உள்ளன. இதை தொடர்ந்து வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த சிறிய விமானம் மூலமும், ஊழியர்கள் மூலமும் பூச்சி […]
தர்மபுரியில் தக்காளியை பறிக்க ஆளில்லாமல் அழுகி வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அது நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ள சமயத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்குதடையின்றி செல்லலாம் என்று அரசு அறிவித்த போதிலும், தக்காளியை பறிக்க கிராம மக்கள் யாரும் முன் வருவதில்லை என்பதால், தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் […]
இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட கூறிவிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை வீணாக திறந்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக இரண்டாம் போக நெல் சாகுபடியை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பியே தொடங்குவர். அந்த வகையில் கடந்த வருடம் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கிய போதிலும் போதிய மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் படாமல் விவசாயிகள் […]
திருவண்ணாமலையில் விவசாயியை திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்கும் அவரது தந்தைக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் பகுதியை அடுத்த முனியன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவரது மகள் அரசம்மாவை இன்ஜினியரிங் படிப்பு படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்து 27 வயது ஆகும் நிலையில் அவரை வெளிநாடு மாப்பிள்ளைகளும், ஐடி கம்பெனியில் பணிபுரியும் மாப்பிள்ளைகளும் தொடர்ந்து பெண் கேட்டு வந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் சம்மதம் தெரிவிக்காத அரசம்மா, அதே […]
நாமக்கல் பகுதியில் இரவோடு இரவாக நடைபெற்று வரும் தீவனப்புல் அறுவடையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்கள் கஷ்டபட்டு உழைத்து வருகின்றனர். நாமக்கல் பகுதியில் இரவில் சோளத்தட்டு பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால் அதில் உள்ள இனிப்பு சுவை மாறாமல் இருக்கும் என்பதாலும் பெரும்பாலும் இதன் அறுவடை பணி இரவிலேயே நடைபெறுகிறது. கால்நடைகள் வளர்ப்பில் பசுந்தீவனம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதிலும் பச்சை சோளத்தட்டு என்பது கால்நடைகளுக்கு பிரதான தீவனமாக உள்ளது. நள்ளிரவில் டார்ச் லைட் வெளிச்சத்தை மட்டுமே துணையாகக் […]
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 18 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை அடுத்த இளைய நயினார் குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரம். விவசாய தொழில் செய்து வரும் இவர், தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கேழ்வரகு கம்பு போன்ற தானியங்களையும் சாகுபடி செய்து வருகிறார். இந்த பயிர்களுக்கு கால்நடைகளின் கழிவுகளையும், தாவரங்களையும் போட்டு இயற்கையான உரம் […]
நீலகிரியில் உறைபனியினால் தேயிலை பயிர்கள் கருகிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்தது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்திலேயே குன்னூர் பகுதியில் தான் அதிக பொழிவை தந்தது என்று கூறலாம். அதன்படி மழைப்பொழிவை நம்பி விவசாயிகள் பச்சைத் தேயிலையை பயிரிட்டனர். அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை மழை பொழிந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் முதலிலே உரை பனி […]
வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறையினரின் எதிர்பார்ப்புஎன்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நாட்டின் உயிர்நாடியாக திகழும்விவசாயத்துறை ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி பேருக்கு வாழ்வாதாரமாக உள்ள இத்துறை நாட்டின் வளர்ச்சியில் சுமார் 18% பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 6.3% ஆக இருந்த இத்துறையின் வளர்ச்சி விகிதம் 2019ஆம் ஆண்டு 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம் கடந்த ஜனவரி […]
தமிழகத்தில் சம்பா அறுவடை நடந்து வரும் கடலூர் மாவட்டத்தில் தான் நெல் பயிரில் வைரஸ் நோய் தாக்கி விவசாயிகளை கண்ணீரில் மிதக்க வைத்து வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலம் பூண்டி, சித்தலம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி காணப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் பொங்கல் திருவிழாவை தங்கள் […]
கோடீஸ்வரன் முதல் சாமானியன் வரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 2020-2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையை நோக்கி செலுத்த அரசாங்க செலவினங்கள், ஏன் சரியான செயல் என்று பொருளாதார வல்லுநர் மகேந்திர பாபு குருவா தெரிவிக்கிறார் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான முதல் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைப்பார். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று பேசப்படும் இன்றைய […]
இந்த ஆண்டுக்கான பட்ஜெட், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொது மக்கள் செலுத்தும் வருமான வரியில் விலக்கு அல்லது நிவாரணம் வழங்கவேண்டும் என வரி வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதோ மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வருமான வரி செலுத்துவோர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். வரி விலக்கு, நிவாரணம் என எதிர்பார்ப்புகள், […]
வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா இந்தியாவின் பொருளாதாரத்தை விவசாயத் துறையின் மூலம் உயர்த்த என்ன தேவை என்பதை விளக்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஒரு சீரான பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் என கருதப்படுகிறது. பட்ஜெட் தொடர்பான அனைத்து விவாதங்களுக்கிடையில், விவசாய பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா பேசிய போது நொறுக்கப்பட்ட பொருளாதாரத்தை விவசாயத்தால் எவ்வாறு புதுப்பிக்க […]
திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிடப்பட்ட சுமார் 80 கிலோ வெங்காயம் விற்பனைக்கு வரவுள்ளது. திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வளாகத்தில் உள்ள அங்காடி மூலமாக விற்கப்பட்டு வருகின்றன. சிறைக்குள் பல்வேறு பொருட்களை தயாரித்து வரும் கைதிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வாறு சிறையில் பயரிடப்பட்ட கரும்புகள் பொங்கல் திருவிழாவை ஒட்டி விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில் இயற்கை முறையில் சின்ன வெங்காயத்தை கைதிகள் பயரிட்டு தற்போது அறுவடை செய்து உள்ளனர். […]
தேனி அருகே வாடல் நோய் தாக்குதலால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை சுற்றியுள்ள வடுகப்பட்டி ஜெயமங்கலம் சில்வார்பட்டி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நோய் தாக்குதலால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் நோயின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நாட்டு மல்லியுடன் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு உள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரத்தை சுற்றியுள்ள மருதங்கநல்லூர், திம்மநாதபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாட்டு மல்லி சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள சின்ன வெங்காயத்தை தங்களின் வீட்டு பயன்பாட்டிற்காகவும் அவர்கள் தேவையை அவர்களே பூர்த்தி செய்யும் விதத்திலும் நாட்டு மல்லியுடன் ஊடுபயிராக விவசாயிகள் பயிரிட்டுள்ளது நல்ல விளைச்சலையும் வரவேற்பையும் […]
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தின் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் ஜூனில் தொடங்க வேண்டிய முதல் போக சாகுபடி சற்று தாமதமாக ஆகஸ்டில் தொடங்கியது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அறுவடை பணிகள் […]
சேலத்தில் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அதிகம் உற்பத்தி செய்யப்பட அதிலிருந்து உற்பத்தியாகும் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி ஆகியவை கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் மகாசிவராத்திரி பண்டிகை வருவதால் வடமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் விலை அதிகரித்து டிசம்பர் மாதம் ஸ்டார்ச் 90 கிலோ அரிசி மூட்டை 4,150 […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பட்டாணி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பள்ளங்கி கோம்பை பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பட்டாணி பயிரிடப்பட்டுள்ளது. அங்கு நிலவும் பனிப்பொழிவு மற்றும் இதமான காலநிலை காரணமாக பட்டாணி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது 55 முதல் 60 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தவருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினருக்கு, அந்த விவசாயி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் விவசாயம் செய்வதற்குப் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, பிரகாஷ் தனக்கு தெரிந்த நபர்களின் பரிந்துரைக்கிணங்க கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை அணுகி தனது பிரச்னையை முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், உழவு […]
நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்த விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நெல்லுக்கு குவிண்டால் 2500 ரூபாய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது,செய்தியாளர்களை சந்தித்த, பி.ஆர்.பாண்டியன் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். மேலும், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில அரசுகள் 2 ஆண்டு […]
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரத்தில் விளை நிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது . கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 1/4லிட்டர் மருந்து தேவைப்படும். ஆனால் இவ்வகை ட்ரோன்களை வைத்து மருந்து தெளிக்கும் போது 110மில்லி இருந்தாலே போதுமனதாக உள்ளது .இந்த முறையில் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 700 மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது. .உளுந்து ,மக்காச்சோளம் ,கம்பு போன்ற பயிர்களுக்கு இந்த முறையில் மருந்து தெளிக்கும் போது நல்ல முறையில் மகசூல் […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே படைபுளு தாக்குதலிலிருந்து மக்காச் சோளப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை அடுத்த தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு படைபுளு தாக்குதலால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை இந்த ஆண்டு தவிர்க்கும் பொருட்டு வேளாண்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்கி அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தடையின்றி யூரியா வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் பருவ மழையை எதிர்பார்த்து வேளாண்மை செய்யப்பட்ட பயிர்கள் 40 நாட்கள் கடந்த நிலையில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே யூரியா வழங்கும் சமயங்களிலும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விளாத்திகுளம் புதூர் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்புடன் யூரியா விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி […]
நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததையடுத்து அப்பகுதிகளில் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இப்பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தற்போது நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு […]
எண்ணுரில் இருந்து மதுரைக்கு எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வரும் எரிவாயு பைப்லைன் மூலம் 215 கிலோ மீட்டர் தூரம் மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்த தற்பொழுது பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாலூர் ஊராட்சியில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் ஒருபுறம் எண்ணைய் நிறுவனம் அழைப்பை […]
வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர். சிவகங்கையில் உள்ள மவுண்ட் லிட்டர் என்ற தனியார் பள்ளிகள் பாடத்திட்டத்துடன் சேர்ந்து வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் பணிகளையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை பகுதிக்கு அருகில் உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண் பண்ணைக்குப் பள்ளி சார்பில் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் வயலில் இறங்கி பயிரிடப்பட்ட செடிகளை பார்வையிட்டனர். அதன்பிறகு ஆடுகள் வளர்க்க […]
மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 […]
கடையநல்லூரில், வெண்டைக்காய் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் ,கடையநல்லூரில் வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாகவுள்ளதால் லாபம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையாகிறது மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே கேந்தி பூக்கள் உற்பத்தியில் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அடுத்த சிலால் கிராமத்தில், கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் புதியமுயற்சியாக விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்தில் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கும் மாலை கட்ட அலங்காரம் செய்ய பயன்படும் கேந்திப்பூக்களை அதிகமாக பயிரிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழகமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் கேந்திப்பூக்கள் உற்பத்தியில் ஈடுபடுவதாக கூறுனர் .மேலும் கேந்தி […]
அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் […]