கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகம் 2 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புத்தபூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏர்-இந்தியா தலைமை அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்த உள்ளதாகவும், அதற்காக 2 நாட்கள் அலுவலகம் மூடப்படும் வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், […]
Tag: Air India
நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’, பொறுப்பற்ற மத்திய ஆட்சியாளர்களால், 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை முழுமையாக தனியார் முதலாளிகளுக்கு விற்றுவிட மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு வந்து சேர வேண்டிய தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தற்போது பதில் அளித்துள்ளது.அதில், “குடியரசுத் தலைவர், […]
ஏர் இந்தியா விற்பனைக்கு தயார்
ஏர் இந்திய நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஏர் இந்தியாவில் பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் […]
பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கான இறுதி வரைவறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கான வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள், விற்பனை ஒப்பந்தத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என அரசு சார்பில் […]
ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சேவையை 6 விமான நிலையங்கள் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஞ்சி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே, கொச்சி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட விமான நிலையங்களில் வியாழக்கிழமை மாலை முதல் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்ட உள்ளதை உறுதிப்படுத்திய ஏர் இந்திய அதிகாரிகள், தற்போதைய நிலையில் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்களுடன் […]