முக கவசத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த வாலிபர் சோதனையின் போது வசமாக சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய கமிஷனர் ராஜன் சௌத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தி வரபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் விமானநிலைய கமிஷனரின் உத்தரவின் பேரில் துபாயில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]
Tag: airport
திருச்சி விமானநிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணிற்கு காலை வேளையில் ஒரு போன்கால் வந்துள்ளது. இதனை திருச்சி விமான நிலையத்தின் நிலைய மேலாளரான ஆல்பர்ட் என்பவர் எடுத்து பேசியுள்ளார். அதன் எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தகுதி இல்லாமல் விமான நிலைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருச்சி விமான நிலையத்திற்குள் குற்றவாளிகளுக்கு […]
போகி பண்டிகையன்று பொதுமக்கள் அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கேற்ப பொதுமக்கள் தனது வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருட்களை எரித்து கொண்டாடுவர். இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றி மீனம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, நங்கநல்லூர், பல்லாவரம், கொளப்பாக்கம், பம்மல், பொழிச்சலூர், மணப்பாக்கம் பகுதிகள் உள்ளன. இந்த […]
விமான நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டதால் சிட்னிக்கு பயணிக்க இருந்த பெண்களை நிர்வாணமாக சோதனை செய்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டார் தலைநகரான தோஹாவில் அமைந்துள்ள ஹேமாத் விமான நிலையத்தில் ஊழியர்கள் கழிப்பறையில் பிறந்த பச்சிளம் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ந்து உள்ளனர். குழந்தை யாருடையது என்பது தெரியாத நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக 13 ஆஸ்திரேலிய பெண்கள் உட்பட பெண் பயணிகள் அனைவரும் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு […]
திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். மேலும், லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்படுகின்றன. மேலும் உள்நாட்டு விமான பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி […]
இந்திய விமான நிலையங்களில் சுமார் பத்தாயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக செயலர் ப்ரீத்தி சூடான் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலர் ப்ரீத்தி சூடான் கூறும்போது, “இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் 43 விமானங்களில் வந்த ஒன்பதாயிரத்து 156 பயணிகளுக்கு இதுவரை […]
மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். கடந்த திங்கட்கிழமை மங்களூர் விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற பை ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆளில்லாத மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கபட்டன. விமான நிலைய சிசிடிவி காட்சிகளின்படி ஆட்டோவில் வந்து இறங்கிய தொப்பி அணிந்த நபர் கருப்பு பையை வைத்து விட்டு சென்றது […]
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில், சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையிலிருந்து விமானத்தில் வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ரிஸ்கான் (47), அல்தாப்(51), முகமது ரிமாஸ்(33), முகமது ரபீக்(39), முகமது லகீர்(36) மற்றும் பெண் பயணி சம்சுல் வாடிகா(45) […]
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்குக் கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் விமானத்தில் பெருமளவில் கரன்சி நோட்டுகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த ஷர்மிளா (33), கோவையைச் சேர்ந்த மகாலட்சுமி […]
சென்னை விமான நிலையத்தில் வங்கதேச பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் பரூக் அகமது (73). புற்றுநோயாளியான இவர், சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கே திரும்ப முடிவுசெய்தார். இதையடுத்து கொல்கத்தா வழியாக வங்கதேசம் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவரது உடமைகளைப் பரிசோதனை செய்யும்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக […]
கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ. 32 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பல்வேறு நாடுகளிலிருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளைச் சோதனையிடும் பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் (43), கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (26), புதுக்கோட்டையைச் சேர்ந்த உதயகுமார் (40) ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். […]
சென்னையில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகருக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு 172 பயணிகள், ஆறு விமான ஊழியர்கள் என 178 பேருடன் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுப்பிடித்தார். இதையடுத்து விமானம் புறப்படவில்லை. விமான பொறியாளா்கள் பழுதடைந்த இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டனா். எனினும் உடனடியாக சரிசெய்யமுடியவில்லை. இதனால் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. […]
தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் அரியவகை வன உயிரினங்களைக் கடத்தி வந்த நபரை வான் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்துள்ளார். அவரை அழைத்து அவரது உடைமைகளை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, அலுவலர்கள் திடுக்கிடும் விதமாக 12 கங்காரு எலிகள், 3 தரை நாய்கள், 1 சிவப்பு அணில், 5 பல்லிகள் உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்களை […]
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சென்னை அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள 12 கிராமங்களில் 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் வெளியான நிலையில் அந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் அனைவரும் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு விவசாயிகள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். […]
இலங்கையில் இருந்து கடத்தி வந்த அரிய வகை ஆமைகள், விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள், தாங்கள் எடுத்து வந்த உடைமைகளில் ஆமைகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆமைகளைக் […]
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமான இருக்கையின் அடியிலிருந்து ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு மஸ்கட்டிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து வந்தனர். அப்போது விமானத்தில் ஒருவரின் இருக்கைக்கு அடியில் கருப்பு டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் இருந்ததைக் கண்டு விமான நிலைய சுங்கத்துறைஅலுவலர்களுக்கு […]
சர்வதேச விமான நிலைத்திற்குக் கடத்தி வரப்பட்ட, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நபில் (24), சென்னையைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம்(35) ஆகியோரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் தனியறைக்கு […]
தலை முடியை கட் செய்து அயன் பட பாணியில் தங்கம் கடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டான். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு குற்ற , திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வது கவலை அளிக்கின்றது. குறிப்பாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபடுவது வேதனையின் உச்சம். இப்படி இவர்கள் மேற்கொள்ளும் கொள்ளை சம்பவம் வித்தியாசத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு காண்போரை விநோதத்தில் உறைய வைக்கின்றது. அப்படி சம்பவம் தான் கேரள கொச்சி விமான நிலையத்தில் […]
ரஷ்யாவில் ஒரு விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நுழைந்த சிவப்பு நரி ஒன்று அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் டொமோடிடோவோ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதிக்குள் திடீரென புகுந்த சிவப்பு நரி ஒன்று அங்கே அங்குமிங்கும் சுற்றி திரிந்து ஓடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். ஆனால் பயணிகள் சிலர் ஆச்சரியத்துடன் ஆர்வமிகுதியால் நரி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பின்தொடர்ந்து தங்கள் மொபைல் […]
ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சேவையை 6 விமான நிலையங்கள் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஞ்சி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே, கொச்சி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட விமான நிலையங்களில் வியாழக்கிழமை மாலை முதல் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்ட உள்ளதை உறுதிப்படுத்திய ஏர் இந்திய அதிகாரிகள், தற்போதைய நிலையில் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்களுடன் […]
பறவைகள் மோதியதால் விமானம் சேதமடைந்த நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. ரஷ்யாவில் சுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து சிம்ஃபெரோபோல் விமான நிலையத்திற்கு 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் Ural Airlines விமானம் புறப்பட்டுச் சென்றது. தீடிரென்று சென்று கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதில் விமானம் பெரும் சேதம் அடைந்தது. இந்நிலையில் இன்ஜினில் சேதம் அடைந்ததால் மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலப்பரப்பில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் மேற்கொண்ட 23 பேருக்கு லேசான […]
சூரிய மின்சக்தி மூலம் மாதத்திற்கு ரூ10 லட்சம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படுவதாக மதுரை விமான நிலைய இயக்குனர் தீபி ராவ் தெரிவித்துள்ளார். பசுமை நடவடிக்கையாக தேசிய விமான போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிலையங்களிலும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சூரிய மின்சக்தி மூலம் 170 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மேலும் மின்சார உற்பத்தியை […]
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகளை மறுத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட்பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் செல்வார்கள்.இந்நிலையில் நேற்று இரவு விஜயவாடா விமான நிலையத்துக்கு சந்திரபாபு நாயுடன் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பாவும் வந்திருந்தார். சந்திரநாயுடுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் நேரடியாக வி.ஐ.பி.க்கள் […]
ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமில்லாமல் துபாய், இலங்கை, தாய்லாந்து உட்பட வெளி நாடுகளுக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று எஸ் ஜி 58 என்ற விமானம் துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 189 பயணிகள் பயணித்தனர். விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்த போது […]
மின்கசிவினால் பெங்களூர் விமானநிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் உணவுவிடுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமானநிலைய காவல் துறையினர் தீ விபத்து குறித்து […]
மத்திய உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமிழகத்திலும் முக்கியமான நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுரை விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவு துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது இதனையடுத்து விமான […]
விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 172 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை வைக்க கோரி தேவர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இதே கோரிக்கையை வைத்து மதுரையில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படை , பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர் அமைப்புகளை […]