மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்லில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பாவாருக்கு நிதித்துறை மற்றும் திட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]
Tag: #AjitPawar
அம்பேத்கர் மணிமண்டப கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஹிந்து மில்ஸ் பகுதியில் நடைபெற்றுவரும் அதன் கட்டுமானப் பணிகளை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க நாங்கள் முயற்சி […]
கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத்தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், […]
மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் சிவசேனா கூட்டணி அரசு சார்பில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபித்தார் மகாராஷ்டிராவில் நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது. அம்மாநிலத்தின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேறார். இந்நிலையில் மகாராஷ்டிரா கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் மஹாராஸ்டிரா கூட்டணி அரசு பெருபான்மைக்கு தேவையான 145 இடங்களுக்கு 169 இடங்கள் […]
மஹாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்ற அரசு அதிரடி திட்டமாக 3 திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். அவருடைய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.இந்த சூழ்நிலையில் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து (மகா விகாஸ் அகதி ) என்ற கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக செல்ல வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் என்று […]
அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது குறித்து, சரியான நேரத்தில் பதில் அளிப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது தவறு எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குச் சரியான நேரத்தில சரியான பதிலளிப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ‘ நான் என்சிபியில் தான் இருக்கிறேன். […]
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு நேற்று சுமூகமான முடிவு எட்டப்பட்ட நிலையில், இன்று வெற்றிபெற்ற 288 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஒரு மாத காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மகாராஷ்டிராவில் ஆட்சியமைவதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடும் போராட்டத்திற்குப் பின் தான் நினைத்ததை சாதித்துள்ளது சிவசேனா. சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவுக்கரம் நீட்டி, காங்கிரஸோடு கூட்டணியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பாலமாக […]
தொடர்ந்து இழுப்பறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முடிவுக்கு வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை பதவி […]
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 162 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரே இடத்தில் கூடி தங்களின் பலத்தை நேற்று காட்டினர். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். துணை முதலமைச்சர் அஜித் பவாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதனை தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதிபடுத்தியுள்ளார். மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், […]
தொடர்ந்து இழுப்பறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முடிவுக்கு வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை […]
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றது பாஜக. இதில் முதல்வராக பாஜகவின் […]
மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா_வில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளின் இடையே இருந்த முதல்வர் பதவி பகிர்வில் பாஜக உடன்படாததால் யாரும் ஆட்சி அமைக்க முன்வர வில்லை. இதை தொடர்ந்து பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது.அதே நேரத்தில் சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தன.ஆனால் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் […]
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா_வில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளின் இடையே இருந்த முதல்வர் பதவி பகிர்வில் பாஜக உடன்படாததால் யாரும் ஆட்சி அமைக்க முன்வர வில்லை. இதை தொடர்ந்து பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது.அதே நேரத்தில் சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தன. இதை தொடர்ந்து கடந்த […]
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. இவ்வழக்கில் சிவசேனா சார்பாக கபில் சிபல், மத்திய அரசு சார்பாக அரசு துணை […]
மஹாராஷ்டிரா அரசியல் உருவாக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்: இடைக்கால சபாநாயகர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் மறைமுக வாக்கெடுப்பு நடத்த கூடாது நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்பட வேண்டும் மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும் சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூட்டப்பட வேண்டும் உறுப்பினர்கள் பதவியேற்பு நடத்த வேண்டும் .
மகாராஷ்டிராவில் பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பெரும்பான்மைக்கான […]
இரவில் தொடங்கப்பட்டட பாஜக ஆட்சி இரவோடு இரவாக மறைந்து போகும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜயந்த் பாட்டில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக- 105 தொகுதிகளும், சிவ சேனா – 56 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் – 54, காங்கிரஸ் – 44 தொகுதிகளையும் வென்றன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த சிவ சேனா, இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என பாஜகவை […]
நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் மகாராஷ்டிர அரசியல் களத்தின் முக்கியத் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து காங்கிரஸ்-என்.சி.பி.-சிவசேனா ஆகிய கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியிட்ட தேதியிலிருந்து இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக, சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பாஜகவுடன் கைகோர்த்தது தான் அனைவரையும் வாயைப் […]
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆதரவு கடிதத்தை அம்மாநில ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கோரி, உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்ற நிலையில், இந்த விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அதிகாலை அவரச அவரசமாக நீக்கப்பட்டு, திடீரென ஆட்சி […]
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் ஒப்புதல் இல்லாமல் பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அஜித் பவாரின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று பாஜக, தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரும், சரத் பவாரின் மருமகனுமாகிய அஜித் பவார் தான் ஆட்சியமைக்க பாஜகவுக்கு உதவியுள்ளார். இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது […]
மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா அரசியல் திருப்பம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா காங்கிரஸ் தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், ‘கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸிடம் எண்ணிக்கை இருந்தது. மொத்தம் 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவை எங்கள் கூட்டணி பெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இன்று காலை […]
தேசியவாத காங்கிரஸுடன் ஏற்பட்ட கூட்டணியால் மீண்டும் மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக நடைபெற்ற அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், யாரும் எதிர்பாரா விதமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் தேவேந்திர ஃபட்னாவிஸே பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு தேசியவாத […]
அஜித் பவார் எம்.எல்.ஏ.க்களிடம் வருகைப் பதிவேட்டில்(MLA Attendance) கையெழுத்து வாங்கிவிட்டு, அதனை பதவியேற்றுக் கொள்வதற்காக தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் நவாப் மாலிக் பகீர் தகவலை கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. சிவசேனாவுக்கு நேற்று வரை ஆதரவு அளித்து வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி, இன்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு தற்போது விடையளிக்கும் விதமாக […]
அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும், பாஜக ஆட்சியமைத்ததற்கும் சரத் பவாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். நிமிடத்திற்கு நிமிடம் மகாராஷ்டிராவின் அரசியல் நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மக்கள் தீர்ப்பளித்து கிட்டதட்ட ஒரு மாத காலமாகிய பின்னும் யார் முதலமைச்சர் என்ற இடியாப்ப சிக்கல் மட்டும் நீங்கவில்லை. இந்நிலையில், இன்று காலை தேவேந்திர ஃபட்னாவிஸூம் அஜித் பவாரும் அரவமின்றி முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர். […]