Categories
அரசியல்

”நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” திருநாவுக்கரசர் கருத்து ….!!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒற்றுமையாகத் தான் உள்ளது என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தற்போது திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் சுமுகமான பேச்சு வார்த்தைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சேர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சுமுகமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணினா..!… ”அப்படிதான் இருக்கும்” கே.எஸ்.அழகிரி கருத்து …!!

கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில், திமுக […]

Categories
தேசிய செய்திகள்

”பறிபோகும் பாஜக ஆட்சி”ஜார்கண்ட் மாநில முடிவு இதான் ….!!

காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் ஆட்சிக் காலம் டிசம்பர் 27ஆம் தேதியோடு முடிவடைவதால் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் பதவி… ”அப்பாக்கு வாக்கு கொடுத்துட்டேன்” அசைந்து கொடுக்காத உத்தவ்

முதலமைச்சர் பதவி குறித்து அமித்ஷாவிடம் முன்கூட்டியே பேசியதாகவும், தாக்கரே குடும்பத்தினர் ஒருவரை முதல்வராக்குவேன் என தனது தந்தை பால்தாக்கரேக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டா போட்டி காரணமாக இருகட்சிகளும் முரண்டு பிடித்துவருவதால் முடிவுகள் வெளிவந்த 15 நாட்கள் கழித்தும் ஆட்சி அமையவில்லை. சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கெளதம் மேனன் – ஏ.ஆர். ரகுமான்” 3_ஆவது முறை இணையும் வெற்றிக் கூட்டணி…!!

இயக்குநர் கெளதம் மேனன் – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் கெளதம் மேனன்- இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில், தமிழ் சினிமாவில் ’மியூசிக்கல் ஹிட்’ என்று அனைவரானும் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகியவை ஆகும். இந்த இரு படங்களிலும் நடிகர் சிம்பு தான் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது சில ஆண்டுகளுக்கு பிறகு ’பப்பி’ எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மற்ற மொழிகளை கற்பதில் எந்த தவறுமில்லை” பிரேமலதா கருத்து…!!

மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் எந்த தவறுமில்லை என்று பிரேமலதா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்தி கட்டாயமில்லை என மத்திய அரசு பின் வாங்கியது. இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரமேலதா செய்தியாளர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்கு வங்கி குறையவில்லை “உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி” பிரேமலதா உறுதி…!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக_உடனான கூட்டணி தொடருமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த கூட்டணி படு தோல்வி அடைந்தது. அதிமுக கூட்டணி சார்பில் தேனியில் போட்டியிட்ட துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். 4 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக_வும் பெரிதாக வாக்கு வாங்கவில்லை. கடந்த தேர்தல்களை ஒப்பிட்டு பார்த்தல் […]

Categories
அரசியல்

முடிவாகியது அதிமுக + தேமுதிக கூட்டணி…… கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு ….!!

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தமாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தொடர்பாக நீண்ட இழுபறி_க்கு பின்பு  அதிமுக-தேமுதிக கூட்டணி  இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி தொடர்பான இரண்டு கட்சிகளுக்கு -மிடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற இந்த தொகுதி உடன்பாட்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர். அதே போல தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் , பொருளாளர் பிரேமலதா […]

Categories

Tech |