பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி, அடுத்ததாக நடிக்கும் படம் 7 மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரக்கனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்து வருகிறார். இதேபோல், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அல வைகுந்தபுராமுலு’ படத்திலும் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/01/samuthirakani-759.jpg)