Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சு கொடுங்க…. நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள்… காஞ்சியில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்தில் அடுத்தடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஏழுமலை என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தனியார் துறையில் 5% வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனை அடுத்து உத்திரமேரூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த மாற்றுதிறனாளி… சரியான நேரத்தில் காப்பாற்றிய போலீசார்… வைரலாகும் காட்சிகள்…!!

ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது கீழே விழுந்த மாற்று திறனாளியை ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பன்வெல் ரயில் நிலையத்தில் இருக்கும் ஏழாவது பிளாட்பாரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ரேனு பட்டேல் மற்றும் போலீசார் ஹரிஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் 3:45 அளவில் அங்கு வந்த ரயில் புறப்பட்டபோது, மாற்றுத்திறனாளி ஒருவர் அதில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும்…. தேசிய கொடி ஏற்றி வைத்த திருநங்கை…. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தேசிய கொடியை ஏற்றி வைத்த திருநங்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூரில் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தற்காலிக வாகன ஓட்டுநராக பணிபுரியும் திருநங்கை சினேகா தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்த சினேகா […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்… வீட்டிற்கு திரும்பும் போது நடந்த விபரீதம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண் மீது வாகனம் மோதி விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்குளம் புதிய தெருவில் ஜெகநாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் கலைச்செல்வி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து கடலூர்-மதுராந்தகம் சாலையில் நடந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்னும் கல்யாணம் ஆகல… மாற்றுத்திறனாளி பெண்ணின் முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பாவதி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளியான யசோதா என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறாத காரணத்தால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் யசோதாவின் அறையில் திடீரென அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது யசோதா உடலில் மண்ணெண்ணையை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

20ஆம் தேதிக்குள் வந்துருங்க…! இலவச வாகனம் வாங்கிக்கோங்க…. கலெக்டர் அறிவிப்பு …!!

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் கால்கள் முழுமையாக வலுவில்லாத மற்றும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீங்க சொல்லுறத நம்ப முடில… இந்த இடத்தை விட்டு போகல… மாற்றுதிறனாளிகள் ஆவேச போராட்டம் …!!

கரடுமுரடான நிலத்தை சமன் செய்து தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் 82 மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல கவுண்டன்பாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட அந்த இடம் கரடுமுரடான பாறையாக இருப்பதால் அதனை சமன் செய்து தரக்கோரி கடந்த நவம்பர் மாதம் நல்ல கவுண்டம்பாளையத்தில் […]

Categories

Tech |