பொதுமக்கள் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு சுப்ரமணியபுரம், தாயில்பட்டி, சல்வார்பட்டி, வெற்றிலையூரணி, மீனாட்சிபுரம், கனஞ்சம்பட்டி, வெம்பக்கோட்டை, போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தினமும் சிகிச்சைக்காக தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக […]
Tag: ambulance
தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்சை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் நிலையத்தில் மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் என்பவர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது அரியூர் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த காயமடைந்த ஏழை விவசாயி ஒருவரிடம் ஆம்புலன்ஸ் டிரைவர் அதிக தொகை கேட்டு விலை பேசியது பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தை அடுத்த கட்டக்கல் கிராம பகுதியை சேர்ந்த அமலுராம் என்ற விவசாயி, மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று அவர் மீது மோதியதில், கண்களிலும், தலையிலும் பலத்த காயம் அடைந்தார். பின் அவர் சிகிச்சைக்காக கான்கர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த […]
புதிய பேருந்து நிலையம் அருகே கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் மினி ஆம்புலன்ஸ் ஒன்று, எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த பாளையங்கோட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து போலீசார் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்புலன்ஸ் தடையின்றி செல்ல தடுப்பு கம்புகளை அகற்றுமாறு சமூகஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் தெருக்களிலும் அந்த தெருவை சுற்றியுள்ள பகுதிகளிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு […]
திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆம்புலன்சில் இருந்து திருடன் ஒருவன் செல்போன் திருட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விபத்தில் காயமடைந்த ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வாகனத்திலேயே செல்போனை வைத்து விட்டு மருத்துவமனைக்குள் அவர் சென்ற நிலையில் அவரது செல்போன் திருடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது ஒரு சிறுவன் ஒருவன் செல்போனை திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகி […]