Categories
உலக செய்திகள்

176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமான விபத்து: கருப்பு பெட்டியை ஒப்படைக்க கனடா வலியுறுத்தல்

176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சிடம் ஒப்படைக்க கோரி கனடா அரசு ஈரானை வலியுறுத்தியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளாகியது.இந்த விபத்தில் 57  கனடா நாட்டு மக்கள்  உட்பட மொத்தம் 176 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதலில் அறிவித்த ஈரான், பின்னர் ஈரான் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப்பின் அறிவிப்பு எதிரொலி – உயர்வைச் சந்தித்த பங்குச்சந்தை

மும்பை: ஈரானுடன் அமைதியான தீர்வை விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கணிசமான உயர்வைச் சந்தித்தன. இந்திய பங்குச்சந்தைகள் இன்று சிறப்பான உயர்வைச் சந்தித்துள்ளன. கடந்த சனிக்கிழமை அமெரிக்கா ஈரானுக்கிடையே ஏற்பட்ட மோதல் போர் பதற்றச் சூழலாக உருவெடுக்க தொடங்கியது. அமெரிக்கா – ஈரான் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்திவரும் நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தையை விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து இன்று சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

போர்: டிரம்புக்கு ஸ்பீடு பிரேக்!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற அவையான ஹவுஸ் நேற்று (ஜனவரி 9) நிறைவேற்றியிருக்கிறது. இதன்படி அவையின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், 30 நாட்களுக்குள் ஈரானுடனான மோதலில் இருந்து யு.எஸ். படைகளை டிரம்ப் திரும்பப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் டிரம்ப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. ஈரான் ராணுவ தலைவர் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்க ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, ஈராக்கில் இருக்கும் இரு அமெரிக்க ராணுவ தளங்களின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை வெளியேற்றுவதே உண்மையான பழிவாங்கல் – ஈரான் அதிபர் உறுதி

தெஹ்ரான்: மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதே உண்மையான வெற்றி என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளங்களின் மீது புதன்கிழமை (ஜனவரி 8) அதிகாலை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறுகையில், ”  மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்காவை முழுவதும்  வெளியேற்றுவதே எங்கள் உண்மையான வெற்றி” என்றார். […]

Categories
உலக செய்திகள்

பழிவாங்குவோம்; ஈரானின் புதிய தளபதி சபதம்

ஈரானின் புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி ,சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக  சபதம் ஏற்றார்.   அமெரிக்க தாக்குதலில் ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். பின்னர் அவரது இடத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி,  கொல்லப்பட்ட சுலைமானின் இறுதி  சடங்கில் கலந்துகொண்டார். அப்பொழுது காணி அவரது பிரேதப் பெட்டியின் மேல் விழுந்து கதறி அழுதார். மேலும் சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக சபதம் ஏற்றார். மேலும் சுலைமானியின் பாதையில் […]

Categories

Tech |