Categories
உலக செய்திகள்

அவென்ஜர்ஸ் திரைப்பட வில்லன் போல உருவெடுத்த டிரம்ப் வீடியோ வெளியீடு …!!

அமெரிக்க அதிபர் டிரம்பை ஹாலிவுட் பட வில்லனைப் போன்று சித்தரித்து அவரது பிரச்சார குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது .   டிரம்பை ஹாலிவூட்திரைப்படமான  அவென்ஜர்ஸ் படத்தின் வில்லன் தானோஸ் போல சித்தரித்து டிரம்பின் பிரச்சார குழு வீடியோ ஒன்றை டுவிட்டரில்  வெளியிட்டுள்ளது.அந்த வீடியோவில் தானோஸ் உருவில் இருக்கும் டிரம்ப், நான் தவிர்க்க முடியாதவன் என்று சொடக்கு போடுகிறார் . அவென்ஜர்ஸ்  படத்தில் வில்லன் தானோஸ் ஒரு சொடக்கில் உலகத்தின் மக்கள் தொகையில் பாதிப்பேரை அளித்து விடுவார் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2  இடங்களில் துப்பாக்கிசூடு… 6 பேர் பலி… பயங்கரவாதிகள் சதியா?

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2  இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி சூடு சம்பவம் சர்வசாதாரணமாக அரங்கேறி கொண்டு இருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் தனக்கென்று துப்பாக்கி வைத்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் சாதாரணமாக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் நியூஜெர்சியில்நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில்  மர்ம […]

Categories
உலக செய்திகள்

ஐஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்திய நபர் உயிரிழப்பு..!!

விநோத சவாலான ஐஸ் பக்கெட் சவாலுக்கு அறிமுகப்படுத்திய   34 வயதான பீட் ப்ராடிஸ் என்ற அமெரிக்கர் உயிரிழந்தார். அமெரிக்காவிலுள்ள  போஸ்டன் எனும்  பகுதியை சேர்ந்த பீட் ப்ராடிஸ் , அங்குள்ள கல்லூரி பேஸ்பால் அணியின் முன்னாள் வீரர் ஆவார். நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதுதொடர்பான மருத்துவ ஆய்வுக்கு நிதி திரட்ட 2014ம் ஆண்டு குளிர்ந்த நீரை மேலே ஊற்றிக் கொள்ளும் வீடியோவை பதிவிட்டு வெளியிட்டார். அது வைரலானது .   அதனை தொடர்ந்து  பிரபலங்களான […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார் …!!

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .   அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 68- வது மிஸ் யூனிவர்ஸ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில்  பல நாடுகலில் இருந்து வந்த 90 அழகிகள் போட்டியிட்டனர். இதில்  தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி அவர்களை பின்னுக்கு தள்ளி பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டார்.  துன்சி மிஸ் தென்னாப்பிரிக்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இவருக்கு 2018ம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக தேர்வுசெய்யப்பட்ட  பிலிப்பைன்ஸ் அழகியான காட்ரியோனா கிரே,  […]

Categories
இராணுவம்

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய நவீன பீரங்கியை இந்திய ராணுவம் சோதனையிட்டது …!!

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் நவீன பீரங்கியை இந்திய ராணுவம் சோதனை செய்துள்ளது .   அமெரிக்காவிடமிருந்து கூடுகள் தொலைவு சென்று தாக்கும் வெடிகுண்டுகளை இந்திய ராணுவம் அண்மையில் வாங்கியது. அந்த குண்டுகளை அமெரிக்காவின் m777 நவீன ரக பீரங்கி மூலம் ராஜஸ்தான்  மாநிலம் பொக்ரானில்  இந்திய ராணுவம் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்தது. ஜெனரல் ரவி பிரசாத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீரங்கி மூலம் […]

Categories
உலக செய்திகள்

சுறாவை எதிர்கொண்ட 7 வயது சிறுவன்… நூலிழையில் உயிர் தப்பிய காட்சி.!!

கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்ட சிறுவனை சுறா மீன் தாக்கும் காணொலி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஆர்லாண்டோ பகுதியில் வசிக்கும் சாண்ட்லர் மூர் (7) என்ற சிறுவன், தனது தந்தையுடன் புதிய ஸ்மிர்னா கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளான். அப்போது, திடீரென்று மீன் ஒன்று வேகமாக சிறுவனின் சர்ஃபிங் பலகையில் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து கடலில் சிறுவன் தவறி விழுகிறான். பின்னர், சிறுவனின் சர்ஃபிங் பலகையில் பொருத்தப்பட்டிருந்த GoPro கேமராவை, அச்சிறுவனின் தந்தை ஆய்வு செய்துள்ளார். அதில், சிறுவனின் பலகை மீது […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ரகசியப் பயணம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்கானிஸ்தானுக்கு ரகசியமாகச் சென்று, அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்து ‘தாங்கிஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி கூறும் நிகழ்வில் பங்கெடுத்தார். உள்நாட்டுப் போரில் உழன்றுகிடக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று ரகசியப் பயணம் மேற்கொண்டார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே அமைந்துள்ள பக்ரம் விமானப் படை தளத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு தரையிறங்கிய ட்ரம்ப், அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ‘தாங்க்ஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க கடற்படை செயலர் பதவி நீக்கம்..!!

அமெரிக்க கடற்படை செயலர் ரிச்சர்ட் ஸ்பென்சரை அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்க கடற்படையில் ( NAVY SEAL) பணிபுரிந்து வரும் அலுவலர் எட்வர்ட் கேலர். இவர், 2017ஆம் ஆண்டு ஈராக்கில் பணியமர்த்தப்பட்டார். அப்போது, ஒரு பிணத்தின் அருகே நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எட்வர்ட் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு வரும் டிசம்பர் 2ஆம் தேதி விசாரணை நடைபெறவிருந்தது. இந்நிலையில், எர்வர்ட் […]

Categories
உலக செய்திகள்

கலிஃபோர்னியாவில் அதிர்ச்சி… பிறந்தநாள் பரிசாக துப்பாக்கிச் சூடு… 2 மாணவர்கள் மரணம்..!

கலிஃபோர்னியா மாகாணத்தின் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சவுகஸ் (Saugus) மேல்நிலைப்பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய 16 வயது மாணவன், திடீரென்று தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருகிலிருந்த மாணவர்களை நோக்கிச் சுடத்தொடங்கினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு 16 வயது மாணவியும், ஒரு 14 வயது மாணவனும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் […]

Categories
மாநில செய்திகள்

இது சும்மா டிரைலர் தான் மா…. அன்று EPS …..இன்று OPS …. கோட்டு சூட்டில் கலக்கல் …!!

பத்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள் பலர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் தூபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

அதிர்ந்து போன அமெரிக்கா.. ”ஆதிக்கம் செலுத்த போகும் கம்யூனிசம்”.. ஆய்வில் தகவல் …!!

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் இடதுசாரிகளுக்கு ஒரு மகத்தான ஆதரவு இருப்பது வெளியாகியுள்ளது. கம்யூனிச எதிர்ப்பை முன்னெடுக்கும் Victims of Communism Memorial Foundation என்னும் அமெரிக்க அமைப்பு கம்யூனிசக் கோட்பாடுகள் குறித்து அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள கருத்தை அறியும் விதமாக சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.கணக்கெடுப்பின் முடிவுகள் மக்களின் கம்யூனிச எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் என்று அந்த அமைப்பு எண்ணியது ஆனால் அந்தக் கணக்கெடுப்பு தந்த விவரங்கள், முற்றிலும் அதற்கு மாறானவையாக இருந்தது. அந்த ஆய்வில் 36 விழுக்காடு […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ட்ரம்ப் பதவி தப்புமா?… மக்கள் முன்னிலையில் விசாரணை..!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். இந்தச் சூழலில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை (Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மக்கள் முன்பு ட்ரம்ப் பதவி நீக்க விசாரணை – ஜனநாயகக் கட்சி

அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என ஜனநாயகக் கட்சியினர் அறிவித்துள்ளனர். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.இந்நிலையில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை ( Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.அமெரிக்க சட்டப்படி, ஒரு […]

Categories
உலக செய்திகள்

வர்த்தக ஒப்பந்தம்…. சீன அதிபருக்கு டிரம்ப் அழைப்பு..!!

அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன. இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

“சந்தேக மரணம்” இளம்பெண் கழுத்தை நெருக்கி கொன்ற மலைப்பாம்பு…… போலீசார் தீவிர விசாரணை……!!

அமெரிக்காவில் வீட்டில் வளர்த்த மலைப்பாம்பு கழுத்தை இறுக்கி அதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்கா இண்டியான பகுதியைச் சேர்ந்த லாரா என்ற இளம்பெண் தனது வீட்டில் 140 க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்தார். அதிலும் செல்லப்பிள்ளையாக மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார் லாரா. இந்நிலையில் கடந்த வாரம் அவரது வீடு பூட்டப்பட்டு உள்ளே துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டை உடைத்து […]

Categories
உலக செய்திகள்

இன்று சென்றடையும்……. விண்வெளியில் சமையல் செய்ய…… அதிநவீன சாதனம்……!!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட அதி நவீன சமையல் சாதனம் இன்று அவர்களை சென்றடைகிறது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சர்வதேச விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றை தயாரிக்க மாவு, மைக்ரோவேவ் ஆகியவற்றை அமெரிக்கா வெர்ஜினியா பகுதியிலிருந்து 3.7 டன் எடை கொண்ட சைக்னஸ்விண்கலம் மூலம் அனுப்பி வைத்தது. இந்நிலையில் சைக்னஸ் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பம் ஈர்ப்புவிசை […]

Categories
டெக்னாலஜி

சீனாவில் 5G …. ”அரண்டு போன அமெரிக்கா”….. இந்தியாவில் எப்போது ?

உலகிலேயே முதன்  முதலாக சீனாவில் 5 தொலைத்தொடர்பு சேவையை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் அறிமுகமானது 5G : தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை அறிமுகம் படுத்தி வரும் சீனா தற்போது அதை நிரூபித்துக் காட்டும் வகையில் மற்றொரு இணைய புரட்சியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. உலகிலேயே முதல் நாடாக சீனா 5G தொலைத்தொடர்பு சேவையை தனது நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் இணைய பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உள்ள சீனா தொழில்நுட்பத்தில் முன்னேறிய […]

Categories
உலக செய்திகள்

ஐபோன்ல பட்டன் எங்கய்யா? – ட்ரம்ப் புலம்பல் …..!!

தான் பயன்படுத்தும் ஐபோனில் ஹோம் பட்டன் இல்லாதது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிம் (ஆப்பிள் சிஇஓ), தற்போதுள்ள ஸ்வைப்பை-விட ஐபோனின் பழைய பட்டன் முறை எவ்வளவோ மேல்” என்று ட்வீட் செய்துள்ளது. தற்போது வெளியாகும் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் Full Screen மாடலாக வெளியாவதால் முன்பிருந்த பட்டன்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. பழைய ஐபோன் மாடல்களில் Home என்ற ஒரு பட்டன் இருக்கும், இந்த பட்டன் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றிய ட்ரம்ப்…. இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து.!!

தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றிவைத்த அதிபர் ட்ரம்ப், தீபாவளி திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக் கூறியுள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கியக் கொள்கையான மத சுதந்திரத்தை பேணும்வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் […]

Categories
உலக செய்திகள்

இது என்னப்பா புதுசா இருக்கு… “உடம்பில் தானாக சுரக்கும் ‘பீர்’… அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!!

விசித்திர நோயால் ஒருவருக்குத் தானாக உடம்பில் பீர் சுரப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் வடக்கு கோரலினா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வழியே வந்த நபரைச் சோதனை செய்யும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக்காகக் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் நான் குடிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில்,”அந்த நபரின் ரத்தத்தில் மதுவின் அளவு […]

Categories
உலக செய்திகள் வைரல்

இப்படி ஒரு பயணமா ? ”அசத்தலான பூசணி சவாரி” வைரலாகும் வீடியோ ….!!

அமெரிக்காவில் பூசணிக்காய்யை பயன்படுத்தி படகு சவாரி செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் எதாவது ஒரு சம்பவம் வினோதமாக மாறி சமூக வலைத்தளம் மூலம் வைரலாகி வருவதை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது ஒரு வீடியோ. அமெரிக்க நாட்டின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியை சார்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பெரிய அளவிலான பூசணிக்காய் ஒன்றை வளர்க்க வேண்டும் தொடர்ந்து முயற்சி செய்து , இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். அவரின் நீண்டகால […]

Categories
உலக செய்திகள்

412 கிலோ எடை கொண்ட பூசணிக்காய்….. படகு சவாரி செய்து அசத்திய விவசாயி.!!

தோட்டத்தில் வளர்ந்த பெரிய பூசணிக்காயை படகாக மாற்றி சவாரி செய்து அசத்தியுள்ளார் விவசாயி ஒருவர். அமெரிக்காவின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியில் வசித்துவருகிறார் ஜஸ்டின். இவர் கடந்த நான்காண்டாகப் பெரிய அளவில் பூசணிக்காய் வளர்க்க வேண்டும் என முயற்சி செய்துவந்துள்ளார். அவரது ஆசை போலவே இந்தாண்டு தோட்டத்தில் வளர்ந்துள்ள பெரிய பூசணிக்காயின் எடை 412 கிலோ இருந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். பூசணிக்காயை வைத்து வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்த ஜஸ்டினுக்கு புதிய சிந்தனை உதித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ஜி7 மாநாடு சொந்த விடுதியில் நடக்காது”…. அதிபர் ட்ரம்ப் உறுதி..!!

ஜி7 மாநாடு தனக்கு சொந்தமான விடுதியில் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஜூன் 10 – 12ஆம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடக்கவுள்ளது. புகழ்பெற்ற இந்த மாநாடு நடத்தப்படும் இடங்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு அமெரிக்க ட்ரம்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் தேசிய டோரல் மியாமி’ விடுதியில் நடைபெறும் என்று கடந்த வியாழக்கிழமை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

“துளசி கபார்ட் ஒரு ரஷ்ய கைக்கூலி”… ஹிலாரி கிளின்டன் குற்றச்சாட்டு..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் துளசி கபார்ட் ஒரு ரஷ்ய கைக்கூலி என முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசகரான டேவிட் பிளப்ஃபியுடன் சேர்ந்து பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஹிலாரி கிளின்டன், “ஜனநாயகக் கட்சியின் முன்னணி பெண் வேட்பாளர் ஒருவரை ரஷ்யா தன் கைக்குள் போட்டுக்கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யர்களின் விருப்பத்திற்குரியவராக அவர் விளங்குகிறார். அந்த நபரின் தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

பொலிவை இழந்து வரும் கோல்ப்… “அடுத்த ஆண்டு ஜி7 மாநாடு”… அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!!

ஜி7 மாநாடு புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் சுற்றுலா மையத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி7 மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ரிசார்ட்டில் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரம்புக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் கோல்ப் கிளப் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்த மாநாடு அங்கு நடைபெறவுள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் ஜி7 […]

Categories
உலக செய்திகள்

குர்து இனத்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – அமெரிக்கா நம்பிக்கை.!!

சிரியாவின் எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதோடு, குர்து இனத்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.     சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, அமெரிக்க படைக்கு ஆதரவாக நின்ற குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரை நிறுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்துவந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் […]

Categories
உலக செய்திகள்

”சீக்கிரம் எந்திரிப்பவன் நானல்ல” சிரிப்பலையை ஏற்படுத்திய அபிஜித் பானர்ஜி..!

நோபல் பரிசு அறிவித்த உடன் தூக்கத்தைத் தொடர திரும்ப படுக்கறைக்குச் சென்று விட்டதாக நகைச்சுவையுடன் அபிஜித் பானர்ஜி, நேர்காணலில் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவின் பூர்வக்கூடியான அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கும் அவரது மனைவியான எஸ்தர் டஃப்லோவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு நிறுவனத்தில் அளித்த பேட்டியில், ‘நேற்று காலை 6 மணியளவில் அவருக்கும் அவர் மனைவிக்கும் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவித்ததை அறிந்த பிறகு, உடனே அவர் தூக்கத்தைத் […]

Categories
உலக செய்திகள்

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? நோபல் வென்ற இந்தியர் – அபிஜித் பானர்ஜி…!!

பொருளாதாரத்துக்கான 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கு கிடைத்துள்ளது. என்னதான் இப்போது அமெரிக்காவில் பணியாற்றினாலும் அபிஜித் பானர்ஜிக்குப் பூர்வீகம் மேற்கு வங்கம்தான். 1961ஆம் ஆண்டு தீபக் – நிர்மலா இணைய தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் இந்த அபிஜித் பானர்ஜி. இவரது தந்தை கொல்கத்தா மாநில கல்லூரியில் பொருளாதார துறையின் தலைவராக பணிபுரிந்தார். இவரது தாய் கொல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்தார். புலிக்குப் பிறந்தது பூனையாகாது […]

Categories
தேசிய செய்திகள்

90% பொருளாதாரா மந்த நிலை….. கடும் வீழ்ச்சி….. இந்தியாவுக்கு சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை….!!

இந்த ஆண்டில் 90 சதவிகித நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என கூறியுள்ள சர்வதேச பண நிதியம் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவின்  வாஷிங்டன் அமைந்துள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குனரான கிறிஸ்டினா ஜியாஜீவா உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் உலக பொருளாதாரம்  ஒருங்கிணைந்த மந்த நிலையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அமெரிக்கா சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போர் தான் இதற்கு காரணம் […]

Categories
உலக செய்திகள்

“அச்சத்தில் உறைந்த பயணிகள்”… நடுவானில் கழன்ற விமானத்தின் எஞ்சின் மேற்கூரை..!!

அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினின் மேற்கூரை கழன்றதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகரில் இருந்து, யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புளோரிடாவின் ஆர்லண்டோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது  பாதி வழியில்  விமானத்தின் வலதுபக்க என்ஜினின் மேற்கூரை மெல்ல மெல்ல கழன்று ஆட்டம் கண்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக எஞ்சி மேற்கூரை கழன்றதை பார்த்த பயணி ஒருவர் பதறிப்போய் பணிப்பெண்ணிடம் சொல்ல, பணிப்பெண்  விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி  சற்றும் யோசிக்காமல் மீண்டும் புறப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இந்திய தேசிய கீதத்திற்கு இசையமைத்த அமெரிக்க ராணுவத்தினர்.!!

இந்திய தேசிய கீதத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் சிறப்பாக இசையமைத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக இந்தியா மற்றும் அமெரிக்கா ராணுவ வீரர்களுக்கு இடையே “யுத்த அப்யாஸ்” என்ற போர் ஒத்துகை பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான (2019) போர் ஒத்திகை பயிற்சி வாஷிங்டனில்  உள்ள லூயிஸ் தளத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில்  இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து, துப்பாக்கிச் சூடு, பீரங்கி மற்றும் போர் விமானங்களை எப்படி கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

போரை சந்திப்போம்…. இனி அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை இல்லை…. ஈரான் அதிபர் அதிரடி பேச்சு…!!

இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தான்  தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் மீது அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் தலைவர் கூறியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் பிரச்சனை” இந்தியாவிற்கு 28 நாடுகள் ஆதரவு… கதி கலங்கி நிக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் பிரச்சனையை நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா பாகிஸ்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஐநா பொது குழு கூட்டம் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பழக்கத்தை அதிகரிக்கச் செய்து அதை சுட்டிக்காட்டி பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி உள்ளிட்ட 28 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

9.11… 9.11…. 9.11… ”நாள் , நேரம் , எடை” அமெரிக்காவில் பிறந்த அபூர்வ குழந்தை….!!

அமெரிக்காவில் 9.11_ஆம் தேதி 9.11 மணிக்கு 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையுடன் குழந்தை பிறந்தது அனைவரையும் வியப்படையவைத்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு 11_ஆம் தேதி செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான வாஷிங்டன் பென்டகன்  , நியூயார்க் உலக வர்த்தக மைய  இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது பயங்கரவாதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோத செய்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 3,000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதிபயங்கர கொடூர தாக்குதலாக பார்க்கப்பட்ட இந்த துயரம் உலக நாடுகளையே உலுக்கியது. […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ”பின்லேடன் மகனை முடித்து விட்டோம்” ட்ரம்ப் உறுதி….!!

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளனர்.  ஒசாமா பின்லேடனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் பின்லேடன் பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவனாவான். பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு அட்டூழியம் செய்து வந்துள்ளான். இதையடுத்து அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோடாபாத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றது. இதையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்க அவரது மகன் […]

Categories
உலக செய்திகள்

40டன் வெடிகுண்டு…. விமான படை தாக்குதல்… ஈராக்கில் பரபரப்பு…!!

ஈராக்கை ஒட்டியுள்ள பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. மத்திய ஈராக்கில் உள்ள டைகிரிஸ் நதியின்  நடுப்பகுதியில் கானஸ் என்ற தீவு பகுதி உள்ளது. அப்பகுதியில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த நவீன ரக அமெரிக்க போர் விமானங்கள் டைக்ரீஸ் நதியின் குறிப்பிட்ட பகுதியில் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்… “பணியின்போது தகராறு”… 5 பேரை கத்தியால் குத்திய நபர் கைது..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பணியின்போது தகராறு ஏற்பட்டதில் சக ஊழியர்கள் 5 பேரை கத்தியால் குத்திய நபரை போலீசார்  கைது செய்தனர்.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டல்லாஹஸ்ஸி (Tallahassee) நகரத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் அன்ட்வான் பிரவுன் (Antwann Brown) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பணியின்போது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சக ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வெளியே சென்ற பிரவுன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து […]

Categories
உலக செய்திகள்

“கருத்து வேறுபாடு” நீ என்ன பதவிய விட்டு போறது, நான் தான் தூக்குவேன்… அதிரடி காட்டிய டிரம்ப்…!!

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார்.  அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற மூன்றாவது நபர் போல்டன். அவர் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் டிரம்புக்கு போல்டன் ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஈரான் விவகாரத்தில் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளுக்கு போல்டனே காரணம். இந்த தீவிர நிலைப்பாட்டை வடகொரிய, ஆப்கானிஸ்தான், ரஷ்யா தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

ரூ85,00,000…. அதிஷ்டமாக வந்த CASH…. செலவுக்கு பின் திருட்டு CASE..!!

அமெரிக்காவில் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்சம் ரூபாயை செலவு செய்த தம்பதிகள் வழக்கை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவின் பெனிசிலியா மாகாணத்திலுள்ள மாண்டீஸ்ட்டர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் ரிப்பனில் வில்லியம்ஸ். இவர்களது  வங்கி கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இதனை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், ஷோபி ரேஸ் கார்கள் வாங்கியது, நண்பர்களுக்கு உதவியது என்று பணத்தை தாறுமாறாக […]

Categories
உலக செய்திகள்

அன்னிய வர்த்தகத்தில் அசத்திய சீனா … அமெரிக்காவுக்கு மோசமான பதிலடி ..!!

சீனாவின் அன்னிய செலாவணி மதிப்பு அதிகரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கு அமெரிக்காவுடன் வர்த்தக போர் நீடித்து வருகிறது. இதனால் சீனாவின் அன்னிய செலவாணி கையிருப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு  மாறாக ஆகஸ்ட் மாதத்தில் 350 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி அன்னிய செலவாணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 3.1072 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கத்தால்  சீனாவின் அன்னிய செலவாணி […]

Categories
உலக செய்திகள்

“இன்ப அதிர்ச்சியால் விபரீதம்” மகளை துப்பாக்கியால் சுட்ட தாய்… அமெரிக்காவில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் சொல்லாமல் வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி தர முயன்ற இளம்பெண் தாயாலே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மகள் தாய்க்கு  இன்ப அதிர்ச்சி கொடுக்க மெதுவாக வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திருடன் ஒருவன் வீட்டிற்குள் வருவதாக கருதிய பெண் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு தனது படுக்கை அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்தார். அப்பொழுது உள்ளே ஒருவர் நுழைந்ததும் தாய் ஸ்பெஷல் ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டார். பின் சுடப்பட்டது தான் பெற்ற […]

Categories
உலக செய்திகள்

ஒருவழியாக முடிவை மாற்றிய ஹாங்காங்…. கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ்.!!

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ் பெறப்படும் என ஹாங்காங்  அறிவித்தது.     கடந்த 3 மாதங்களாக  சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்லும் திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான். ஆகவே அரசின் முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. மேலும்  ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலககோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் […]

Categories
உலக செய்திகள்

”கலிபோர்னியாவில் 34 பேர் உயிரிழந்த படகு தீ விபத்து ”…. 2 இந்தியர்களும் பலி.!!

கலிபோர்னியாவில் சுற்றுலா பயணிகளின் படகு தீ பிடித்து  34 பேர் பலியானதில் 2 இந்தியர்களும் உயிரிழந்திருப்பது  தற்போது தெரியவந்துள்ளது.   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டாகுரூஸ் தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறை  மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்த்து மகிழ்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அங்கே ஸ்கூபா டைவிங் கிலும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி 38 பேர் கொண்ட குழு ஒன்று […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி…. குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்.!!

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் தனது குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் அலபாமா அருகே இருக்கும் எலெக்ட்ரான் என்ற இடத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டில் இருந்த குடும்பத்தினர் 5 பேரை திடீரென சுட்டு கொன்றுவிட்டான். சுடப்பட்ட ஐந்து பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த செயலை செய்து முடித்தபின் சிறுவன் தானாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 5 பேர் பலி… 21 பேர் படுகாயம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  அமெரிக்காவில் உள்ள மேற்கு டெக்சாஸில் இருக்கும் மிட்லேண்ட் பகுதியில் ஒரு மர்ம நபர் தனது வாகனத்திலிருந்து கொண்டு அங்கிருந்த மக்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதன்பின் அந்த  அந்த நபர் அங்கிருந்த தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்திச் சென்றார்.  இதையடுத்து விரைந்த போலீசார் அவரை வழியில் […]

Categories
பல்சுவை

“வெறிச்சோடிய நகைக்கடைகள்” சவரனுக்கு ரூ7000 அதிகரிப்பு… பரிதவிக்கும் மக்கள்… விலை உயர்விற்கு காரணம் என்ன..??

ஒரே ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 7000 ரூபாய் அதிகரித்துள்ளது. உலக பொருளாதார வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது வலுவாக திரும்பியதே தங்க விலை உயர்விற்கு  காரணம். இதே நிலை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம் என்றால் அடித்தட்டு மக்களுக்கு திண்டாட்டம். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு குண்டுமணி அளவுக்கு தங்கம் […]

Categories
உலக செய்திகள்

காதல் திருமணம்….”சில நிமிடத்தில் மரணம்”…. ஜோடியாய் மாண்டு போன துயரம்…!!

அமெரிக்காவில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நிமிடத்தில் தம்பதிகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் ஹார்லி மோர்கன் , பவுட்ரியாக்ஸ். இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்து இரு வீட்டார்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்தனர்.பின்னர் புதிய வாழ்க்கை தொடங்க சென்ற அந்த தம்பதிகள் குடும்பத்தினர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கைவிரித்த ட்ரம்ப்….”அது உங்க விவகாரம்” கடுப்பில் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்ற்றுள்ளார். இந்த  மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இந்நிலையில் பிரதமர் மோடியும் , அமெரிக்க அதிபர் டிரம்ப்_பும் […]

Categories
உலக செய்திகள்

சீனா தேவை இல்லை ”உடனே வெளியேறுங்கள்” டிரம்ப் ஆவேசம் …!!

சீனா தேவை இல்லை என்றும் , சீனா_வை விட்டு அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா_வுக்கும் , சீனா_வுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகின்றது. தற்போது இந்த வர்த்தக போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் இரு நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு வரும் அந்தந்த நாடுகளின் பொருட்களுக்கு மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள், பொம்மைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் வரை […]

Categories
உலக செய்திகள்

மதங்களை புறம் தள்ளி ”தொழில்நுட்பம் நோக்கி முன்னேறுங்கள்” இந்தியாவுக்கு அட்வைஸ் …!!

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல என்று கூகுள் CEO சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் நிர்வாக அதிகாரி (சிஇஓ) வான தமிழகத்தை சேர்ந்த   சுந்தர் பிச்சை வேர்வ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி தற்போது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் இந்திய அரசியலை கடுமையாக சாடியுள்ளார்,அவர் கூறியுள்ள கருத்தில் , நான் அரசியலில் ஆர்வம் கொள்ளவில்லை ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் […]

Categories

Tech |