சற்றுமுன் கொரோனாவிலிருந்து குணமடைந்தாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் போலியானது என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் கொரோனாவிலிருந்து அமிதாப் பச்சன் மீண்டுள்ளார் […]
Tag: #AmitabhBachchan
கொரோனாவிலிருந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டுள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் அமிதாப் பச்சன்.. 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.. தற்போது […]
அமிதாப் பச்சன் நடிப்பில் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் ‘ஜுந்த்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் படம் ‘ஜுந்த்’. ஸ்லம் சாக்கர் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த விஜய் பார்சே என்பவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் விஜய் பார்சே கதாபாத்திரத்தில் சீனியர் பச்சன் நடிக்கிறார். ஆகாஷ் தோஸர், ரிங்கு ராஜ்குரு உள்ளிடோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கால்பந்து விளையாட்டை […]
ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் நடிகர் அமிதாப் பச்சனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து-வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து-வருகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாய் திறக்காமல் மவுனம் காத்துவந்த நிலையில், […]
திரைத் துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் இன்று பெற்றார். தனது 77ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவருக்கு உடல்நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் […]
50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு ‘கோல்டன் ஜூப்ளி ஐகான் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் நவ.20ல் தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை 9 நாட்கள் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் […]
நடிகர் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரை துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 […]
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அதன்படி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத் துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் […]
தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் ராயலசீமாவில் வாழ்ந்த உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரருடைய உண்மை வாழ்க்கை வரலாரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி. மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அமிதாப் பச்சன், […]