Categories
தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீ ராம்” கேட்டால் எரிச்சல் அடைவார்… தேர்தலுக்காக மட்டுமே நடிக்கிறார்… அமித்ஷாவின் விமர்சனம்…!!

தேர்தலை முன்னிட்டு ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை மம்தா பயன்படுத்துவார் என அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர் அமித்ஷா, முதலமைச்சர் மம்தாவையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது மம்தா “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தை தேர்தலுக்கு முன்பு கையில் எடுத்துக் கொள்வார் என அமித்ஷா அவரை விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த தேர்தல் களமானது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்க டெல்லி காங்கிரஸ் கோரிக்கை!

கொரோனோவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. நாளைக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரின் ஆலோசனையின் படி நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அனைத்து கட்சியினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை!

டெல்லியில் அனைத்து கட்சியினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கானது நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்களுடன் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்தது குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மே 31ம் உடன் முடியும் […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு… தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் – இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு!

அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

என்பிஆர் கணக்கெடுப்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை – அமித்ஷா விளக்கம்!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எந்த ஆவணமும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு கொண்டு வரப்படுவார்கள் – அமித்ஷா உறுதி!

மத வித்தியாசமின்றி டெல்லியில் கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே […]

Categories

Tech |