தோனியின் ஓய்வு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை சம்பாதித்து உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்களும், திரையுலகினரும் அரசியல் கட்சி தலைவர்களும், தோனி ஓய்வு குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். […]
Tag: amitsha
மருத்துவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை கண்டு அச்சமடைந்து நாட்டு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சமீப காலமாக பொதுமக்களால் அவ்வபோது தாக்கப்படும் அவலமும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகையால் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஒயிட் அலர்ட் என்ற பெயரில், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் […]
மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என வாக்களித்தார். அதேபோல, மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3,869 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் […]
இந்து, முஸ்லீம் என சண்டையிட்டு கொள்வதற்கு இது நேரமல்ல என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மக்களவையில் பேசினார். சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற கலவரம் இந்தியாவில் உள்ள மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. திடீரென ஏற்பட்ட அந்த கலவரம் தொடர்பான புகைப்படங்கள் பலரின் மனதை உருக செய்தது. இதுகுறித்து மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில், பாரதிய ஜனதா […]
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் பாஜக ஒரு அடிகூட பின்வாங்காது என அக்கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி மக்களிடையே பேசினார். அதில், குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய குடியுரிமையும் பறிக்கும் சட்டம் கிடையாது என்றும், பிறருக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யும் சட்டம் எனவும் கூறினார். அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் […]
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் அபிமானிகள் நடத்திய கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது கமல்நாத் நிகழ்வு இடத்தில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அத்துடன் குற்றவாளிகள் 5 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் அளித்தார் என்ற மற்றொரு […]
அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பி அனுமதி பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்என்டி நிறுவனத்துடன் அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவு ஓட்டுவதற்கு சுமார் 1000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்என்டி நிறுவனங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவில் இருந்து […]
உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்_லுடன் ஆலோசனை நடத்துகின்றார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் […]
உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகத்திற்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமித்ஷா வருகை தர இருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க இருக்கிறார். அவருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இவ்விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வருகின்ற 11 ஆம் தேதி சென்னையில் நடைபெறஇருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருவது உறுதியானது. […]
காஷ்மீர் மறுசீரமைப்பு விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் பேசும் போது ஆளும் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு தடுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் […]
சற்றுமுன் :அமைச்சரவையில் அமித்ஷா..!!
அமைச்சரவையில் அமித்ஷாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பட்டிருப்பதாக குஜராத் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார் . பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று மாலை பதவி ஏற்க இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இன்று மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையின் முகப்பு பகுதியில் இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. அதற்க்கு முன்பாக பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை […]
ராஜினாமா செய்தார் அமித்ஷா ..!!
பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அமித்ஷா தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்து கொண்டார் . மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜகவின் தேசியத் தலைவரான அமித்ஷா தனது மாநிலங்களவை பதவியை இன்று ராஜினாமா செய்தார் .அவரது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது . மேலும் பாஜக சார்பில் புதிய மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதவியேற்றுக்கொண்டார். இதனை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான […]
தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மே 30ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களாக யார் யாரெல்லாம் நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பாஜக தலைவரான அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தால் பாஜக தலைவர் பதவியில் […]