பெங்களுருவில் இருந்து இன்று தமிழகம் திரும்பிய சசிகலா, அனைவருக்கும் வணக்கம். என் உடல் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தெய்வ அருளாலும், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆசியால் நான் இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றேன். உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். […]
Tag: #AMMK
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முன்னதாக தொண்டர்கள் வாகனத்தை புடைசூழ சசிகலா வாகனம் வந்து கொண்டு இருக்கின்றது. அப்போது காரில் இருந்தபடியே சசிகலா பேசினார். அப்போது தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன். நான் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்பதை தெரிவித்து புரட்சித்தலைவர் நாமம் வாழ்க, புரட்சித்தலைவி நாமம் வாழ்க எனசசிகலா பேசியுள்ளார்.
அஇஅதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும் எனஅம்மா மக்கள்முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழக எல்லைக்குள் நுழைந்தார். சென்னையை நோக்கி அவர் கார் வந்து கொண்டிருக்கின்றது. அதிமுக கொடியுடன் தமிழகத்திற்கும் நுழையக்கூடாது என்று அமைச்சர்கள் பலமுறை டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்த நிலையிலும், அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் அதிமுக தொண்டர்களும் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முடித்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு தனிமைப்படுத்தப்பட்ட சசிகலா இன்று தமிழகம் கிளம்பினார். அவருக்கு தமிழக எல்லையில் இருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவினரும் கொடியுடன் சசிகலாவை வரவேற்றது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால் தமிழக எல்லைக்குள் நுழையும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று மாறிமாறி அமைச்சர்கள் டிஜிபியிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் தமிழகம் எல்லை வந்த சசிகலா அதிமுக கொடி கட்டிய… அதிமுக கட்சி உறுப்பினர் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர். சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர்.சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை வரவேற்க […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர். சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை […]
சசிகலா பெங்களுருவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருக்கும் நிலையில் சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என போலீஸ் உத்தரவு போட்டு இருந்த நிலையில் சசிகலாவை வரவேற்க குவிந்துள்ள பல தொண்டர்கள் கைகளில் அதிமுக கொடியை வைத்துள்ளார்கள். அதே போல சசிகலாவும் காரில் அதிமுக கொடியுடனே வருகின்றார். சசிகலா தமிழக எல்லை வந்தடையும் போது பட்டாசு வெடித்து வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகளும் […]
இன்னும் சற்று நேரத்தில் பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழக எல்லையை வந்தடைய இருக்கிறார். குறிப்பாக தமிழக எல்லையான ஓசூரை அடுத்த ஜுஜுவாடி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வரவேற்பளிக்க காத்திருக்கிறார்கள். ஏற்கனவே காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி அதிமுக கொடியை சசிகலா காரில் பொருத்தக்கூடாது, தொண்டர்கள் அந்த கொடியை பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதையும் மீறி இன்று சசிகலாவை வரவேற்பதற்காக காத்திருந்த தொண்டர்கள் சிலர் அதிமுகவின் கொடியை ஏந்தியபடி வரவேற்பு அளிக்க காத்திருக்கிறார்கள். அவர்களை […]
கொரோனா கால சட்ட ஒழுங்கு நிலைகளை கருத்தில்கொண்டு கீழ்காணும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று காவல் துறை நோட்டீஸ் அளித்துள்ளது. சிகலா அவர்களின் வாகனத்திற்கு பின்பு 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். அமுமுக கட்சியினர் இதர வாகனங்களில் பின் தொடரக் கூடாது, அப்படி வந்தால் அந்த வாகனங்கள் நிறுத்தப்படும். சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அப்படி செய்வது விதி மீறலாகும். ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் உள்ள கூட்டத்தில் 10 சதவீத சீருடையணிந்த […]
பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை காலத்தை முடித்ததை தொடர்ந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விடுதலையான இளவரசியும் மற்றொரு காரில் சென்னை திரும்புகிறார்.சசிகலா காரின் ஓட்டுநர், உதவியாளரை தவிர யாரும் […]
பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை காலத்தை முடித்ததை தொடர்ந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விடுதலையான இளவரசியும் மற்றொரு காரில் சென்னை திரும்புகிறார். சசிகலா காரின் ஓட்டுநர், உதவியாளரை தவிர […]
சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.இ .அ.தி.மு.க கிளை கழக செயலாளர் திரு.குமாரும், அவரது மனைவி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரான திருமதி வசந்தகுமாரும் சசிகலாவை வரவேற்று அப்பகுதியில் சுவரொட்டிகள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முள்ளங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு நாராயணனும் சசிகலாவை வரவேற்று […]
முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்யின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை ஒட்டி தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் எல்லை பட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்று மதக பகுதியில் அமைந்துள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக்யின் திருவுருவ படத்திற்கு. தேனி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு முத்துசாமி தலைமையில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் […]
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அமமுக செயலாளர் திரு.வி.ஆர் அண்ணாமலை மறைவுக்கு அமமுக மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட உள்ள இரங்கல் செய்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.அண்ணாமலை உடல்நிலை குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து முதலில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.. 2ஆம் ஊரடங்கின் போது, சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு […]
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை தரும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதன் காரணமாக மார்ச் மாதத்திற்கான மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் யாருமே ஈடுபடுத்தப்படவில்லை. ஆகவே முந்தைய மாத கட்டணத்தையே (ஜனவரி – பிப்ரவரி) செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனாலும் மின்கட்டணத்தை ரத்து […]
எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கினார். தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழகத்திற்கு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி […]
பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமாக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறைவுசெய்துள்ள அவருக்கு இன்னும் ஓராண்டு தண்டனை காலம் மீதம் உள்ளது. இதையடுத்து அவர் மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. […]
திமுக, அதிமுகவுடன் புதிதாக தொடங்கிய அமமுக போட்டிபோட முடியாது என்று திவாகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதேபோல டிடிவி தினகரனின் அமமுகவும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக தயாராகி வருகிறது. இந்தநிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். என்னுடைய கணக்கு என்றும் தப்பாது. வேரூன்றிய […]
தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சேதமடைந்த பெரியார் சிலையை சீரமைக்கும் […]
நானோ, சசிகலாவோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியதாகும். தமிழர் மக்கள் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உழைத்த மாபெரும் தலைவர் பெரியார். அவர் குறித்து ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து அவர்களின் தியாகம் மற்றும் […]
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பழைய விதிமுறைகளை முற்றிலுமாக […]
பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் செய்தி மையம் பதிப்பகம் நடத்தி வந்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் […]
அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் தாய்க் கழகத்தில் மீண்டும் இணைந்தோம். இவ்வளவு நாட்களாக கூவம் ஆற்றில் இருந்தோம். அங்கிருந்து நாற்றம் தாங்க […]
எழுத்தாளர் திரு.சோ.தர்மனுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை […]
பதவி மமதையில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசும் முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு காலம் தக்க பாடம் புகுட்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, ‘துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொய்யை உண்மையாக்கி பேசும் திறன் பெற்றவர். மாநகராட்சி மேயரை, கவுன்சிலர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் […]
அதிமுகவில் சேரும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலதிபதிபர் ஒருவர் மூலம் தனக்கு தூது விட்டதாக அமமுகவின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியுள்ளார். அமமுகவின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன், ”அதிமுகவில் சேர நான் யாரையும் தூது விடவில்லை. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான், தொழிலதிபர் அன்பழகன் என்பவர் மூலம் என்னை அதிமுகவில் சேர தூதுவிட்டார். ஆனால் முதலமைச்சரின் தூதுக்கு நான் செவி […]
அமமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் ஆகியோரது தலைமையில் ஏராளமான அமமுகவினர் நாளை முதலமைச்சரை சந்தித்து தாய்க் கழகத்தில் இணைய சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. அதில் சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் அமமுக கட்சியினை தொடங்கினார். அதிமுகவினர் அனைவருமே தன்னுடன்தான் இருக்கின்றனர் என அவர் கூறி வந்தார். […]
மணப்பாறை அருகேயுள்ள சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்நிலையில், சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கிருந்த சுஜித் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குழந்தையை […]
கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துவிடும் என்று, முதலமைச்சர் பழனிசாமியை புகழேந்தி சந்தித்தது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “1991ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆர்கே நகர் தவிர, மற்ற இடைதேர்தலில் ஆளும் கட்சி தான் வென்றுள்ளது. இது பெரிய இமாலய வெற்றி என சொல்வதற்கு ஒன்றும் இல்லை.இடைத்தேர்தலில் […]
அதிமுக உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு அமமுக பொது செயலாளர் TTV.தினகரன் 3 பக்க அறிக்கை வெளியிடட்டுள்ளார். நாளை தினம் அதிமுக உருவாக்கப்பட்ட நாள் அதாவது 1972_ஆம் ஆண்டு அக்டோபர் 17_ஆம் நாள் MGR அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். 48_ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் TTV தினகரன் தொண்டர்களுக்கு 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் , தந்தை பெரியாரின் வழியில் பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கத்தை சுயநலம் […]
முதல்வர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கே விசுவாசமில்லாத பழனிசாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்கப்போகிறார்? என்று சீமான் அவேசம் அடைந்துள்ளார் . இதுகுறித்து அவர் தெரிவித்த்தில் , தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவின் காலில் விழுந்து வருகிறார் பழனிச்சாமி. முதலமைச்சர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கு விசுவாசமில்லாத பழனிச்சாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்க போகிறார். மக்களின் வாக்கை பெறாதவர் அமைச்சராக முடியாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய […]
இரயில்வே துறையை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டுமென்று அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைத் தனியார்மயமாக்குவதற்கான முன்னெடுப்புகள் அந்தப் போக்குவரத்தை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளைத் தனியாரிடம் கொடுத்து சிறப்பாக செயல்படுத்துவதில் தவறில்லை.அதே நேரத்தில், ரயில் பாதைகளையும், ரயில்களை இயக்குவதையும் […]
அதிமுக – அமமுக இணைப்பு குறித்து வீண் வதந்திக்கு பதில் கூற முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவிதினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமமுக தலைமை கழக நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , ஒருவர் சென்றால் ஏராளமானோர் அமமுக வில் இணைந்து பலம் சேர்த்து வருகிறார்கள். […]
இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். சுபஸ்ரீ பலியானதற்கு […]
அமமுக சார்பில் விரைவில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவின் தலைமையை கடுமையாக விசாரித்தன் அடிப்படையில் புகழேந்தியை கட்சியை விட்டு நீக்க வேண்டுமா? அல்லது இடைநீக்கம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட கோவை நிர்வாகிகளை புகலேந்தி சந்தித்த வீடியோவை அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு […]
அமமுக_வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் கட்சியை விட்டு விலகுவார் என்று தெரிகின்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வின் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து TTV தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிட்டு தோல்வியடைந்ததை தொடர்ந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது […]
அமமுக_வில் இருந்து விலகிய தங்க தமிழ் செல்வனுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அமமுக_வின் தோல்வியை அடுத்து அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ் செல்வன் மற்றும் வி.பி கலையரசனுக்கு திமுக_வில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மிக முக்கியமான பொறுப்பான கொள்கை பரப்புச் செயலாளராக தங்கத்தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கலையரசனுக்குஇலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக திருச்சி சிவா, ராஜா ஆகியோர் இருந்து வந்த நிலையில் மூன்றாவது தங்கத்தமிழ்செல்வன் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு […]
பயத்தின் காரணமாக வெளிநாடு செல்லும் முதல்வர் தனது பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கவில்லை என்று TTV.தினகரன் விமர்சித்துள்ளார் . திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , உண்மையில் தொழில் முதலீட்டை இழுத்தால் மகிழ்ச்சி தமிழகத்திலுள்ள நிர்வாக முறைகளை முதலமைச்சர் வெளிநாடு சென்று உண்மையில் முதலீட்டை கொண்டு வந்தால் மகிழ்ச்சி தான்.ஆனால் அரசியலுக்காக மட்டும் இருக்கக்கூடாது.ஆளுங்கட்சி மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட கட்சியாக இருக்கிறது. அம்மாவின் கட்சியை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதம்தான் அமுமுக அதை நிச்சயம் நாங்கள் செயல்படுத்துவோம் […]
கட்சியை பதிவு செய்யும் வரை எந்த ஒரு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது என்று ttv தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. மேலும் நான்குநேரி தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுமா என்ற விவாதம் அரசியல் களத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் […]
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமென்று சோழமண்டலத்தில் பிறந்து , வளர்ந்தவனாக சொல்கின்றேன் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமி மழையில் செய்தியாளர்களை சந்தித்த TTV.தினகரன் கூறுகையில் , டெல்டா மாவட்ட மக்கள் காவிரி விவசாயப் பகுதி மக்களை அரசியல் கட்சிகளோ இல்லை , வேறு சமூக விரோதிகளை தூண்டி விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்த வில்லை. நமது வாழ்க்கை, விவசாயம் அழிக்கப்பட்டு விடும் என்கின்ற உணர்வோடு எல்லாரும் போராடுகின்றனர். மத்திய அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இந்த மீத்தேன் , ஹைட்ரோகார்பன் […]
அமமுக யானை பலத்துடன் இருக்கின்றது என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். சில பேர் துரோகம் செய்வார்கள். பதவி , எம்எல்ஏ , மாவட்ட செயலாளர் இதெல்லாம் துறந்து பலர் இருக்கின்றார்கள். அரசியல் எம்எல்ஏ_வாக வேண்டுமென்பது தான் அரசியலில் வெற்றி என்று நினைத்தால் அது தவறு. வருங்காலம் நிச்சயம் நிரூபிக்கும்.மக்கள் நலனுக்காக போராட வேண்டியது […]
இனிமேல் இந்தி,ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இந்த இரண்டு மொழிகள் தவிர இனி தமிழ் உட்பட வேறு மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது. அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் […]
அமமுக சார்பில் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் அறிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்ததை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை […]
நிர்வாகிகளை வைத்து தான் கட்சி இருக்கின்றதா என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.குறிப்பாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகியாக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்தார். அவரை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த TTV […]
தினகரன் இருக்கும் இடமறிந்து செயல்படவேண்டும் என்று அதிமுக MLA கலைச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார் . அதிமுகவில் எம்எல்ஏக்களாக பணியாற்றி வரும் ரத்தினசபாபதி,பிரபு கலைச்செல்வன் ஆகிய மூவரும் டிடிவி தினகரன்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து அதிமுக அரசு தலைமை கொறடா கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவை தலைவரிடம் பரிந்துரை செய்தார். அதன்பின் சட்டப்பேரவைத் தலைவர் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
அமமுக_வில் இருந்து வெளியேறியவர்கள் யாரும் தளபதிகள் அல்ல வெறும் நிர்வாகிகள் தான் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்வியையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுக_வில் இணைந்து வருகின்றனர். அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ் செல்வன் TTV_யுடன் ஏற்பட்ட மோதலில் திமுக_வில் இணைந்தார். அதை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த இசக்கி சுப்பையா தாம் அதிமுகவில் இணைய போவதாக அறிவித்தார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் […]
கட்சியில் இருந்து விலகி செல்வோரை தடுத்து நிறுத்த முடியாது என்று அமமுக கட்சி பொதுச்செயலாளர் ttv தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.இதுகுறித்து […]