வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டி பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சுமார் 24 வார்டுகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்குள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரி, மளிகை கடைகள் மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு திருத்துறைப்பூண்டி வழியாகத்தான் வருகிறார்கள். ஆனால் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை இல்லாத காரணத்தால் சாலைகள் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலால் பரபரப்பாகவே காணப்படும்.இந்நிலையில் திருத்துறைப் பூண்டியில் உள்ள புதிய பேருந்து […]
Tag: animals
வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவரின் மகன் கவிபாலா (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரும் வீட்டு விலங்குகளை வைத்து டிக் டாக்கில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவந்தனர். டிக்டாக்கில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய, இருவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று […]
விலங்குகளைப்போல் குழந்தைகளைப் பெற்றெடுப்பது நாட்டுக்கு தீங்கானது என்று உத்தரபிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியுள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் புதிய திட்டம் குறித்து யோசனை கூறியதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி இதுகுறித்தான தனது கருத்தினை பகிர்ந்தார். அதாவது விலங்குகளைப்போல் மக்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நாட்டிற்கு தீங்கானது என்று வாசிம் ரிஸ்வி கூறினார். சிலர் […]
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் அவற்றுக்கு சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை மேற்கொள்ளக் கூடிய நவீன வசதிகள் கொண்ட அம்மா ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலக […]
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குதிரைகள்,மான்கள், குரங்கு உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள நீர்நிலைகள் தற்போது வறட்சி அடைந்து காணப்படுகின்றது. . இதனால் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்து அங்குள்ள தொட்டிகளில் நிரம்புகின்றனர்.