அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டுகளை இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னை அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாகிறது, அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன என கூறியுள்ளார். குடிசை பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது, முக […]
Tag: Anna University
மாணவர்கள் உடைமைகளை எடுத்த பின்னர் விடுதிகளை கையகப்படுத்தலாம் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,641 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 559 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைகழக விடுதிகளை கொரோனா […]
ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டின் பருவத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டிற்கான பருவத்தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2001-2002 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்தப் பருவத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைய சிறப்பு வாய்ப்பு ஒன்றை பல்கலைக்கழகம் அளித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆம் தேதி என அறிவித்த நிலையில் […]
வருமானவரித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.இதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியில் கல்லூரிகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து கண்கானித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 2018-19, 2019-20 ஆம் ஆண்டு கணக்கான காலாண்டு கணக்கை முறையாக […]
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளக்காக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் , உள்ளாட்சி தேர்தல் , புத்தாண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாளை முதல் ஜனவரி 1_ஆம் தேதி வரை என 12 நாட்களுக்கு விடுமுறை என உயர்கல்வித்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த விடுமுறை நாட்களில் பட்டியலிடப்பட்டு இருந்த அட்டவணை படுத்தப்பட்டு இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி […]
மெக்கானிக்கல் துறையில் மாணவிகளுக்கு சிறப்பான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் சார்பில், பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் மாணவிகளுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனை கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள 30 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 900 மாணவிகள் கலந்துகொண்டனர்.இந்தக் கருத்தரங்கில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் பெண்களுக்கு […]
தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதியை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. பொறியியல் படிப்பில் ஒரு செமஸ்டரில் தோல்வியடையும் ஒரு மாணவர் மூன்று வாய்ப்புகளில் தேர்ச்சியடையாவிட்டால் அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என்பது அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை. இந்த விதி முறையை ரத்து செய்ய கோரி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]