Categories
அரசியல் தேசிய செய்திகள்

” கேதார்நாத்துக்கும், எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது” பிரதமர் மோடி பேட்டி..!!

பிரதமர் மோடி கேதார்நாத் புனித குகையில் நீண்ட நேர தியானம் முடித்த பின் எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு  தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்காக  தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நேற்று பாரம்பரிய உடையில்  நடந்து சென்று வழிபாடு செய்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேதார்நாத் குகையில் தியானம் செய்து வரும் மோடி.!!

பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள  கேதார்நாத் குகையில்  தியானம் செய்து வருகின்றார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி  இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருக்கின்றது. இதற்கான சூறாவளி பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார் நாத் கோவிலுக்கு   ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள  பிரதமர் மோடி பாரம்பரிய உடையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாங்கள் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்” பிரதமர் மோடி உறுதி..!!

மத்திய பிரதேசத்தில் நடந்த  கடைசி பேரணியில், நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6-கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல்  பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்றுடன் அதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வித்யாசாகர் சிலை உடைந்த தடயத்தை அழிக்கும் போலீசார்” பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!

வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதில் தடயங்களை அழிப்பதற்கு  போலீஸ் முயற்சி செய்து வருகின்றனர் என  பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்காள மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியபோது, கொல்கத்தாவில் நடந்த  வன்முறைக்கு காரணம்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தான். கலவரத்தின் போது அவர்கள் தான் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்தனர். போலீஸ் அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  குண்டர்களை பாதுகாப்பதற்காக, சிலை உடைந்துள்ள பகுதியில் தடயங்களை அழிக்க முயற்சி செய்கின்றார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கலவரத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் காட்டுங்கள்” இல்லையென்றால் சிறையில் அடைப்பேன்….. மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!!

திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கு சரியான  ஆதாரங்களை காட்டுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறையில் அடைப்பேன் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது  வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“சிலையை கட்டமைக்க பா.ஜ.கவின் பணம் தேவையில்லை” நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் – மம்தா பானர்ஜி தாக்கு.!!

வித்யாசாகர் சிலையை கட்டமைக்க பாஜகவின் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.  கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது  வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க வினர் திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கொல்கத்தா கலவரத்தில் சேதமடைந்த வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்” பிரதமர் மோடி உறுதி..!!

கொல்கத்தா கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்தார்.  சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும்,  தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா நகரில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மம்தா டெல்லி வரும்போது “வெளிநபர்” என்று சொல்லலாமா? – அமித்ஷா கேள்வி!!

மேற்கு வங்காளத்தில் என்னை ‘வெளிநபர்’ என்று கூறும் போது மம்தா டெல்லிக்கு வரும்போது அவரை வெளிநபர் என்று சொல்லலாமா? என்று அமித் ஷா கேட்டுள்ளார். பிரதமர் மோடி, பா.ஜ.க  தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும், மேற்கு வங்காள மாநிலத்தின்  முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையில்  அடிக்கடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது. வெளிநபரான அமித் ஷா மேற்கு வங்காளத்துக்குள் நுழைந்து   மக்களிடையே பிளவை உண்டாக்க முயற்சிக்கிறார்” என்று மம்தா அடிக்கடி கூறி வருகிறார். இந்நிலையில், கொல்கத்தா நகரில் சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் அமித் ஷா […]

Categories

Tech |