தொழிலதிபரும் இன்போசிஸின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கை பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார். நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இன்போசிஸும் ஒன்று. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஆவார். இவரின் மகளான அக்சதாவுக்கும் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ள ரிஷி சுனக் முதலீட்டு வங்கி ஆலோசகராக பணியாற்றிவந்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் […]
Tag: Appointed
தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கும் தலா ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் வீதம், ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் […]
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸ் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற பிறகு, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சர்ச்சைக்குரிய முறையில் நீக்கப்பட்டார்.இவரது நீக்கம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் பில் சிம்மன்ஸ், மீண்டும் […]
கர்நாடகாவில் நாளை அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.ஆனால் கர்நாடக அமைச்சரவை இதுவரை பதவி ஏற்கவில்லை.இந்நிலையில் நாளை மறுநாள் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கட்சித் தலைவர் அமித் ஷாவுடன் அமைச்சரவை பட்டியல் குறித்து […]
திமுக சார்பில் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக் கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் வாக்குதிவானது ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , ஐஜேகே […]