3 வயது சிறுவன் 53 உலக நாடுகளின் தலைநகரங்களில் பெயர்களை சரளமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் தர்மபாலா-முத்துலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றன. ஹோட்டல் உரிமையாளரான தர்மபாலாக்கு அகரன், ஆதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் தர்மபாலாவின் இளைய மகனான ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்கள், […]
Tag: Appreciation
நடிகர் விஷ்ணு விஷாலின் ராட்சசன் கெட்டப், அவரது அப்பாவை போன்று இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஸ்ணு விஷால், இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அதன் பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன், ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் அவர் ரியல் வெர்சஸ் ரீல் எனும் கேப்ஷனுடன் தன்னுடைய அப்பாவின் […]
குமுளி மலைப்பாதையில் சாலையின் இரு பக்கமும் குவிந்து கிடந்த 4.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை இளைஞர்கள் நல அறக்கட்டளையினர் அகற்றியதால் பொதுமக்கள் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். உலகம் முழுவதும் உலக இளைஞர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இளைஞர்களைப் போற்றும் இந்தத் தினத்தில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற, தேவையான நலத்திட்டங்களை செய்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைப்பாதையில், குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பைகளை இளைஞர் குழுவினர் அகற்றினர். தேனி […]
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சுகந்தலையில் விளையாட்டுப் போட்டி உற்சாகமாக நடந்து முடிந்தது. தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் புதுஆடை அணிந்து , வீடுகளில் கோலம் போட்டு , பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல இரண்டாம் நாள் பண்டிகையாக மாட்டு பொங்கலையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு போட்டி நடத்தி அன்றைய நாளை உற்சாகத்துடன் போக்குவார்கள். […]
பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டி சுகந்தலையில் சிறப்பாக நடைபெற்றது.. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாட்டுப்பொங்கலான இன்று அனைத்து பகுதியிலும் விளையாட்டுப் போட்டி நடத்தி மாட்டுப்பொங்கலை சிறப்பாக தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை கிராமத்தில் விளையாட்டு போட்டி நடத்துவதற்காக அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. EVLK இளைஞரணி சார்பில் பொங்கல் விளையாட்டு விழா முன்னெடுக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு […]
சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற திரு. வெங்கடேசனை பல்வேறு தரப்பினர் வாழ்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இரவு பகலாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. திமுக தலைமையிலான கூட்டணி 272 , 2338 இடங்களையும் , அதிமுக 241 , 2185 இடங்களையும் கைப்பற்றியது. தேர்தல் […]
மக்களின் முதன்மையாக இருக்கும் வாட்ச்சுகளில் டைட்டன் நிறுவனம் தமிழ்மொழியை புகுத்தி புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமைகளை அளிப்பதில் தனித்துவமானது. அதோடு மிடில் கிளாஸ் தொடங்கி மேல்தட்டு வரை அனைவருக்குமான கலெக்ஷன்களும் டைட்டனில் உண்டு. இப்படி மக்களின் முதன்மையாக இருக்கும் டைட்டன் நிறுவனம் தற்போது தமிழ் மொழியின் மூலம் புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. ’டைட்டன் தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் […]
சிதம்பரம் அருகேயுள்ள முட்லூர் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மழையில் நனையக்கூடாது என்று கருதி, அப்பள்ளியின் தலைமையாசிரியர் அப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் குடை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார். சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 760 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரியும் மணிவாசகம், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய விஷயத்தைச் செய்துள்ளார்.தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மாணவர்கள் மழையில் நனையாமல் பள்ளிக்கு வருவதற்கும், பள்ளி முடிந்து […]