இரு தரப்பினர் மோதி கொண்டதில் பெண்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டியங்கொல்லை புது தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருமைதுரை என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமியும் அருமைதுரையும் தனித்தனியாக காவல் நிலையத்தில் […]
Tag: #ariyalur
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி காலனி தெருவில் தீபன்ராஜ்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பார்வையற்ற பெண்ணின் வீட்டிற்குள் ராஜ்மோகன் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிந்த போலீசார் ராஜ்மோகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் ராஜ்மோகனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
வாலிபரை நண்பர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் விக்னேஷ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிட்கோ தொழில்பேட்டை அருகே திறந்தவெளியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விக்னேஷின் நண்பரான தர்மராஜ்(21) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிறந்தவர் யார் என்பது தொடர்பாக விக்னேஷுக்கும் தர்மராஜுக்கும் இடையே வாக்குவாதம் […]
அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த தொடக்க பள்ளி நுழைவு வாயில் முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் மாணவரான தமிழ்மணி(80) சிலருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அனுமதியின்றி உண்ணாவிரதம் […]
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் படி கள்ளங்குறிச்சி ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல், தார்ப்பாய் சரியாக போடாமல், பிரதிபலிப்பான் ஒட்டாத 18 கனரக வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் சிட்கோ தொழில்பேட்டை அருகே தலையில் வெட்டு காயத்துடன் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கிராமத்தைச் […]
கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூக்குழி கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(28) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வினோதினிக்கும், பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதுடைய பவிஷி என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது வினோதினி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வேறொரு பெண்ணுடன் பாலாஜிற்கு பழக்கம் ஏற்பட்டதால் வினோதினியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொடுக்கூர் குடிகாடு கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம்(53) என்ற மகன் உள்ளார். இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ராமலிங்கம் வீட்டில் தனியாக இருந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த […]
சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுழிபள்ளம் கிராமத்தில் சின்னதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சகோதரரான கலியபெருமாள் என்பவருக்கும் வயலில் ஆடு மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கலியபெருமானின் பேரன் மணிகண்டன் என்பவர் சின்னதுரையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். நேற்று […]
கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியாஸ்திதியான அன்பு விஜய் ஞான ஜோதி(27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் அருகே இருக்கும் மடத்தட்டுவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக வேறு சில கன்னியாஸ்திரிகளுடன் ஞானஜோதி ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஞான […]
அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியாரின் நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சிறுவயலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மகாகவி பாரதியாரின் நினைவு தினமானது தலைமை ஆசிரியர் சின்னத்துறை தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் மகாகவி பாரதியாரின் படத்திற்கு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உரையாற்றினார். அதில் அவர் […]
Vமயான கொட்டகை இல்லாததால் எரிந்து கொண்டிருந்த சிதை மழையில் அணைந்தது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குடிகாடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். சக்திவேல் மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த சில நாட்களாக சக்திவேல் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். இதனை அடுத்து நேற்று முன்தினம் மாலை அவரது உடல் கொள்ளிடக்கரையில் இருக்கும் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்குள்ள மயானமானது கொட்டகை […]
பெண் ஒருவர் வாலிபரை போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரண் என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஒலிபெருக்கி நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவரும் வீர சோழபுரத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகளான நந்தினியும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நந்தினியிடம் கரண் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் நெருங்கி பழகி […]
யானை தந்தத்தினால் செய்யப்பட்ட சிற்பத்தின் பாகம் கிடைத்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகில் மளிகை மேடு பகுதியில் தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி பழங்கால தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மார்ச் 25ஆம் தேதி மண்ணால் ஆன கெண்டி செம்பின் மூக்கு பகுதி, பழங்கால மண் பானை மற்றும் 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு அந்த கண்ணன் தனது மனைவி வீட்டில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த […]
பொது தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தில் விவசாயியான சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இவர் அரியலூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு அபினா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி பொது […]
தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் எண்ணெய் வியாபாரியான சண்முகம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா(19), நிவேதா(17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஸ்வேதா கோயம்புத்தூரில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கல்லூரியில் படிக்கும் தோழி மதுபாலா என்பவரை அழைத்துக்கொண்டு ஸ்வேதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலரும், காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் […]
தாயை தாக்கிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான அழகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பச்சைமுத்து என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பச்சைமுத்து தனது தாயிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். மேலும் அழகம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து அழகம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சங்கர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சங்கரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 28 […]
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவன் என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் இளங்கோவன் தனது வீட்டிற்கு பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் இளங்கோவனை கைது செய்ததோடு […]
இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட 7 பேரை கதண்டுகள் கடித்தது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் காலனி தெருவில் நாகப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாகப்பன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் நாகப்பனின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டும் பணியில் அதே பகுதியில் வசிக்கும் சத்தியசீலன், சேகர், முருகானந்தம் உள்பட 7 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டமாக வந்த கதண்டுகள் ஏழு பேரையும் துரத்தி துரத்தி […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளரான பிரபாகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
வேலை பார்த்துக்கொண்டிருந்த போது பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் அழகப்பன் என்பவரது கடலை வயலில் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வயல் வெளியில் இருக்கும் கல்லுக்கு அடியில் இருந்து வந்த பாம்பு சிந்தாமணியை கடித்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ராயர் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
சொத்து தகராறில் முதியவரை தாக்கிய தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக கலியபெருமாளுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் கலிய பெருமாளுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கலியபெருமாளின் சகோதரரான மனோகரன் மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகிய இருவரும் இணைந்து வயலுக்கு சென்றனர். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த […]
எள் செடிகளை சாலையில் காய வைத்து விபத்துக்கு காரணமான விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சுவெளி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்நிலையில் சாலையில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை குவியலாகக் குவித்து வைத்திருந்தது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா போக்குவரத்திற்கு இடையூறாக தானியங்களை சாலையில் […]
மாட்டு வியாபாரியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணக்குடி தெற்கு தெருவில் மாட்டு வியாபாரியான செந்தில் என்பவர் வசித்துவருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான பசு மாட்டை செந்தில் 17 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி வாங்கியுள்ளார். அப்போது முன்பணமாக 1,700 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மீதமுள்ள 15 ஆயிரத்து 300 ரூபாயை செந்தில் தரவில்லை […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் கடைவீதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் ராதா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோரைக்குழி தெற்கு தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இதில் மணிகண்டன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டதால் சித்ரா தனது மாமியார் சுசிலாவோடு வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் சுசிலா தனது மருமகளை கடலை செடி பிடுங்குவதற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு சித்ராவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாமியார் மருமகளுக்கு […]
திடீரென காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தினகுடி கிராமத்தில் ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற ராஜீவ் காந்தி மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பாத்திமா வீட்டில் இல்லாததால் ராஜீவ் காந்தி அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் ராஜீவ்காந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாத்திமாவை […]
குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சுவெளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் முத்துவாஞ்சேரி-அரியலூர் சாலையில் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]
உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள சோழமாதேவி கிராமத்தில் மிகவும் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு […]
திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. அதன்பிறகு 3 மணி நேரம் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இந்நிலையில் கடலை அறுவடை செய்யும் சூழலில் இருக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் […]
வியாபாரியின் வீட்டில் தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் அதிகாலை நேரத்தில் வீட்டை பூட்டாமல் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வந்தனர். அப்போது வீட்டில் இருந்த பெட்டி திறந்து கிடந்ததை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதில் […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த முதியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சம்பந்தம் மற்றும் முனியசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவன விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மோகன்ராஜ் 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோகன்ராஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து […]
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பொட்டகொல்லை பகுதியை சேர்ந்த அன்புமணி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அன்புமணியை […]
சைக்கிளை திருடிய குற்றத்திற்காக 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கவரபாளையம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டனின் சைக்கிள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து அவரது தந்தை சங்கரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தென்னூரில் வசிக்கும் 17 மற்றும் 15 வயது சிறுவர்கள் […]
சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள முடிகொண்டான் கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சதீஷ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் ஆண்டிமடம்- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷை அருகில் […]
கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஐம்பொன் சிலைகள் இருக்கும் அறையின் பூட்டை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்தார். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அந்த மர்மநபர் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]
சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் தனியார் ஜவுளிக்கடையில் தமிழ்ச்செல்வன் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பண்ருட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் இருவரும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை பார்த்த சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]
விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட துரைராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த துரைராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துரைராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்து விசாரணை […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான வேல்சாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரன் மற்றும் வேல்சாமி ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரஞ்சித் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ரஞ்சித்தை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 500 […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவகுமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 50 கிராம் […]
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனிவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஏலாக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன் மற்றும் பழனிவேல் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]