கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்சல் ஒன்றை திருடி சென்ற பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கனடாவில் எட்மன்டன் (Edmonton) பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் கதவு மூடப்பட்டிருந்த ஒரு வீட்டின் முன்பகுதிக்கு பேக் மாட்டிக்கொண்டு தலையில் தொப்பி அணிந்தவாறு மெதுவாக நடந்து வரும் பெண், தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் செய்து விட்டு பின் அங்கிருந்த பார்சலை நைசாக எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் […]
Tag: Arrested
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக இணை இயக்குனர் குமார் , நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த […]
கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு லைக்கா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய்யும் , நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதியும் அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைக்கா […]
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இதில் பல அடி உயரத்தில் இருந்து விழுந்த […]
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் கமல் மற்றும் ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் […]
டிக் டோக் வீடியோ பதிவு செய்ய மக்களை முகம் சுழிக்க வைத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் டிக் டாக் எனும் செயலியை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் எனும் கல்லூரி மாணவன் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில் மக்கள்மீது இடித்தும் அவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் நடனமாடியும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் […]
ஸ்பெயின் நாட்டில் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் மாட்டுத் தொழுவத்திற்கு கீழே 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக ஒரு கும்பல் போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த சுரங்க தொழிற்சாலையில் போலீசார் அதிரடியாக சோதனையிட்டு 20 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த போதை சிகெரெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த சமபவம் குறித்து […]
இளைஞர் ஒருவர் பெண் போலீசாரை அவதூறாக சித்தரித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் லால்குடி கீழவீதி மகாமாரியம்மன் கோவிலின் விழாவையொட்டி 16ஆம் தேதி அபிஷேகபுரம் எனுமிடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தும் மக்கள் திரண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதியில் ஆயுதப்படை சேர்ந்த இரண்டு பெண் காவல்துறையினர் நடந்து […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. […]
ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் கூடலூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி திடீரென காணாமல் போனதை தொடர்ந்து பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தேவர்சோலை காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மாணவியை தேடி கண்டுபிடித்து உள்ளனர். கண்டுபிடித்த மாணவியிடம் போலீசார் நடந்தது பற்றி விசாரணை மேற்கொண்ட பொழுது மாணவி வீட்டின் அருகே […]
மதுபோதையில் மோட்டார் சைக்கிள், வைக்கோல் மற்றும் செடி படப்புகளை எரித்து குடிமகன் அட்டகாசம். சங்கரன்கோவில் அருகில் இருக்கும் மேலநீலிதநல்லூர் சேர்ந்தவர் ஜெயராமன். நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய இவர் எப்போதும் போல் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மது போதையில் இருந்த காரணத்தினால் ஜெயராமின் மோட்டார் சைக்கிள் என்றும் பாராமல் நெருப்பு வைத்து எரித்துள்ளார். இதில் ஜெயராமனின் […]
பெருங்கொளத்தூரில் வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையர்கள் இருவரிடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை தாம்பரம், புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகளவில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால், காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, நேற்று பீர்க்கன்காரணை காவல்துறையினர் பெருங்களத்தூரில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்களின் […]
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு திருடப் போன திருடன் அங்கே தூங்கியதால் மறுநாள் காலை போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புக்கு திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கே தூங்கியதால் போலீசிடம் சிக்கிய சம்பவம் மும்பையில் நடந்தது. மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஒருவர் அதே குடியிருப்பு பகுதியில் மற்றொரு வீட்டை வாங்கியுள்ளார். தனது புதிய வீட்டில் சில பொருட்களை மட்டும் வைத்துவிட்டு தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காலை எழுந்தபோது புதிய […]
கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பொறியியல் கல்லுரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் (Hubli) கேஎல்இ(kle) பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதன்படி காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள், பாகிஸ்தானிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த 3 மாணவர்களையும் அம்மாநில போலீசார் கைது […]
சமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக மிரட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் பிரபல அரசியல் கட்சி பிரபலங்களின் பெயர்களில் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார், மோசடி நபர் ஒருவர். பின்னர் அப்பெண்களின் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு, அதை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடப்போவதாக, அந்த நபர் அப்பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், மத்திய […]
மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் இருக்கும் கக்கன்ஜி பகுதியை சேர்ந்தவர் வல்லாளகண்டன். கங்கைகொண்டான் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இருக்கும் மாணவியின் வீட்டுக்கு பேட்டையை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். மாணவியிடம் வல்லாளகண்டன் பேசிப் பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவிக்கு புதிதாய் கைபேசி ஒன்று வாங்கி கொடுத்து பழக்கம் நீடித்துள்ளது. […]
அமெரிக்காவில் திருடன் ஒருவனை சாலையில் சென்ற இளைஞர் டிராலி தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Peachtree )நகரில் உள்ள ஒரு கடையில் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் விரட்டி கொண்டு வந்தனர். அப்போது சாலையில் ஒரு இளைஞன் டிராலி வண்டியை பொருள்களுடன் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.போலீசார் பிடிக்க துரத்தி வருவதை பார்த்த அந்த இளைஞன் திடீரென […]
TNPSC தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கடந்த 7ஆம் தேதி பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அறிமுகப்படுத்தியது. அதில் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை அதனைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அமுலாக்கியுள்ளது. அதில் , குரூப் […]
போலி நகை வைத்து பணம் மோசடி செய்த வாங்கி ஊழியரும் கைது ஆலந்தூர் திருவொற்றியூரை சேர்ந்த சுப்பிரமணி. தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணிபுரியும் வங்கியில் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ராஜம்மாள் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாள் நகைகளை அடகு வைத்து ரூபாய் 18 லட்சம் கடன் பெற்றுள்ளார். ராஜம்மாள் கொண்டுவந்த நகைகளை மதிப்பீடு செய்து தொகையை நிர்ணயம் செய்தவர் சுப்பிரமணி. இந்நிலையில் வங்கியில் இருக்கும் […]
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த கலாதரன், குடும்பத்தினருடன் திருப்பூரில் தங்கி இருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பனியன் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்சினையின் காரணமாக மனைவி குழந்தைகளை கலாதரனை விட்டுப் பிரிந்து கேரளாவிற்கு திரும்பிவிட தனிமையில் வசித்து வந்துள்ளார் கலாதரன். இந்நிலையில் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் […]
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கைது!
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜம்மு காஷ்மீர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்ததாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஜம்மு காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, ஒருவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், பயங்கரவாதியின் பெயர் தவுஃபிக் அகமது பட் எனவும்; அவர் மோங்கமா பகுதியைச் […]
சொத்து தகராறில் விவசாயி விவசாயி மனைவியையும் பெண் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் உள்ள கிருஷ்ணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வித்யா தம்பதியினர்.. முருகேசனின் அண்ணன் மனைவி சித்ரா. சித்ராவின் கணவரும் 3 மகன்களும் இறந்துவிடவே மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சித்ரா. இந்நிலையில் சித்ராவிற்கு முருகேசனிர்க்கும் சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. தகராறின் காரணமாக கோபம்கொண்டு சித்ரா முருகேசனை கொலை செய்துவிட முடிவு செய்து இரவு முருகேசனும் விஜயாவும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் […]
அம்பத்தூரில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரவு காவலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பட்ரவாக்கத்தை சேர்ந்த இரவு காவலாளி ஒருவர் பிப்ரவரி 4ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமணி வழக்குப்பதிவு செய்து […]
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதியை TNPSC அறிவித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் […]
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். TNPSC முறைகேடு தொடர்பாக இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் குரூப்-4 தேர்வில் 19 பேரும் , குரூப் 2-ஏ தேர்வில் 20 பேரும் , விஏஓ தேர்வில் 3 பேரும் என 42 பேர் கைதாகியுள்ள நிலையில் 43ஆவதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓம்காந்தனை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்த போது தனக்கு யாரெல்லாம் உதவி இருக்கிறார் என்ற பட்டியலை […]
கொலை கொள்ளை செய்து வந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம் அமராவதி பட்டினத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் ரவுடியான இவர் மீது சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் கருணாகரனை கைது செய்து வேலூரில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொலை, […]
பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் தீக்ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த ஆறு நாட்களாகக் காணவில்லை என்று, அவரது தாய் லதா திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் கவிதா, பந்தநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா ஆகியோர் கடந்த ஆறு நாட்களாக பத்துக்கும் […]
கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரத்தையடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது. இதையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பல்லாவரம் காவல் […]
காளவாசல் சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடைய நபர்களை அதிரடியாகக் கைது செய்தும் வருகிறது. இந்நிலையில் மதுரை காளவாசல் சந்திப்பு அருகேயுள்ள வணிக வளாகத்தின் முன்புறம் 17வயது சிறுவன் கஞ்சா விற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து எஸ்எஸ் காலனி காவல் ஆய்வாளர் […]
மன்னிப்பு கேட்க வந்தவரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நம்மாழ்வார்பேட்டை கே.எச் சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் கடந்த 4ஆம் தேதியன்று குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அன்று மாலை தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் சிலர் அவரை பிடித்து கட்டிபோட்டுள்ளனர். பின்னர் வசந்தகுமாரை தாக்கிவிட்டு அவர் […]
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (34). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஆட்டோவில் வந்த பன்னீர்செல்வம் கலைவாணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. உடனடியாக கலைவாணி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தைப் பிடித்து தர்ம […]
பலநாள் தேடி வந்த பிரபல ரவுடியை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஒருவர் இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ராமநாதபுரம் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் நெல்லை மாவட்ட காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகளும் இருந்துள்ளன. மேலும் அந்த ரவுடிக்கும் கூலிப்படையினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர். பல நாள் முயற்சி செய்த […]
திருவள்ளூர் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், பொதுமக்கள் அடிக்கடி நடந்து செல்லும் முக்கிய சாலையில் தனது நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ ஒன்று, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அஜித்குமார், மற்றும் கலைவாணன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் […]
அனுமதியின்றி மது விற்ற தாக கூறி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பெண்கள் உட்பட 3 வேற கைது செய்துள்ளனர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இண்டூர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்தத் தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அனுமதி இல்லாமல் மது விற்ற மகேஸ்வரி கல்யாணி மற்றும் அண்ணாதுரை ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களையும் […]
கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவான மகன் கைது செய்யப்பட்டார். இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். […]
டிஎன்பிஎஸ்சி_யில் புதிய மாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் விடைத்தாள் நகல்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் விரல் ரேகை , ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மை சரிபார்க்கப்படும். முறைகேடு முறைகளை கண்டறிந்து தடுக்கும் விதமாக உயர் தொழில்நுட்ப தீர்வு நடைமுறைக்கு வருகிறது. இணையவழி […]
குரூப் 4 முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகுமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று […]
குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமாரை காவலில் எடுக்க கோரிய சிபிசிஐடி மனு மீது 2.30 மணிக்கு தீர்ப்பு வர இருக்கின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க […]
குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார் விசாரணையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நாளை ( இன்று ) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. […]
குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல மதுரை மாநகராட்சியில் படிக்கக் கூடிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து டிஎன்பிஎஸ்சிக்கு எழுதியுள்ள கடிதம் பல்வேறு […]
தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை கேரள மாநில காவலர்கள் கைது செய்தனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளியில் தனது குழந்தையை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சேர்த்தார். இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த முகமது இன்சாஃப் என்பவருடன் முகநூலில் நண்பராக இருந்துவந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை சந்திக்கச் சென்ற அந்தப் பெண், மலப்புரத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது, […]
ஓசூர் அடுத்து யூ.புரம் கிராமத்தில் கஞ்சா விற்றுவந்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் மாணவர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பனை செய்துவந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், கெலமங்கலம் காவல் துறையினர் யூ.புரம் கிராம பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக சிறு சிறு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சாவை நிரப்பி […]
மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 5 வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக […]
குரூப் 4முறை , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என்று இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிதோடு, நாளை காலை எழும்பூர் […]
குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி , பூபதி ஆகிய இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குரூப்-2 ஏ தேர்வில் கைதாகி இருக்கக்கூடிய காவலர்கள் சித்தாண்டி பூபதி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இரண்டு பேரும் சென்னை புதுப்பேட்டையில் இருக்க கூடிய ஆயுதப்படை காவலர்கள் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். சித்தாண்டி 2006ஆம் ஆண்டிலிருந்து காவல்துறைப் பணியில் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் சென்னைக்கு […]
TNPSC முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TNPSC குரூப் 4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிக இருந்து வந்த ஜெயக்குமார் சற்று முன்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்த அவரை தேடி சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். […]
TNPSC முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு, அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் தலைமறைவாகினார். இதனையடுத்து அவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் லேப்டாப் , பென்ட்ரைவ் உள்ளிட்ட பல்வேறு […]
குரூப் 2-A , குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார். குரூப் 4 தேர்வு முறைகேடு குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு இந்த இரண்டு வழக்குகிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஜெயக்குமார் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீஸார் அறிவித்திருந்தார்கள். நேற்று கேரளா , ஆந்திரா , கர்நாடகா என மூன்று […]
குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்விலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக 33 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் […]
குரூப்-2ஏ தேர்வு முறைகேடு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் குரூப் 4 , குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய தருணத்தில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைதாக்கியுள்ளார். நேற்று காலவர் சித்தாண்டி பூபதி கைது செய்யப்பட்ட நிலையில் 3ஆவது நபராக […]