Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊராட்சித் தலைவர் பதவி போட்டி… வங்கி மேலாளர் கொலை… 7 பேருக்கு சிறை..!!

ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்க பில்லையும் சேர்த்து கட்டு… தொழிலதிபரை தூப்பாக்கி முனையில் மிரட்டிய சினிமா விநியோகஸ்தர்..!!

தாங்கள் மது அருந்தியதற்கு பணத்தை கொடுக்குமாறு தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த். இவர் கட்டட உள்கட்டமைப்பு பணி செய்து வருகிறார். இவர் தொழில் சம்மந்தமாக பேச தனது நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி வழக்கம்போல் தனது நண்பர்களை சந்திக்க ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது..!!

15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பறக்கும் ரயில் நிலையம் அருகில் 15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள், அண்ணா சதுக்கம் போலீசாருடன் அங்கு சென்று காண்காணித்த போது சிறுமியுடன் ஒருவர் சுற்றித்திரிவது தெரிந்தது.அந்த நபரை பிடித்து விசாரித்த போது […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா கொலை வழக்கு… காட்டிக்கொடுத்த டோல்கேட் சிசிடிவி காட்சிகள்…!!

பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து பின் கொலை செய்த 4 குற்றவாளிகளை தெலங்கானா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த பிரியங்கா தன் தங்கை பவ்யாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வத்தலக்குண்டில் விடுதிகளில் முறைகேடாக தங்கியிருந்த 6 ஜோடிகள் கைது!

 வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.இந்தத் தனியார் விடுதிகளில் முறைகேடாக ஆண்கள் சிலர் பெண்களுடன் தங்கி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலக்குண்டு தனியார் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை… பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையைக் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து காபி பவுடர் போல் கஞ்சா… விற்பனையாளர் கைது..!

வெளிநாடுகளிலிருந்து காபி பவுடர் என ஆன்லைன் மூலம் உயர் ரக கஞ்சாவை வரவழைத்து விற்பனை செய்து வந்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து காபி பவுடா், பதப்படுத்தப்பட்ட மூலிகைகள் என்ற பெயரில் உலர் கஞ்சா பவுடா், உலர் கஞ்சா இலைகள் ஆன்லைன் மூலமாக பார்சல்களில் சென்னைக்கு வந்தன. அடிக்கடி இவ்வாறு வெளி நாடுகளிலிருந்து வரும் பார்சல்களை தபால் துறை, புலனாய்வுத் துறையினர் சோதித்துள்ளனர். காற்று புகாத வகையில் மிக நேர்த்தியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டவர் கைது… நகைகள் பறிமுதல்.!!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகை, கைப்பேசிகளை திருடி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகைகள், கைப்பேசிகள் திருடுபோவதாக சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டு வந்தனர். இந்த நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை எண் 6-ல் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது திருப்பத்தூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது..!!

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெங்களூரு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மண்ணூர்பேட்டையிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அதில் மருதுராஜ் (35), பிரபாகரன் (35) ஆகிய இருவரும் பெங்களூருவிலிருந்து மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ பாவம்… 4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற ஓலா ஓட்டுநர்… விலங்குகள் காப்பகப் புகாரில் கைது..!!

புவனேஷ்வரில் சாலையிலிருந்த 4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஓலா ஓட்டுநரை ஒடிசா மாநில காவல் துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹு சரண் கிரி. இவர் ஓலா கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷைலஸ்ரீ விஹார் பகுதியில் சாலையில் அதிவேகமாக காரில் சென்றுள்ளார். அப்போது, சாலையிலிருந்த நான்கு நாய்க் குட்டிகள் மீது இரக்கமின்றி காரை ஏற்றியுள்ளார். இதைப் பார்த்த காவலர் அவரைத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது..!!

பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை அசோக்நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு சகஜமாக கஞ்சா கிடைப்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எம்ஜிஆர் நகர், அசோக்நகர் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியூரில் கணவன்… மனைவிக்கு உணவில் மயக்க மருந்து… சீரழித்த காம கொடூரர்கள்..!!

விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருகம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர். தச்சுவேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இதற்கிடையே, சங்கர் இரண்டு மாதங்கள் தச்சுவேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்..!!

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது.  சென்னை பள்ளிக்கரணையில் சமீபத்தில் பேனர் விழுந்து லாரி மோதிய  விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து இவ்வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக விசாரித்து வருகின்றது. இவ்வழக்கில்  அதிமுக பிரமுகர் ஜெயகோபால் உறவினர் மேகநாதன் போலீசில் சரணடைந்தார். பின்னர் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை தீவிர தேடுதலுக்கு பின்  போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதின்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் […]

Categories
சென்னை தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் மூலம் தொழிலதிபரை ஏமாற்ற முயற்சி… இருவர் கைது.!!

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபரை ஏமாற்ற முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலசுப்பிரமணியம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நிலம் வாங்க முடிவெடுத்து, கமலக் கண்ணன் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை அணுகியுள்ளார். இதனையடுத்து கோடம்பாக்கத்தில் 1.25 கிரவுண்ட் நிலம் விற்பனைக்கு வருவதாகக் கமலக்கண்ணன் கூறியுள்ளார். நிலம் தொடர்பான ஆவணங்களைத் தருமாறு தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் கேட்டுள்ளார். அப்போது முகமது பாட்ஷா என்பவரது நிலம் எனக்கூறி, ஆவணங்கள் சிலவற்றைக் கமலக் […]

Categories
திருச்சி புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிறந்து 21 நாள்களே ஆன குழந்தை… “ரூ 1,15,000 க்கு விற்பனை “… 3 பேர் அதிரடியாக கைது..!!

மணப்பாறையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை 1,15,000  ரூபாய்க்கு விற்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம், இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. மேலும், மூன்றாவது முறையாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விஜயா குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து திருச்சி மருத்துவமனையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை பெற்றோரின் உதவியுடன் செவிலி, தரகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னை ‘ரவுடி’ காக்கா தோப்பு பாலாஜி கைது.!!

தலைமறைவாக இருந்த ‘ரவுடி’ காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்துபோது காரில் சென்ற ‘ரவுடி’ காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்துள்ளனர்.தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது இவர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைது செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியை எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இவர், மீது ஏற்கெனவே 25 கொலை வழக்குகள் உட்பட 50வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மேட்ச் பிக்சிங் – 2 இந்திய கிரிக்கெட் வீரர்கள் கைது ….!!

கர்நாடக பிரீமியர் லீக் டி20 தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட இரண்டு கிரிக்கெட் வீரர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளைப் போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் டி20 கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 தொடர்தான் கர்நாடக பிரீமியர் லீக். இந்தத் தொடரின் கடந்த சீசனில் மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தத் தொடரின் […]

Categories
திருச்சி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே பயங்கரம்… விடுதி காப்பாளரை கொலை செய்த மாணவன்..!!

திருச்சி தனியார் வேளாண் கல்லூரி விடுதி காப்பாளரை மாணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் அப்துல் ஹக்கீம்(20). இவர் துறையூர்- முசிறி சாலையில் உள்ள கண்ணனூர் பகுதியில் இயங்கும் இமயம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அப்துல் ஹக்கீம், கடந்த சில நாள்களாக கல்லூரி, விடுதிக்கு வராமல் இருந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குட்கா வைத்திருந்த இருவர் கைது.!!

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லிஸ் சாலையில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்தப்பகுதியில், சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ. 5,000 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் நாகேஷ், ராஜ்குமார் துபேவை கைது செய்தனர்.

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதி பாக்தாதியின் சகோதரி கைது….!!

 ஐ.எஸ்., ஐ.எஸ். பயங்கர அமைப்பின் தலைவரும், அமெரிக்க ராணுவப் படையால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியுமான பாக்தாதியின் சகோதரி கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள சிரியாவின் முக்கியப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் களம் கண்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அமைப்பின் தலைவர், அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த நிலையில் அவரின் சகோதரி 65 வயதான ராஸ்மியாவை துருக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் செந்திலிடம் மோசடி செய்தவர் கைது.!!

நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் அருகே உள்ள பாஸ்கர் காலனி மூன்றாவது தெருவில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான 10 அறைகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதை கடந்த 2013ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து “சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்” நடத்திவந்தார். இந்நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை […]

Categories
மாநில செய்திகள்

இழப்பீடு ”ரூ 1,00,00,000 வேணும்” அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

சுபஸ்ரீ மரணத்திற்கு 1 கோடி இழப்பீடு வழங்க தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல் பேனர் தொடர்பான டிராபிக் ராமசாமி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றதில் சுபஸ்ரீ வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை  , அதன் விசாரணை  தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் சுபஸ்ரீயின் ரவி என்பவர் சுபஸ்ரீ மரணத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் , சம்பந்தப்பட்ட பள்ளிக்கரணை காவல் துறையினர் மீது […]

Categories
மாநில செய்திகள்

இனி பேனர் வைக்க மாட்டோம்…. அதிமுக பிரமாண பாத்திரம் தாக்கல் ….!!

அதிமுக தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. விதிமீறல் பேனர் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சுவாதி மரணம் தொடர்பாக அனைத்து விளக்குகளையும் சேர்த்து உயர் நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் இதன் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது விதிமீறல் பேனர் வைத்தது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? சுபஸ்ரீ விசாரணை குறித்து என்ன முன்னேற்றம் ? என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.15,000 மதிப்புள்ள கள்ளநோட்டுகள்…. ரோந்து பணியில் சிக்கிய மாணவர்கள்..!!

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கள்ளநோட்டுகளுடன் சுற்றித் திரிந்த 3 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 3 மாணவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்களது கையில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பேரையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான கீர்த்திகான், ஈஸ்வரன், மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன லவ் பண்ணு இல்லன்னா அவ்வளவுதான்… இளம்பெண்ணை மிரட்டிய இளைஞருக்கு சிறை..!!

தன்னுடன் பணிபுரியும் இளம் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, தாக்கிய இளைஞரை காவலர்கள் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை அருகே உள்ள சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளம் பெண் ஒருவர் ஊழியராகப் பணியாற்றிவந்தார். அதே நிறுவனத்தில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித்(24) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். ரஞ்சித் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அந்தப்பெண் காதலை ஏற்க மறுத்து அவரை கண்டித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கத்தியால் மாணவனைக் கொல்ல துரத்திய இளைஞன்…. மடக்கிப் பிடித்த ரயில்வே போலீசார்..!!

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கத்தியை கையில் வைத்துக்கொண்டு மாணவனைக் கொல்வதற்காக துரத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(19). இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீதரன் கல்லூரியை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஷாகுல் ஹமீது (20) என்பவர் அவரை கத்தியால் குத்த துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், […]

Categories
மாநில செய்திகள்

”பேனர் வழக்கில் ஜாமீன் கொடுங்க” விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் …!!

பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ மரண வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்.24க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T  ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

மருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …!!

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T  ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ மரணத்தால் ”1 பேனரும் வைக்காத அதிமுக” மக்களின் பாராட்டு குவிகிறது ….!!

சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : ஜெயகோபாலின் மைத்துனர் கைது.!!

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.  சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட்டம் தேன்கனிக்கோட்டையில் […]

Categories
மாநில செய்திகள்

பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டதா…? தெரியாது….. 4 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்…..!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

”பேனர் வைத்தது தவறு தான்” ஒத்துக்கொண்ட அதிமுக பிரமுகர்……!!

பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகோபால் பேனர் வைத்ததை தவறு என்று ஒத்துக்கொண்டார் . அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா குறித்து சாலையோரத்தில் வைத்திருந்த பேனர்  அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது பின்னல் வந்த லாரி மோதி அவர் மீது ஏறி சுபஸ்ரீ சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெயகோபால் […]

Categories
மாநில செய்திகள்

கொடி கட்டுனீங்களா ? ”உங்களுக்கும் ஜெயில் தான்” மேலும் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்….!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

”ஜெயகோபால் ஜெயிலுக்கு போ” நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை 14 நாட்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பேனர் விவகாரம் : ”மேலும் 4 பேர் கைது” ரகசிய இடத்தில வைத்து விசாரணை….!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது பேனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பலியான விவகாரம் : பேனர் வைத்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது..!!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.  கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..!!

சென்னையில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை புகாரின்படி போலீசார் கைது செய்தனர்.    சென்னை எழும்பூரில் உள்ள  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பெண் கடந்த 30-ஆம் தேதி காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் காவல் துறையினர் பல இடங்களில் தேடி இறுதியில் திருப்பூரில் பெண்ணை மீட்டனர். இந்நிலையில் பெண்ணை கடத்தியதாக கூறப்படும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி  என்பவர் கடத்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்… “பணியின்போது தகராறு”… 5 பேரை கத்தியால் குத்திய நபர் கைது..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பணியின்போது தகராறு ஏற்பட்டதில் சக ஊழியர்கள் 5 பேரை கத்தியால் குத்திய நபரை போலீசார்  கைது செய்தனர்.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டல்லாஹஸ்ஸி (Tallahassee) நகரத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் அன்ட்வான் பிரவுன் (Antwann Brown) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பணியின்போது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சக ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வெளியே சென்ற பிரவுன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து […]

Categories
தேசிய செய்திகள்

”பப்ஜி விளையாட எதிர்ப்பு” தந்தையை கொன்ற மகன்….!!

பப்ஜி கேம்_மை விளையாட எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரக்கம் , கருணை , மன்னிப்பு , அன்பு போன்றவையே மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள் என காலம் காலமாக அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிகம் வரை அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனால் இந்தக் குணங்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கொடூர மனதோடு விளையாடுவது தான் பப்ஜி. இந்த குணம் இருந்தால் தான் இந்த விளையாட்டை ஜெயிக்க முடியும். நீங்கள் பிறரை கொலை செய்வது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”13 வயது சிறுமி கர்ப்பம்” தாயின் இரண்டாவது கணவர் கைது…!!

கன்னியாகுமரியில் தாயின் இரண்டாவது கணவர் 13 வயது சிறுமியை கற்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார் 35 வயதான அந்தப் பெண். அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். அருகில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உங்க ATM கார்டை தாங்க…. நான் எடுத்து தர்ரேன்… முதியவரை ஏமாற்றிய கல்லூரி மாணவன் கைது.!!

தேனி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி விவசாயை ஏமாற்றிய கல்லுரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.     தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  விசுவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற விவசாயி அங்குள்ள  ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் அவர் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த நேரத்தில்  அந்த ஏடிஎம்க்கு  கல்லூரி வாலிபர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார். கல்லுரி மாணவர் நான் உங்களுக்கு விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி அவரிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஏர்போர்ட்டில்…. “நடிகர் சூர்யா போல வேடமிட்ட இளைஞர்”…. நியூயார்க் செல்ல முயன்று சிக்கினார்..!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வயதான வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதன்படி  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரிக்சிங்  என்ற நபர் வீல்சேரில் அங்கு வந்தார். வெள்ளை தாடி, தலையில் தலைப்பாகை மற்றும் கண்ணாடி உடன் காட்சி அளித்துள்ளார். தனக்கு 81 வயது என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம்  நடக்க முடியாது என்று கூறி விமான நிலையத்துக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபேஸ்புக்கால் விபரீதம் ” 10 -ஆம் வகுப்பு மாணவி கொலை… இளைஞர் கைது..!!

தெலுங்கானாவில் பேஸ் புக் நண்பரான  10 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷினி மாணவி பேஸ்புக் மூலம் 27 வயதான நவீன் ரெட்டி என்பவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த 27-ஆம் தேதியன்று சங்கரய்ய பள்ளி குடியிருப்புக்கு அருகே இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

”மாற்றுத்திறனாளிகள் போராட்டம்” அனைவரையும் கைது செய்தது போலீஸ்…!!

சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மாற்றுத் திறனாளிகள் எங்களுக்கான வேலைவாய்ப்பு , இடஒதுக்கீடு  உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் சென்னை எழிலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அதில் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தி முழுமையாக அமுல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டுமென்று முழக்ககங்களை முழங்கினார். போராட்டம் நடத்தியவர்களிடம்  துணை ஆணையர் சுதாகர் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்கார்கள் உடன்படாத காரணத்தால் அனைவரையும்  காவல்துறையினர் கைது […]

Categories
உலக செய்திகள்

“சவப்பெட்டியில் 300 கிலோ கஞ்சா” கார் ஓட்டுநர் கைது..!!

கொலம்பியாவில் சவப்பெட்டியில் வைத்து 300 கிலோ கஞ்சா கடத்திய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.  கொலம்பிய நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில்  விளைவிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கு சட்டத்திற்கு விரோதமாகவும் சிலர் கஞ்சாவினை பயிரிட்டு அமெரிக்கா  உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். அதன்படி சமீபத்தில் போலீசார் பாம்லோனா – குக்கூட்டா (ucuta) சாலையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். இதற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் தகராறு” குடிபோதையில் நண்பனை கொலை செய்த நண்பர்கள்.!!

திருச்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட்  தகராரை குடிபோதையில் நண்பர்களுக்குள் பேசும்போது 3 பேர் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர். திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும்  “காக்கா” என்று அழைக்கப்படும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கடந்த  7-ந்தேதி ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை பார்க்க தியேட்டர் சென்றுள்ளனர். அங்கே டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருவரும் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கஞ்சா போதையில்” பள்ளி குழந்தைகள் கடத்தல்…. 3 மணி நேரத்தில் இளைஞன் கைது…!!

திருவள்ளுர் அருகே கஞ்சா போதையில் இரண்டு குழந்தைகளை கடத்தி சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  திருவள்ளூர் மாவட்டத்தின் ஏரி மேட்டை சேர்ந்த வீரன் என்பவரது பிள்ளைகளான தனுஸ்ரீ, அருண் ஆகியோர் நேற்று வழக்கம் போல்  அனுப்பம் பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் தான் உங்களை பள்ளியில் இறக்கி விடுகிறேன் என்று கூறி லிப்ட் கொடுத்துள்ளார். அதை நம்பி அந்த இரு குழந்தைகளும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியை 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி கைது..!!

கோவையில் 16 வயது  சிறுமியை 4 நாட்களாக  பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.  கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏரிமேடு பகுதியை சேர்ந்த  சிறுமி (16 வயது) கடந்த 18-ஆம் தேதி காணாமல் போனார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தெருவான […]

Categories
உலக செய்திகள்

20 ஆண்டுகள் ”வேலையால் வந்த வினை” சிக்கிய கொலை குற்றவாளி…!!

வேலைக்கு விண்ணப்பித்ததால் 20 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கான குற்றவாளி சிக்கி கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998_ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டின் புளோரிடா நகரில் 68 வயதான மூதாட்டி சோண்ட்ரா  மர்மமான முறையில் ஒரு கடையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.இந்த கொலைக்கு என்ன காரணம் , யார் காரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இரத்த மாதிரி , கைரேகை என துப்புதுலங்கியும் முக்கியமான ஆதாரம் ஏதும் கிடைக்காமல் கடைக்கு ஒரு நபர் வந்ததற்கு பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தவறான உறவால் ஏற்பட்ட விபரீதம்…. காதலனோடு சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி…!!

கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.  மதுரையை அடுத்துள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரிடம் ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தென்னரசு மனைவி விஜயலெட்சுமிக்கும்  சரவணனுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது.தனது மனைவிக்கும் சரவணனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதை அறிந்த சரவணன் அவனை வேலையிலிருந்து நீக்கி யுள்ளார். இதனால் […]

Categories

Tech |