அரசியல் – நாட்டின் ஜனநாயகத் தூண்களின் முதலாவதும் முக்கியமானதும் ஆகும். அரசியலே அரசாங்கத்தையும், ஆட்சியையும் முடிவு செய்கிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும், மக்களின் ஒவ்வொரு அசைவிலும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. இப்படி மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய, நாட்டின் நடப்பை நிர்ணயிக்க கூடிய அரசியலை எத்தனைபேர் மதிப்புமிக்க ஒரு சேவையாக பணியாற்றி கருதுகின்றனர். அதிகாரத்தின் மேல் கொண்ட பயத்தாலும் தன் மேல் கொண்ட தீராத தாகத்தாலும் அரசியலை ஒதுக்கி வைத்து பார்வையாளர்களாகவே பலர் இருந்துவிட்டு போக பார்க்கின்றனர் காரணம் எதுவாக இருந்தாலும் […]
Tag: Articles
தலைமுறைகள் தேய்வதில்லை…!!
” இன்றைய இளைஞர்கள் ஆடம்பரத்தையே விரும்புகின்றனர்: பெரியவர்களை மதிப்பதில்லை: பெற்றோருடன் வாதிடுகின்றனர்: ஆசிரியர்களை அச்சம் அடையச் செய்கின்றனர்” – இவை அனைத்தும் நமது இளைஞர்களை பற்றி யாரோ இப்போது கூறிய குற்றச்சாட்டுகள் அல்ல கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நாம் அனைவரும் போற்றுகின்ற கிரேக்க சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதாக சுட்டப்படுகிறது. சாக்ரடீஸ் ‘ஏன்’ என்று கேள்வி கேட்டு அறிந்த பின்னரே எதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் எனக் கூறிய மாபெரும அறிஞர். இளைஞர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க முயன்றதற்காகக் குற்றம் சாட்டப்பட்டு, […]
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 – ஜூலை 27, 2015) பொதுவாகடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில்விண்வெளி பொறியியலும் படித்தார். கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும்(DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை […]
இளைய இந்தியா பலமா ? பாரமா ?
பல ஆண்டுகளாக இந்தியாவின் பெரும் சுமையாக, பிணியாகக் கருதப்பட்டது. அதன் மக்கள் தொகை .மண்ணுக்கும் மரம் பாரமா என்ற எண்ணம் போய் மக்கள் தொகை நாட்டுக்கு பாரம் என்ற எண்ணம் உருவானது. பாரத்தைக் குறைக்கவே ‘நாம் இருவர் நமக்கு இருவர்” போன்ற திட்டங்கள் உருவாகி அது ,நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று உருமாறி பின்னர் மொத்த குடும்பத்திற்கு ஒருவர் போதுமே என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.அப்படி பாரமாக இருந்த மக்கள் தொகை என்னும் சுமை இப்பொது இளைய இந்தியா […]