அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த நாகநாதன் என்பவருடைய மகன் ஹரிஷ் பாபு. இவர் அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று காலை வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவெளியில் விடுதிக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் வகுப்பிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]
Tag: aruppukkottai
சின்னங்கள் குளறுபடியால் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]
மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலா தேவி சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபடுத்த முயன்றதாக அக்கல்லூரியின் பேராசியை நிர்மலா தேவியை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை பெண்கள் தனி சிறையில் இருந்து விடுதலையான நிர்மலா தேவி இரண்டு வாய்தாவுக்கு செல்லாததால் மீண்டும் கைது செய்யப்பட்டு தனிசிறையில் நவம்பர் 25ஆம் தேதி அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று நிர்மலா […]
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் கதறி அழதபடி வெளியேறினார். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக அவரின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் நிர்மலா தேவிக்கு நீதிமன்ற பிணை கிடைத்தது. தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் […]
அருப்புக்கோட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பெண்ணை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி கட்டக்கஞ்சம் பட்டியில் ஈஸ்வரி என்ற பெண் குடும்பத்தோடு வசித்து வந்தார் . இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் என்பவர்க்கு இடையே நெருக்கமாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்காள ஈஸ்வரி அடைக்கலத்திடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பணம் […]